Ad Widget

பாதுகாப்புப் படையினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கைகள்: யாழ்.அரச அதிபர்

பாதுகாப்புப் படையினர் வசமுள்ள தனியார் காணிகளை விரைவில் கையளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.

யாழ்.மாவட்டத்தில் உள்ள காணிகள் விடுவிப்பது தொடர்பான கலந்துரையாடல் யாழ்.மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்றதன் பின்னர், ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“யாழ்.மாவட்டத்தில் இன்னும் 5400 ஏக்கர் காணிகள் விரைவில் கையளிக்கப்படவுள்ளன. தொடர்ந்தும் கலந்துரையாடல்கள் மூலம் ஏனைய காணிகளும் கையளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.

இன்னும் 4700 ஏக்கர் காணி வலி வடக்கிலும் மற்றும் ஏனைய பகுதிகளில் 700 ஏக்கர் காணிகள் இராணுவத்தினரின் பாவனையில் உள்ளன. ராணுவம் மட்டுமன்றி, விமானப்படை மற்றும் கடற்படையினரின் வசமுள்ள காணிகளும் உள்ளன.

இவ்வாறான கலந்துரையாடல்களை மேற்கொண்டு இயலுமானவரை தனியார் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் மேலும் தெரிவித்தார்.

Related Posts