Ad Widget

மீனவர்களை ஏமாற்றிய தமிழரசுக் கட்சியினர் : கூட்டத்தில் மீனவர்கள் ஆவேசம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வடமாகாண மீனவர் சங்கப் பிரதிநிதிகளுக்குமிடையில் இடம்பெற்ற இழுவைப் படகுமூலமான மீன்பிடியைத் தடைசெய்யும் சட்டமூலம் தொடர்பான கலந்துரையாடலில் குழப்பம் ஏற்பட்டது.

சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது,

மீனவ பிரதி நிதிகளுடனான கலந்துரையாடலின் போது நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இழுவைப்படகு மூலம் தொழில் செய்யும் உள்ளூர் மீனவர்களுக்குப் பிரச்சனையில்லையெனவும், இந்திய இழுவைப்படகுகளுக்கே சட்டமூலம் கொண்டுவரப்படப்போவதாகவும் ஏற்கனவே தெரிவித்துவிட்டு, கலந்துரையாடலில் உள்ளூர் மீனவர்களுக்கெதிராக சட்டமூலம் கொண்டுவரப்போவதாகத் தெரிவித்ததையடுத்தும் உண்மைக்குப் புறம்பாக பல கருத்துக்களைச் சொன்னதால் குழப்பம் ஏற்பட்டது.

இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவ்விடத்தை விட்டுச் செல்வதற்கு மீனவர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டபோதும், நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் அவ்விடத்தைவிட்டுச் சென்றுள்ளார்.

இதன்போது மீனவ பிரதிநிதியொருவர் கருத்துத் தெரிவிக்கையில், இழுவைப்படகு மூலம் மீன்பிடிப்பதை உடனடியாக நிறுத்தவேண்டும். உங்களுக்கு ஒரு நிவாரணமும் இல்லையெனச் சொல்கிறீர்கள். ஆனால், அரசாங்கம் இழுவைப்படகு மூலம் மீன் பிடிப்பதற்கு நிவாரணம் வழங்கியுள்ளது.

பேசாலையில் ‘றோலரைக்’ காட்டுவதற்கு நான்தான் உங்களை அழைத்துச் சென்றேன். நீங்கள் பார்த்துவிட்டு இது சிறுதொழில்தானே. இதனால் பிரச்சனையில்லை. நாங்கள் இந்திய மீனவர்களின் றோலர் படகுகளுக்குத் தான் இச்சட்டமூலத்தைக் கொண்டுவரப்போகிறோம். சில இரகசியங்களைவெளியில் சொல்லமுடியாது என நீங்கள் தெரிவித்தீர்கள்.

ஆனால் இப்போது சொல்கிறீர்கள் உள்ளூர் இழுவைப்படகு மூலம் மீன் பிடிக்கமுடியாது இதனால்தான் பிரச்சனையென்றும், முல்லைத்தீவில் றோலாரைப் பயன்படுத்தி இறால் பிடிப்பதாகச் சொல்கிறீர்கள். முல்லைத்தீவில் இழுவைப் படகே இல்லை எனவும் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், சரவணபவன், சித்தார்த்தன் மற்றும் சாந்தி சிறிஸ்கந்தராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

????????????? ???? ????, ??????????, ????????

?????? ????????????? … ??? ??????????? ??? ???? ??????

Posted by ????????? PAPER on Monday, July 3, 2017

Related Posts