Ad Widget

மாற்றுத் தலைமைக்கு இடமில்லை: முதலமைச்சர் விக்னேஸ்வரன்

தமிழ் மக்களுக்கான மாற்றுத் தலைமைக்கு இடமில்லை என்றும் ஒற்றுமையே பலம் என்றும் வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு இன்று (செவ்வாய்க்கிழமை) விஜயம் செய்திருந்த கனேடிய உயர்ஸ்தானிகர் ஷெல்லி வைற்றிங்கிற்கும் முதலமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு, முதலமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே முதலமைச்சர் மேற்குறித்தவாறு குறிப்பிட்டார்.

அண்மையில் யாழில் நடைபெற்ற ‘தடுமாறாத தமிழர்களுக்கு தலைமை ஏற்பது யார்?’ என்ற கருத்துப்பகிர்வு கலந்துரையாடலில், தமிழர்களுக்கான தலைமையை முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஏற்க வேண்டுமென கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. இதனை ஊடகவியலாளர்கள் சுட்டிக்காட்டியதை அடுத்து, அவ்வாறான ஒரு நிலைப்பாட்டிற்கு இடமில்லை என்றும், தற்போதைய தலைமையின் கீழ் ஒற்றுமையாக செயற்படுவதே தமிழினத்திற்கு பலம் என்றும் முதலமைச்சர் சூசகமாக கூறிவிட்டுச் சென்றுள்ளார்.

Related Posts