நல்லூரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிள்றோம். இது சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு வடமாகாண உப பொலிஸ்மா அதிபருக் பணித்துள்ளேன்.
இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதில் உள்ளதாவது-
கடந்த சனிக்கிழமை நல்லூரில் நடைபெற்ற தாக்குதலின் போது உயிர் நீத்த பொலிஸ் சார்ஜென்ட் சரத் ஹேமசந்திரவின் மறைவு எம் அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
கடமையில் ஈடுபட்டிருந்தபோது உயிர் நீத்த பொலிஸ் அலுவலரின் குடும்பத்தாருக்கு எமதுஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கும் அதேநேரத்தில் வன்செயல்களில் ஈடுபட்ட இளைஞர்களின் நடவடிக்கைகளை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
ஒருஉயிரைப் பறித்தமையால் அன்னாரின் குடும்பம் பலவித இன்னல்களுக்கும் இடர்களுக்கும் முகம் கொடுக்கவேண்டிவந்துள்ளது. வன்முறையில் ஈடுபட்டவர்களின் உள்ளெண்ணம் பற்றித் தாம் ஆராய்ந்து வருவதாக வடமாகாண உப பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதல் சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு அவருக்குப் பணித்துள்ளேன். – என்றுள்ளது.