Ad Widget

நீதிபதி இளஞ்செழியன் மீதான கொலை முயற்சி கண்டனத்திற்குரியது: கஜேந்திரகுமார்

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மீதான கொலை முயற்சி கண்டனத்திற்குரியது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அரசியல் அதிகாரம் மிக்கவர்களுக்கு எதிரான வழக்கு, பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிரான வழக்கு, அரசியல் கட்சிகள் என்னும் போர்வையில் துணை இராணுவக்குழுவாக இயங்கியவர்களிற்கு எதிரான வழக்கு போன்றவற்றை மிகத் துணிச்சலுடன் கையாண்டு தண்டனை வழங்கியவர்.

இளஞ்செழியன் அவர்கள் யுத்தத்தின் பின்னர் ஒட்டுமொத்த நாட்டையும் கொதிப்படைய வைத்த வித்தியா என்ற மாணவியின் கொலை வழக்கில் பாதிக்கப்பட்ட தரப்புக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதிலும், எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறக்கூடாது என்பதிலும் தீவிர அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றார்.

எனவே மேற்படி தாக்குதல் சம்பவம் குறித்த பூரண விசாரணைகளை விரைவுபடுத்தவும் குற்றவாளிகளைச் சட்டத்தின் முன்நிறுத்தவும் வேண்டுமென நாம் வலியுறுத்துகின்றோம்” என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

Related Posts