பிரபாகரனின் பெரியப்பாவாக மாற வடக்கு மாகாண முதலமைச்சர் முயல்கிறார்!

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனி ஈழம் ஒன்றை அமைக்கும் கனவில் இருக்கின்றார் என்பதுடன் தமிழ் மக்களிடையே பிரபலமாகி தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பெரியப்பாவாக முயற்சி செய்கின்றார் எனவும் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அண்மையில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கொழும்பின் பார்வையானது தீர்வுக்கு உதவாது என செவ்வியொன்றின்போது தெரிவித்திருந்தார். இதற்குப் பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், நாட்டில் வாழும் மூவின மக்களும் ஒற்றையாட்சியின் கீழ் சுதந்திரமாக வாழ்வதற்காகவே அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது.

அதன் முதற்கட்டமாக அரசமைப்பு உருவாக்கம் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது வடமாகாண முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வடமாகாண முதலமைச்சரின் கருத்தை வடக்கு மக்களின் கருத்தாக எடுத்துக்கொள்ளமுடியாது. மக்கள் அதனை விரும்பவும் மாட்டார்கள்.

அவர் தனி ஈழம் ஒன்றை அமைக்கும் கனவில் இருக்கின்றார். இவ்வாறு செயற்படுவதன்மூலம் பிரபாகரனின் பெரியப்பாவாக முயற்சிக்கின்றார். அவரின் கருத்தை ஏற்கமுடியாது.

இங்கு கூட்டாட்சியை அமைக்கமுடியாது. ஒற்றையாட்சியின்கீழ் தான் மூவின மக்களும் சுதந்திரமாக வாழமுடியும்.

அதைவிடுத்து நாட்டைப் பிரிக்கவேண்டுமென்று வடமாகாண முதலமைச்சர் நினைப்பாராயின் அது கனவாகவே முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Posts