Ad Widget

வித்தியா கொலை வழக்கு: சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கைது

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலைச் சம்பவத்தின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ் குமாருக்கு, தப்பிச் செல்வதற்கு உதவிய குற்றச்சாட்டில் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு அறிவித்துள்ளது.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டப் பிரிவு பேராசிரியர் தமிழ்மாறனின் கோரிக்கைக்கமைய பிரதான சந்தேகநபரை, லலித் ஜயசிங்க விடுவித்ததாக அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.

அதன்படி, யாழ் மாவட்ட பொறுப்பதிகாரியாக செயற்பட்ட சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் இன்று (சனிக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார்.

2015ஆம் ஆண்டு மே மாதம் வித்தியா படுகொலை செய்யப்பட்டிருந்த நிலையில், இரண்டு வருடங்களின் பின்னர் யாழ். உயர் நீதிமன்றில் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது பேராசிரியர் தமிழ்மாறன் சாட்சி வழங்கியிருந்தார்.

அதன்போது சுவிஸ் குமார் விடுக்கப்பட்டமை தொடர்பில் லலித் ஜயசிங்கவுக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்திருந்த நிலையில் லலித் ஜயசிங்கவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல், தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Posts