வலி. வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்த 2.71 ஏக்கர் தனியார் காணி உத்தியோகபூர்வமாக விடுவிப்பு!

வலிகாமம் வடக்கு, மல்லாகம் – கோணப்புலம் கிராமத்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்த தனியாருக்குச் சொந்தமான 2.71 ஏக்கர் காணி இன்று (திங்கட்கிழமை) உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட குறித்த காணிக்கான உத்தியோகபூர்வ ஆவணங்கள், யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் வைத்து மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபனிடம் கையளிக்கப்பட்டன.

பலாலி பாதுகாப்புப் படைகளின் சிவில் விவகாரங்களுக்கான சிரேஷ்ட அதிகாரி கேர்ணல் WMAM நிசங்க இந்த ஆவணங்களை மாவட்ட செயலரிடம் உத்தியோகபூர்வமாகக் கையளித்தார்.

இந்நிகழ்வின்போது மேலதிக மாவட்ட செயலாளர்களான கே. சிவகரன், பா. ஜெயகரன், உதவி மாவட்டச் செயலாளர் உ. தர்சினி மற்றும் மேஜர் HMDN ஹேரத் ஆகியோரும் உடனிருந்தனர்.

Related Posts