- Monday
- September 1st, 2025

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற வருகின்ற வித்தியா படுகொலை வழக்கு விசாரணைகள் இன்று(செவ்வாய்கிழமை) தொடக்கம் மீண்டும் தொடா்ச்சியாக நடைபெறவுள்ளது. யாழ். புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கு, தமிழ் மொழி பேசும் மூன்று நீதிபதிகள் அடங்கிய ட்ரயல் அட்பார் நீதிமன்ற தீா்ப்பாயத்தில் நடைபெற்று வருகின்றது. இன்று ஆரம்பிக்கப்படும் வழக்கு விசாரணையானது 19, 20, 24 மற்றும் 26...

முல்லைத்தீவு கொக்கிளாய் முகத்துவாரம் பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) வெடிப்பு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த வெடிப்பு சம்பவத்தினால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், எட்டு மாணவர்கள் மயக்கமடைந்துள்ளனர். மயக்கமடைந்த மாணவர்கள் மாஞ்சோலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீன்பிடிக்க பயன்படுத்தப்படும் ஜெலெக் நைட் எனும் வெடிபொருள் வெடித்ததிலேயே குறித்த அனர்த்தம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், இது தொடர்பான மேலதிக...

வடமாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சராக என்.விந்தன் கனகரத்தினம் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயற்குழுவினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். பரிந்துரைக்கான கடிதம் நேற்றயதினம் (திங்கட்கிழமை) கட்சியின் செயலாளர் நாயகத்தினால் வடமாகாண முதலமைச்சருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் அக்கட்சியின் செயற்குழுவினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து தமிழீழ விடுதலை இயக்கத்தின் உயர்மட்ட கலந்துரையாடல் வவுனியாவில் நடைபெற்றது. இதன்போது 8 உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர். இந்நிலையில், டெனிஸ்வரனின்...

எதிலும் குறை கூறுவதில் நாம் வல்லவர்கள் என்பதனாலேயே பல அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க முடியாமல் உள்ளோம் என வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். ஒப்பந்த முகாமைத்துவம் மற்றும் முரண்பாடுகளை தீர்வு செய்தல் தொடர்பான கருத்தரங்கு யாழ்ப்பாணத்தில் நேற்று (திங்கட்கிழமை) ஆரம்பமானபோது அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த...

தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் 71 உறுப்பினர்களை எக்காரணத்திற்காகவும் விடுதலை செய்ய முடியாதென நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட மனித உரிமைகள் மற்றும் தீவிரவாத எதிர்ப்பு தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்ஷன் முன்வைத்த குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் விதமாகவே நீதியமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தொடர்ந்து...

வடமாகாண போக்குவரத்து மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரன் தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கப்படுமென வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஷ்வரன் அறிவித்துள்ளார். வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் தொடர்பாக அவர் பிரதிநிதித்துவம் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் ந.ஸ்ரீகாந்தாவினால் அனுப்பி வைக்ககப்பட்ட கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையில் முதலமைச்சர் விக்கினேஸ்வரனால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அனுப்பிய பதில் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,...

”தமிழ் மக்களுக்காக போராடியது குற்றமா – தமிழ் மண்ணில் பிறந்தது குற்றமாக – ஏன் எங்களை புறக்கணித்து சந்தேகக் கண் கொண்டு பாா்க்கின்றீா்கள்” என்று முன்னாள் போராளியும் புனா்வாழ்வளிக்கப்பட்ட நபா்களின் ஒன்றியத்தின் தலைவரும், தமிழீழ விடுதலைப் புலிகளின் திருமலை மாவட்ட புலனாய்வுதுறையின் சிரேஷ்ட தளபதியாக இருந்தவருமான அன்பு (கந்தசாமி இன்பராசா) கேள்வி எழுப்பியுள்ளாா். புனா்வாழ்வு பெற்ற...

முல்லைத்தீவில் இனப்பரம்பலைச் சிதைக்கும் நோக்குடனான சட்டவிரோத குடியேற்றத்தை மேற்கொள்ளும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு பேரணி ஒன்று இடம்பெற்றது. மேற்படி கவனயீர்ப்பு பேரணியானது முள்ளியவளை ஆலடி சந்தியிலிருந்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிக்கு ஆரம்பமானது. போருக்குப் பின்னரான நல்லிணக்க முயற்சிகளைக் கட்டியெழுப்பும் விதமாக உருவாக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் கூட,...

வடக்கில் அண்மையில் இடம்பெற்ற சம்பவங்கள் பயங்கரவாத செயற்பாடுகளாக கொள்ள முடியாதென்பதுடன், நாட்டை மீண்டும் பயங்கரவாதத்திற்குள் உட்படுத்துவதற்கு அனுமதிக்கப்போவதில்லை என பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார். இலங்கையின் செய்திச்சேவை ஒன்றிற்கு அளித்த செவ்வி ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “நாட்டின் நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க முயற்சிப்பவர்களுக்கு எதிராக பொதுமக்களின்...

எமது மண்ணில் இருந்து எம்மைத் துரத்தலாம் என நினைத்து, இளைஞர்களின் மனநிலையினை மீண்டும் வேறு திசைகளுக்கு மாற்றாதீர்கள் என வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார். முள்ளியவளையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “எமது இளைஞர்கள் இன்று ஆக்கபூர்வமான வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். எமது...

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலைச் சம்பவத்தின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ் குமாருக்கு, தப்பிச் செல்வதற்கு உதவிய குற்றச்சாட்டில் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு அறிவித்துள்ளது. கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டப் பிரிவு பேராசிரியர் தமிழ்மாறனின் கோரிக்கைக்கமைய பிரதான சந்தேகநபரை, லலித் ஜயசிங்க விடுவித்ததாக அவர் மீது...

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தனது ஆட்சியை நல்லாட்சி எனக் கூறிக்கொண்டு என் கணவனை பயங்கரவாதி என அடையாளப்படுத்தி சிறையிலடைத்தது மட்டுமல்லாமல் என் 15 வயது மகனை மேசன் தொழிலாளி ஆக்கி ஒரு பாடசாலை சிறுவனின் எதிர்காலத்தையே அழித்துவிட்டார். உண்மையில் இங்கே நடப்பது நல்லாட்சி என்றால் என் கணவனை விடுதலை செய்யுங்கள். என் மகனின் எதிர்காலத்தை பாதுகாத்து...

ஈச்சமோட்டை பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவமொன்றில் நால்வர் படுகாயமடைந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்றிரவு (வெள்ளிக்கிழமை) மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு சம்பவமானது ஆவா குழுவுடன் தொடர்புடைய சந்தேகநபர்களினாலேயே முன்னெடுக்கப்பட்டிருப்பதாக சந்தேகம் வெளியாகியுள்ளது. யாழ்ப்பாணம் ஈச்சமோட்டை குளத்தடிப்பகுதியில் உள்ள யாழ்.மாவட்ட உள்ளூராட்சி ஆணையாளரது வீட்டிற்குள்ளும், அருகிலிருந்த மற்றுமொரு வீட்டினுள்ளும் அத்துமீறி நுழைந்த மர்ம நபர்கள் வீட்டில்...

இலங்கையில் மலேரியா நோயினை முற்றாக அழித்த போதிலும் டெங்கு நோயினை அழிக்க முடியாதுள்ளது. இலங்கையில் எச். ஐ.வி மற்றும் டெங்கு நோய் பரவல் அதிகரித்துள்ளது என சுகாதாரத் துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். இந்த மாதத்தின் பின்னர் டெங்கு நோய் பரவல் குறைவடையும் எனினும் ஒக்டோபர் மாதத்தின் பின்னர் மீண்டும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகவும்...

தமிழ் இளைஞர் யுவதிகள் பொலிஸ் சேவையில் இணைந்து எமது ஆதிக்கத்தினை செலுத்தினால், பொலிஸ் அதிகாரத்தினை நாம் கையில் எடுக்க முடியும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். பொலிஸ் சேவைக்காக 500 விண்ணப்பங்கள் உள்ளன. அவற்றில் இணைந்துகொள்வதற்கு எமது தமிழ் இளைஞர் யுவதிகள் முன்வர வேண்டுமென அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். வடமாகாண முதலமைச்சருக்கும், வடமாகாண சிரேஸ்ட பிரதிப்...

வட. மாகாணத்தில் காணப்படும் வீட்டுப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அமெரிக்க நிறுவனமொன்று முன்வந்துள்ளது. அதன்படி வடக்கு சூழலுக்கு ஏற்ற தரமான வீடுகளைப் அமைத்துக் கொடுக்கும் நோக்குடன் வீட்டுத்திட்டத்தில் பங்கெடுக்கவுள்ளதாக அமெரிக்க வர்த்தக மற்றும் தொழில்நுட்ப சர்வதேச நிறுவனத்தின் இலங்கை பிரதிநிதியான ரி.பரமானந்தன் ஆனந்த் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...

இலங்கை ஆயுதப் படையினரிடமிருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை தப்பிக்கச் செய்வதற்கு உதவியதாக எம்மீதான குற்றச்சாட்டுகள் வெறும் கட்டுக்கதை என இலங்கைக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் ரொபேர்ட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார். வொஷிங்டனில் இலங்கையர்களை அடிப்படையாகக் கொண்ட அரசியல் சாரா குழுவொன்றுடனான கலந்துரையாடலின்போது இவ்வாறு தெரிவித்ததாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது....

விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால் பௌத்த தேரர்கள் பாதுகாப்பாக இருந்திருப்பார்கள் என அம்பிட்டியே சுமனரத்ன தேரர் தெரிவித்துள்ளார். பிரபாகரன் காலத்தில் சிங்கள இனத்தை மிதித்து முன்னோக்கிச் செல்கின்ற வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இருந்திருந்தால் மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்களில் பௌத்த பிக்குகள்...

“யாழ். ஊடகவியலாளர் ஒருவருக்கு, குற்றப்புலனாய்வு துறையால் அனுப்பப்பட்ட அழைப்பாணையின் பின்னணி தொடர்பாக சிந்திக்கவேண்டியுள்ளது” என வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில், நேற்று (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “குற்றபுலனாய்வுத்துறையால் யாழ். ஊடகவியாளாலர் த.பிரதீபனுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. அதில், யாழ். ஊடகவியலாளர்...

பொருத்து வீடுகளை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அமைக்கும் நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நேற்று (வியாழக்கிழமை) உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். பொருத்து வீடுகளை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அமைப்பதற்கு மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் நடவடிக்கை எடுத்துள்ளார். இந்தப் பொருத்து வீடுகள் வடக்கு,...

All posts loaded
No more posts