- Friday
- August 29th, 2025

வட மாகாண அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டு விவகாரத்தில் தான் தலையிடப்போவதில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைர் இரா.சம்பந்தன் அறிவித்துள்ளார். வடமாகாண அமைச்சர்கள் மீதான ஊழல், மோசடி குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்கு வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் நியமிக்கப்பட்ட குழுவானது விசாரணையின் அடிப்படையில் இரண்டு அமைச்சர்களை பதவி விலகுமாறு அல்லது பதவி விலக்குமாறு அறிக்கையிட்டிருந்தது. இந்நிலையில், இந்தப்...

வடக்கு மாகாண சபையில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் அமைச்சர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பின்னர் அது தொடர்பாக வாக்கு மூலம் அளிக்க செல்லாத உறுப்பினர்களும் உடனடியாக பதவி விலக வேண்டும் என அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினருமான மு.தம்பிராசா தெரிவித்துள்ளார். நேற்றயதினம்...

இலங்கையிலும் ஐ.எஸ். அச்சுறுத்தல் உள்ளது என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். மேற்கத்தேய நாடுகளில் இடம்பெற்று வரும் பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “இன்று மேற்கு நாடுகளில் மோசமான வகையில் பயங்கரவாதம் பரவியுள்ளது. லண்டன், பிரான்ஸ், ஈரான், நாடுகளில் தொடர்ச்சியாக...

வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி நிலைமை தொடர்பில் விசேட கவனம் செலுத்தி மக்களுக்கு அரசு உரிய நிவாரணங்களை வழங்கவேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் கோரிக்கை விடுத்தார். நாட்டில் அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் தொடர்பில் ஜே.வி.பியினால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் இந்த கோரிக்கையை...
அரசாங்கத்திற்கும், சிறுபான்மை சமூகங்களுக்கும் நெருக்கடியை ஏற்படுத்துவோர் இராணுவத்தை கொண்டு அடக்கப்படுவர் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அனர்த்த நிலைமைகள் மற்றும் அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகள் ஆகிய தொடர்பிலான கலந்துரையாடலொன்றின் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நாட்டில் நீடித்துவரும் இனவாத செயற்பாடுகளை பொலிஸாரால் கட்டுப்படுத்த முடியாது போனால், அதற்கு மாற்று நடவடிக்கையாக இராணுவம் ஈடுபடுத்தப்படும் என்றும்...

காங்கேசன்துறை சீமெந்து ஆலையில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் விரைவில் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறை சீமெந்து ஆலையின் இயந்திர சாதனங்கள் வெட்டி எடுக்கப்பட்டு பழைய இரும்பாக பல கோடி ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டமை தொடர்பிலேயே குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. குறித்த மோசடி தொடர்பில் முன்னாள்...

இலங்கையில் சுனாமி அல்லது சூறாவளி அனர்த்தம் எதுவும் கிடையாது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. சில பகுதிகளில் கடல் நீர் தரைப் பிரதேசத்திற்குள் பிரவேசித்த காரணத்தினால் சுனாமி அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக சில தரப்பினர் பிரச்சாரம் செய்திருந்தனர். எனினும் இவ்வாறான எந்தவொரு ஆபத்து நிலைமைகளும்...

கௌரவ அவைத்தலைவர் அவர்களே, கௌரவ அமைச்சர்களே, கௌரவ எதிர்கட்சித் தலைவர் அவர்களே, கௌரவ உறுப்பினர்களே! பலவிதமான குற்றச்சாட்டுக்கள் எமது அமைச்சர்களுக்கு எதிராகக் கிடைத்ததன் விளைவாக நாம் ஒரு விசாரணைக்குழுவை அமைத்தோம். அதில் இருவர் ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதிகள் ஒருவர் இளைப்பாறிய இலங்கை நிர்வாக சேவையின் ஒரு சிரேஷ்ட அதிகாரியாவார். விதிமுறைக் குறிப்புக்கள் கொடுக்கப்பட்டு...

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்களை நிறைவேற்றும் கடப்பாடு அரசுக்கு இருக்கின்றது என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம் குறித்து நாடாளுமன்றத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும்...

யுத்த காலத்தை விட கிழக்கில் மிகவும் மோசமான நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரர், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால் தமிழர்களுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்குமா என கேள்வியெழுப்பியுள்ளார். அத்தோடு, தமிழ் மக்களுக்கு இழைக்கப்படுகின்ற அநீதிகளுக்கு எதிராக குரல்கொடுப்பதற்கு தான் தயாராக உள்ளதாகவும் தேரர் குறிப்பிட்டுள்ளார். நல்லாட்சியில் தமிழ்...

‘கடத்தப்பட்டும் கையளிக்கப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டோரை தேடியறியும் சங்கத்தலைவி’ க.ஜெயவனிதா புலனாய்வுத்துறையினரால் இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு உற்படுத்தப்பட்டுள்ளார். குறித்த சங்கத்தின் ஏற்பாட்டில் காணாமல் ஆக்கபட்டோரின் உறவினர்களால் முன்னெடுக்கப்படும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் 100 நாட்களை கடந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், குறித்த சங்கத்தின் தலைவியின் காணாமல் போன மகள் ஜனாதிபதியுடன் நிற்பது போன்ற...

வடக்கு மாகாண சபை அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை தொடர்பில் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்திருந்தன. அச்செய்திகளில் யாழ்கோ நிறுவனம் தொடர்பிலும் தகவல்கள் வெளியாகியிருந்தன. அது தொடர்பில் மக்களுக்கு தெளிவு படுத்தும் நோக்கில் யாழ்க்கோ நிறுவனம் சார்பில் அதன் தலைவர் இ.சர்வேஸ்வராவினால் விளக்க அறிக்கை ஒன்று வௌியிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கை வருமாறு.. வடக்கு மாகாண சபையின் அமைச்சர்கள் மீது நடாத்தப்பட்ட...

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் போராளிகளாக கடமையாற்றிய சகல போராளிகளும் எந்தவித ஆயுத கலாசாரமற்ற ஜனநாயக ரீதியில் ஜனநாயகப் போராளிகளாக மீண்டும் மக்களுக்கான தேவைகளை பெற்றுக் கொடுக்க ஒரு குடையின் கீழ் அணி திரண்டு ஜனநாயகப் பயணத்தில் பங்கு கொள்ளுங்கள் என ஜனநாயக போராளிகள் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. ஜனநாயக போராளிகள் கட்சி வெளியிட்டுள்ள குறித்த துண்டுப்பிரசுரத்தில்...

தமிழ் அரசியல்வாதிகள், மதத்தலைவர்கள் மற்றும் கடற்படையினர் இணைந்து எங்களை ஏமாற்றி விட்டார்கள் முள்ளிக்குளம் மக்கள் தெரிவித்துள்ளனர். தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஒழுங்கமைப்பில் முள்ளிக்குளம் மக்கள் சார்பில் முள்ளிக்குளத்தை சேர்ந்த அந்தோனி லம்பட் மற்றும் அந்தோனி குறூஸ் என்ற இருவர் யாழ்.ஊடக அமையத்தில் நேற்று (திங்கட்கிழமை ) ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்தனர். இதன்போதே மேற்கண்டவாறு...

யாழ். மாவட்டத்தில் நிலவும் வறட்சி காரணமாக ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். யாழ். தீவகப் பகுதிகளான வேலனை, புங்குடுதீவு, ஊர்காவற்துறை, கரம்பொன் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் வறட்சியினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். நிலவும் வறட்சியினால் குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் இப்பகுதி மக்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். ஊர்காவற்துறை பகுதியில் குழாய் நீர் விநியோகிக்கப்படுகின்ற போதிலும், நாளொன்றுக்கு...

வடக்கு மாகாணத்திற்கான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக கே.ஈ.ஆர்.எல் பெர்னாண்டோ காங்கேசன்துறையில் உள்ள அவரது அலுவலகத்தில் கடமைகளை பொறுப்பேற்றார். குறித்த நிகழ்வு நேற்று (திங்கட்கிழமை) சர்வமத தலைவர்களின் ஆசிர்வாதத்துடனும் பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதையுடனும் இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்வில், வடக்கு மாகாணத்தில் உள்ள பொலிஸ் உயர் அதிகாரிகள் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பொது...

தென்மெற்கு பருவப்பெயர்ச்சி காரணமாக யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கின் சில பிரதேசங்களில் தொடர்ந்தும் வறட்சி நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. எனினும், நாட்டின் ஏழு மாகாணங்களில் தொடர்ந்தும் மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், தென் ஆகிய மாகாணங்களில் இடையிடையே மழை பெய்யும் என்றும் கிழக்கு மற்றும்...

பளையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் யாழ்ப்பாணம் - உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த 29 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது. இவரை அவரது வீட்டில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சனிக்கிழமை இரவு கைதுசெய்துள்ளனர். கடந்த மாதம் பளை பகுதியில் பொலிஸாரின் வாகனத்தின் மீது...

வலி. வடக்கு காங்கேசன்துறை பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட இரு மோட்டார் சைக்கிள்களின் இலக்கத்தகடுகளை, இராணுவத்தினர் அகற்றி அவற்றை கொண்டு சென்றமை தொடர்பில், எமக்கு எதுவும் தெரியாது. இவ்விடயம் தொடர்பில் கொழும்பு பார்த்துக்கொள்ளும்” என, யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ன, நேற்று முன்தினம் தெரிவித்துள்ளார். காங்கேசன்துறை வடக்கு குரு வீதி...

உலக வெப்பமயமாதல் காரணமாக எதிர்வரும் 50 வருடங்களில் யாழ்ப்பாணம் அரை பாலைவனமாக மாறும் வாய்ப்பு இருப்பதாக பெரு நகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “தற்போது யாழ்ப்பாணத்தை...

All posts loaded
No more posts