Ad Widget

ஐரோப்பிய ஒன்றிய பயங்கரவாத தடைப் பட்டியலிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு நீக்கம்

ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பு பட்டியலில் இருந்து, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு நீக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் உச்ச நீதிமன்றத்தால் நேற்று இத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2009ஆம் ஆண்டு உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர், விடுதலைப் புலிகளால் தாக்குதல் நடத்தப்பட்டதாக எவ்வித சாட்சியும் பதிவாகவில்லையென தெரிவித்த நீதிமன்றம் இத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு சேர்த்துக்கொள்ளப்பட்ட முறைமை தவறென லக்ஸம்பேர்க்கில் அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.

இதேவேளை, பலஸ்தீன ஹமாஸ் அமைப்பின் மீதான தடை, தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts