தீவக வலய கல்விப்பணிப்பாளராக து.லெனின் அறிவழகன் அவர்கள் நேற்றைய தினம் (24.06.2026) புதன்கிழமை கடமைகளை தீவக வலயக் கல்வி அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.

இவர் வவுனியா வடக்கு வலயக் கல்விப் பணிப்பாளராக சிறப்பாக கடமையாற்றி இடமாற்றம் பெற்று தீவக வலயத்தில் கடமைகளை பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.