- Monday
- September 1st, 2025

வடக்கு மாகாண முதலமைச்சர் நிதியத்தினை வழங்காவிட்டால், ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமரது செயலகத்தினை முடக்கி முற்றுகைப் போராட்டத்தினை மேற்கொள்ளவுள்ளதுடன், அரசாங்கத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வோம் என வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளார். யாழில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த சந்திப்பில் அவர் மேலும்...

இலங்கைக்கு ஐந்து நாள் பயணமாக வருகை தந்துள்ள ஐநாவின் மனித உரிமைகளுக்கும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்குமான சிறப்பு பிரதிநிதி பென் எமர்ஸன் நேற்று புதன்கிழமை மாலை வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையிலான நீதிபதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். பயங்கரவாதத் தடைச்சட்ட நடைமுறையில் மனித உரிமை நிலைமைகள் எவ்வாறு இருக்கின்றது என்பதை நேரடியாகக் கண்டறிவதற்காகவே...

“தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பழிவாங்குவதற்காகவே தான் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாகக் கூறி வருகின்றார். இதன் மூலம் கிழக்கு மாகாணசபைக்கு பெரும்பான்மையாகத் த.தே.கூலிருந்து எவரும் தெரிவு செய்யப்படக்கூடாது என்ற வக்கிரப் போக்கு மாத்திரமே கோடிட்டுக் காட்டப்படுகின்றது” என, இலங்கை தமிழரசுக் கட்சியின் பட்டிருப்புத்தொகுதி தலைவர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்....

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களால் இயன்றளவு பங்களிப்புக்களை செய்திருக்கின்றார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி கிளையினருடனான சந்திப்பு நேற்று (புதன்கிழமை) கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் இடம்பெற்றது. குறித்த சந்திப்பில் கலந்து கொண்டு, கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு...

காணாமல் போனவர்கள் விடயத்தில் நாங்கள் இனி அரசுடன் கடுமையாக நிற்போம், எனவும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயம் மற்றும் மக்களின் ஏனைய பிரச்சினைகள் தொடர்பில் நாங்கள் எல்லோரும் கடவுளை கூம்பிடுவோம் எனவும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர் கட்சி தலைவருமான இரா. சம்மந்தன் தெரிவித்துள்ளார் கிளிநொச்சிக்கு இன்று புதன் கிழமை பயணம் செய்த அவர் கிளிநொச்சி கந்தசுவாமி...

மகாநாயக்கர்களை சந்திப்பதற்கு, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எடுத்துள்ள தீர்மானம் மகிழ்ச்சியளிப்பதாக அஸ்கிரிய பீடத்தின் தலைமைச் செயலாளர் வண.மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார். புதிய அரசியல் சாசனமொன்று அவசியமில்லையென பௌத்த உயர் பீடத்தின் மகாநாயக்கர்கள் தெரிவித்துள்ள நிலையில், புதிய அரசியலமைப்பின் அவசியப்பாடு தொடர்பாக மகாநாயக்கர்களுக்கு தெளிவுபடுத்தவுள்ளதாக கூட்டமைப்பினர் கூறியிருந்தனர். இதற்கு பதிலளிக்கும்...

யாழ்ப்பாணம் வடமராட்சி பிரதேசத்தின் துன்னாலையைச் சேர்ந்த இளைஞன், பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் பலியாகிய சம்பவத்தில், பொலிஸாரினால் அதிரகார துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, வட மாகாண முதலைமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழுக்கான விஜயமொன்றை மேற்கொண்ட, இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் ஷெலி வைட்னிங்கை, தனது வாசஸ்தலத்தில், நேற்றுச் சந்தித்துக் கலந்துரையாடிய பின்னர், ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே, மேற்படி கருத்தை...

யாழ். பருத்தித்துறை துன்னாலை இளைஞனின் படுகொலை தொடர்பான பொலிஸ் விசாரணை பக்கச்சார்பின்றி நடைபெற வேண்டும் என்பதில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கவனமான உள்ளதென ஆணைக்குழுவின் யாழ். அலுவலக இணைப்பாளர் ரி.கனகராஜ் தெரிவித்துள்ளார். இச் சம்பவம் தொடர்பான பொலிஸாரின் நடவடிக்கைகள் தொடர்ந்தும் கண்காணிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். துன்னாலை பகுதிக்கு விஜயம் செய்த ஆணைக்குழுவின் உறுப்பினர்கள்,...

யாழ். மல்லாகம் பகுதியில் பாடசாலை மாணவியொருவர் கடத்தப்பட்டு, இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் தென்மராட்சி வரணிப் பகுதியில் வானிலிருந்து தள்ளிவிடப்பட்டுள்ளார். மல்லாகம் மகாவித்தியாலயத்தில் உயர்தரத்தில் கல்வி கற்கும் 18 வயதான குறித்த மாணவி, இன்று (செவ்வாய்க்கிழமை) காலை பாடசாலைக்கு செல்லும் வழியில் இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார். பின்னர், கடத்தப்பட்ட வானிலிருந்து தள்ளிவிடப்பட்ட மாணவி, பொதுமக்களால் மீட்கப்பட்டு சாவகச்சேரி வைத்தியசாலையில்...

தமிழ் மக்களுக்கான மாற்றுத் தலைமைக்கு இடமில்லை என்றும் ஒற்றுமையே பலம் என்றும் வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு இன்று (செவ்வாய்க்கிழமை) விஜயம் செய்திருந்த கனேடிய உயர்ஸ்தானிகர் ஷெல்லி வைற்றிங்கிற்கும் முதலமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு, முதலமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே முதலமைச்சர் மேற்குறித்தவாறு குறிப்பிட்டார். அண்மையில் யாழில்...

யாழ்.பருத்தித்துறை பகுதியில் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞனின் இறுதிக்கிரியை இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ள நிலையில், அப் பகுதியில் ஏராளமாக பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இளைஞனின் சொந்த இடமான துன்னாலையிலும், நெல்லியடி முதல் கொடிகாமல் அரசடி வீதிவரையும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இறுதிக்கிரியைகள் நடைபெறும் இடத்தில் ஏராளமான இளைஞர்களும் பொதுமக்களும் குவிந்துள்ள நிலையில், அசம்பாவிதங்களை தடுக்கும்...

பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அத்துடன் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளின் பிரகாரம் தண்டனை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “ஊழல் மோசடி, நிதி மோசடி மற்றும்...

யாழ். பருத்தித்துறை துன்னாலை பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரை சுட்டுக்கொன்ற சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட பொலிஸ் அதிகாரிகள் இருவரையும், எதிர்வரும் 24ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட பருத்தித்துறை பொலிஸ் நிலைய உதவி பொலிஸ் அத்தியட்சகரும், பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் நேற்று (திங்கட்கிழமை) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது, நீதவான்...

வடமராட்சி கிழக்கு பகுதியில் லொறியின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் இரண்டு பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர். மணல் காடு பிரதேசத்தில் பொலிஸார் உத்தரவை மீறி சென்ற லொறியின் மீது நேற்று பொலிஸார் துப்பாக்கி சூடு மேற்கொண்டுள்ளனர். குறித்த சம்பவத்தில் 24 வயதுடைய ஒருவர் பலியானார். http://www.e-jaffna.com/archives/84168

வடமராட்சி கிழக்குப் பகுதியில் ஒருவர் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளார். அதையடுத்து அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. வல்லிபுரம் ஆலயத்துக்குச் செல்லும் சாலையில் 6 ஆம் கட்டைப் பகுதியில் நேற்றுப் பிற்பகல் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் துன்னாலைச் சேர்ந்த 24 வயதுடைய யோகராசா தினேஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது...

வடக்குகிழக்கு இணைப்பு, சுயநிர்ணய உரிமை, தமிழ்த் தேசம் என்பன அங்கீகரிக்கப்பட்டு சமஸ்ட்டி என்னும் வார்த்தையை உள்ளடக்கியதாக அமைந்தால் மட்டுமே புதிய அரசியல் யாப்பை தமிழ் மக்கள் ஆதரிக்க வேண்டும் இவ்வாறு த.தே.ம முன்னணியினர் நாடாத்திய ஊடக மாநாட்டில் கருத்து தெரிவித்துள்ளனர். அவர்களின் ஊடக மாநாடு தொடர்பான காணெளி https://www.youtube.com/watch?v=7TzR8ow3SrA&feature=youtu.be https://www.youtube.com/watch?v=Exfc3U6xTBA&feature=youtu.be https://www.youtube.com/watch?v=yQ174qhGcvM&feature=youtu.be...

புதிய அரசியலமைப்பிற்கு எதிராக மகாநாயக்க தேரர்கள் போர்க்கொடி தூக்கியுள்ள இத்தருணத்தில் நாம் அனைவரும் ஒற்றுமையாக ஐக்கியத்துடன் செயற்படுதல் அவசியமாகும் என எதிர்க்கட்சி தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்த கருத்து தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில்...

வடக்கில் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ள பொருத்து வீடு குறித்து குற்றம் சுமத்துகின்றவர்கள் முதலில் கட்சி வீட்டை சரி செய்ய வேண்டும் என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்ற மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் கேட்டுக்கொண்டுள்ளார். குறித்த திட்டம் தொடர்பில் நேற்று (வியாழக்கிழமை) சபை ஒத்திவைப்பு வேளையில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்...

புதிய அரசியலமைப்பில் சமஷ்டி, வடக்கு- கிழக்கு இணைப்பு ஆகியவற்றிற்கு வாய்ப்பே இல்லை என தேசிய கலந்துரையாடல்கள், சமூக நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். புதிய அரசியல் யாப்பையும் காணாமல் போனோர் அலுவலகத்தையும் உடனடியாக கைவிடுமாறு மகாநாயக்க தேரர்கள் தெரிவித்திருந்தமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும்...

வடக்கிலுள்ள ராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டுமெனவும், ராணுவத்தினர் மீளப் பெறப்பட வேண்டுமெனவும் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறும் கருத்துக்களுக்கு ராணுவத்தினர் சஞ்சலமடையமாட்டார்கள் என புதிய ராணுவ தளபதி மகேஸ் சேனாநாயக்க குறிப்பிட்டுள்ளார். தமது கடமைகளை நேற்று (புதன்கிழமை) உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டதன் பின்னர் நடத்திய ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அரசியல்வாதிகள் எவ்வாறான கருத்துக்களை குறிப்பிட்டாலும், வடக்கின்...

All posts loaded
No more posts