Ad Widget

அரசுடைமையாகின்றது சைட்டம்: மாணவா்களின் போராட்டத்திற்கு வெற்றி!

சைட்டம் எனப்படும் மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை அரசாங்கம் பொறுப்பேற்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஜனாதிபதி தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சைட்டம் தனியார் நிறுவனத்தில் கற்கும் மாணவர்களுக்கு மருத்துவ சபையில் அனுமதி வழங்கப்பட்டமை மற்றும் அவர்களுக்கு அரச மருத்துவமனைகளில் பயிற்சி வழங்கியமை உள்ளிட்ட பல விடயங்களுக்கு நாடளாவிய ரீதியில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், குறித்த மருத்துவ கல்லூரியை அரசாங்கம் பொறுப்பேற்பதாக அண்மையில் அறிவித்திருந்தது. தற்போது அதற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ள நிலையில், விரைவில் வர்த்தமானியில் பிரசுரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

நவீன வசதிகளுடன் கூடிய மாலபே தனியார் வைத்தியசாலையை போதனா வைத்தியசாலையாக்கி, மக்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும் என அரசாங்கம் ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts