இலங்கையில் காணாமல் போனோர் அலுவலகம் அமைப்பது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம் அன்டோனியோ கட்டர்ஸ் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
இது தமது காணாமல் போன உறவுகள் பற்றி உண்மையைத் தேடும் அனைத்து இலங்கையர்களுக்கும் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் என செயலாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா. இந்த செயன்முறைக்கு ஆதரவளிப்பதாகவும், காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் விரைவாக இயங்கும் என எதிர்பார்ப்பதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போனோர் அலுவலகம் தொடர்பான சட்டமூலத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று கையொப்பமிட்டமை குறிப்பிடத்தக்கது.