- Tuesday
- September 2nd, 2025

மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனைக் குறிவைத்து நல்லூரில் நடத்தப்பட்டதாக கூறப்படும் தாக்குதல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் ஏற்கனவே கண்டன அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து நீதிக்காகக் குரல் எழுப்பும் அனைத்துத் தரப்பினராலும் கண்டனம் வெளியிடப்பட்டு வருவதும், உண்மை கண்டறியப்பட்டு குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதற்கும் மேலாக, எதிர்வரும் காலங்களில் இவ்வாறான வன்முறைகள் இடம்பெறக்...

நீதிபதி இளஞ்செழியனின் செயற்பாடுகளை மழுங்கடிப்பதற்கு அல்லது அவரை இல்லாமல் செய்வதற்காகவே இளஞ்செழியன் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டு அவருடைய பாதுகாவலர்கள் இருவரில் ஒருவர் கொலை செய்யப்பட்டதுடன் மற்றவர் காயமடைந்தார். ஆனால் பொலிஸார் அவசர அவசரமாக துப்பாக்கிதாரியின் இலக்கு நீதிபதி அல்ல என கூறுவது பலத்த சந்தேகங்களை உருவாக்கியிருக்கின்றது என்று வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கூறியிருக்கின்றார். நீதிபதி...

வவுனியாவில் அச்சுறுத்தல்கள் நிலவிய காலத்தில் எனக்கு பாதுகாப்பு வழங்கும் போது போகாத உயிர் யாழ்பாணத்தில் அமைதி நிலவும் போது போயுள்ளது என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தெரிவித்து உள்ளார். நல்லூரில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த நீதிபதியின் மெய் பாதுகாவலர் உயிரிழந்து உள்ளார். அது தொடர்பில் தெரிவிக்கையிலையே அவ்வாறு தெரிவித்தார். மேலும்...

நல்லூரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிள்றோம். இது சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு வடமாகாண உப பொலிஸ்மா அதிபருக் பணித்துள்ளேன். இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் உள்ளதாவது- கடந்த சனிக்கிழமை நல்லூரில் நடைபெற்ற தாக்குதலின் போது உயிர் நீத்த பொலிஸ் சார்ஜென்ட்...

‘நல்லூரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்டது அல்ல. நீதிபதிக்கு, யாழ்ப்பாணத்தில் எந்த அச்சுறுத்தலும் இல்லை’ என யாழ். பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் கனிஸ்ரன் ஸ்ரனிஸ்லஸ் தெரிவித்து உள்ளார். நல்லூரில், சனிக்கிழமை( 22) மாலை 5:10க்கு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத்...

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தை கண்டித்து, வடக்கு கிழக்கில், நாளை செவ்வாய்க்கிழமை காலை 9:30க்கு கண்டனப் பேரணிகள் இடம்பெறவிருக்கின்றன. இந்தக் கண்டனப் பேரணிகளை வடக்கு, கிழக்கு ஒருங்கமைப்புக் குழு ஏற்பாடு செய்துள்ளது. அந்தக் குழு அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில், மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ்ப்பாணம் நல்லூர்ப்பகுதியில் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி...

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மீதான கொலை முயற்சி கண்டனத்திற்குரியது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “அரசியல் அதிகாரம் மிக்கவர்களுக்கு எதிரான வழக்கு, பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிரான வழக்கு,...

எதிர்க்கட்சித் தலைவர் தவராசா தொடர்ந்தும் இந்த அவையில் ஒரே கேள்விகளையே முன்வைத்து வருகிறார். நாங்களும் விக்கிரமாதித்தன்போல திரும்பத் திரும்ப அதே பதிலையே சொல்லிக் கொண்டிருக்கிறோம். எதிர்க்கட்சித் தலைவருக்கு இவை விளங்கவில்லையோ அல்லது விளங்காததுபோல நடிக்கிறாரோ தெரியவில்லை. ஊடகங்களில் தொடர்ந்தும் இந்தச் செய்திகள் இடம்பெற வேண்டும் என்பதற்காகவே அவர் மீண்டும் மீண்டும் அதே பிழையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்...

கௌரவ அவைத் தலைவர் அவர்களே, எமது சபையின் நூறாவது அமர்வுக்கு முன்பாக இன்றைய 99வது அமர்வில் வட மாகாண சபையின் ஆயுட் காலத்திற்கு இன்னும் பதினைந்து மாதங்களே இருக்கின்ற நிலையில் கடந்த கடந்த மூன்று வருடம் 9 மாதத்தில் ஒட்டு மொத்த வட மாகாண சபையின் செயற்பாடுகளை மீளாய்வு செய்வதற்கு வாய்ப்பளித்தமைக்கு முதலில் எனது நன்றிகளைத்...

இலங்கையில் காணாமல் போனோர் அலுவலகம் அமைப்பது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம் அன்டோனியோ கட்டர்ஸ் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இது தமது காணாமல் போன உறவுகள் பற்றி உண்மையைத் தேடும் அனைத்து இலங்கையர்களுக்கும் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் என செயலாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக்...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் பீதியை கிளப்பிய ‘கிறீஸ் மனிதன்’ தற்போது தென்னிலங்கையில் உலாவுவதாக தெரிவிக்கப்படுகிறது. ‘கிறீஸ் பேய்’ என அழைக்கப்பட்ட இவ்வகையான மனிதர்கள், உடம்பு முழுவதும் கிறீஸை பூசிக்கொண்டு, குறிப்பாக பெண்களை இலக்குவைத்து தாக்குதல் நடத்தியிருந்தனர். இந்நிலையில், தற்போது களுத்துறை, மாத்தறை உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளில் தனியாக...

அரசியல் சாசனம் அமைப்பதில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் இணக்கப்பாடு அவசியமானது என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் தங்களுக்கு இடையிலான அரசியல் பேதங்களை களைந்து, புதிய அரசியல் அமைப்பினை உருவாக்கும் முனைப்புக்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். தேசிய இணக்கப்பாட்டின்...

அரச வேலைவாய்ப்பு கோரி கடந்த 143 நாட்களாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள், தமது போராட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளனர். குறித்த பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது தொடர்பான அமைச்சரவை பத்திரமொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இரண்டு மாத காலத்திற்குள் தமது பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்ற நிபந்தனையின்...

தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். காணாமற்போனோர் விடயம் தொடர்பில் இன்னும் தீர்வு காணப்படவில்லை. அரசியல் கைதிகளின் பிரச்சினைக்ளுக்கு தீர்வு காணப்படவில்லை. தமிழ்...

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவம் வலுவாக இல்லையென குறிப்பிட்டுள்ள வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் ஏனைய மொழி பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சரியாக தெரிவிக்கப்படுவதில்லையென குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றில் சிங்களத்தை பெரும்பான்மையாக பேசும் உறுப்பினர்கள் இருக்கும் போது, தமிழில் எமது பிரச்சினைகளை எடுத்துரைப்பதால் எவ்வித பிரயோசனமும் இல்லையென்றும், சமூகங்களுக்கிடையிலான பிரச்சினைகளை பரிமாற்றிக்கொள்ள கூட்டமைப்பின்...

யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான சுவிஸ்குமார் தப்பித்துச் செல்ல உதவியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள உப பொலிஸ் பரிசோதகர் சு.ஸ்ரீகஜன் தலைமறைவாக உள்ளதாக, ஊர்காவற்துறை நீதிமன்றில் குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர். ஸ்ரீகஜனை கைதுசெய்ய முயற்சித்தபோது, அவர் தலைமறைவாக உள்ளமை தெரியவந்துள்ளதாக நேற்று (செவ்வாய்க்கிழமை) ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் தெரிவித்த குற்றப்புலனாய்வு பிரிவினர், அவர்...

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலையின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ் குமார் எனப்படும் மகாலிங்கம் சசிகுமார், யாழ். பொலிஸ் நிலையத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட விதம் தொடர்பில் நேற்று (18) சாட்சியம் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் Trial at Bar விசாரணை யாழ். மேல் நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் ஆரம்பமானது. மேல் நீதிமன்ற நீதிபதிகளான மாணிக்கவாசகர் இளஞ்செழியன்,...

வவுனியாவில் அமைக்கப்பட்ட புதிய பேரூந்து நிலையத்தினை திறந்து செயற்படுத்துவது தொடர்பில் ஏற்பட்டுள்ள இழுபறி நிலைக்கு தீர்வு காணும் வகையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற கூட்டத்திலிருந்து ஊடகவியலாளர்கள் வெளியேற்றப்பட்டனர். 195 மில்லியன் ரூபா பெறுமதியில் அமைக்கப்பட்ட வவுனியா புதிய பேரூந்து நிலையமானது கடந்த ஜனவரி மாதம் திறந்து வைக்கப்பட்ட நிலையில் தனியார் மற்றும்...

ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்தேசிய கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சியமைக்கும் நிலை ஏற்படலாம் என துறைமுக மற்றும் கடற்தொழில்துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்படி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “வேறு மாற்றுவழி இல்லாததால் நல்லாட்சி அரசில்...

பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த பூமியதிர்ச்சியினை அடுத்து குறித்த பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பசிபிக் பெருங்கடலில் 7.7 ரிச்டர் அளவிற்கு சக்தி வாய்ந்த பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவின் பெரிங் தீவிலிருந்து சுமார் 200 கிலோமீற்றர் தொலைவில் பசிபிக் பெருங்கடலில் 11.7.கிலோமீற்றர் ஆழத்தில் சக்தி வாய்ந்த பூமியதிர்ச்சியொன்று ஏற்பட்டுள்ளது.மேலும் அங்கு...

All posts loaded
No more posts