- Wednesday
- September 3rd, 2025

”வடக்கு கிழக்கில் ராணுவத்தால் தமிழ் மக்களுக்கு நடந்தேறிய எத்தனையோ பலாத்காரங்களும் கொலைகளும் வெளிவராமல் போய்விட்டன” என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். மாணவி கிருஷாந்தி படுகொலையின் 21ஆவது வருட நினைவுதினம், அவர் கொலையுண்ட செம்மணி பகுதியில் நேற்று (வியாழக்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. இந் நினைவு தின நிகழ்விற்கு அவர் அனுப்பிவைத்திருந்த செய்தியிலேயே இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்....

மெக்ஸிகோவின் தெற்கு கடற்கரை அருகாமையில் இன்று, 8 ரிக்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் ஓன்று ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் கடும் பீதியடைந்துள்ளனர்.இதனை தொடர்ந்து 8 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.குறித்த நாடுகள் மெக்ஸிகோ, கொத்மாலாவ, பனாமா, ஏல் செல்வோதொரய, கொஸ்டரிகா, நிகாரகுவா, ஹொன்ரோஸ், எக்குவடோர் போன்ற நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஜப்பானுக்கு சொந்தமான பொனின் தீவிற்கு அருகில்...

யுத்த குற்றம் மற்றும் அதற்கு பின்னராக விடயம் தொடர்பில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ள கருத்தை வரவேற்பதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது. இது குறித்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், இலங்கை படையினர் போர்க்குற்றத்தில் ஈடுபடவில்லை என்று இலங்கை அரசாங்கம் கூறிவருவதாகவும்,...

அரசியல் யாப்பு உருவாக்கத்திற்காக மைத்திரி ஒருபுறமும் ரணில் இன்னொருபுறமுமாக ஆலோசனை குழுக்களை அமைத்துள்ளனர்.இவற்றிற்கு மேலதிகமாக தமிழ் தேசிய கூட்டமைப்பும் பரிந்துரை அறிக்கையொன்றை சமர்ப்பித்திருப்பதாக சொல்லப்படுகின்றது.ஆனால் அதில் என்ன இருக்கின்றதென்பது பங்காளிகளான எமக்கு எவருக்குமே தெரியாதென போட்டுடைத்துள்ளார் புளொட் அமைப்பின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன். இதேவேளை மறுபுறம் அரசியல் யாப்பு உருவாக்கத்திற்காக...

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்ப்பட்ட வேம்போடுகேணி கிராம அலுவலர் பிரிவிற்கு உட்பட்ட இந்திராபுரம் குடியிருப்புப் பகுதியில் நேற்றுமுன்தினம் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த மனிதாவிமான கண்ணிவெடி அகற்றும் பிரிவினரால் 500 கிலோகிராம் கிபிர்க்குண்டு கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. நேற்று (7) பளைப் பொலிசாரால் இந்திராபுரம் பகுதியில் இருந்து சுமார் இரண்டு கிலோமிற்றர் சுற்றளவில் உள்ள கிராம மக்களை...

தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல் பொறுப்பாளர் எழிலனுடன் அவரது மனைவி அனந்தியும் இருந்திருந்தால் எழிலன் எங்கேயிருக்கிறார் எனத் தெரிந்திருக்கும் என இலங்கையின் முன்னாள் இராணுவ அதிகாரியும் போர்க்குற்றவாளியுமான ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய ஊடகம் ஒன்றுக்கு செவ்வி வழங்கியுள்ளார். போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக மனித உரிமை அமைப்பொன்று பிரேசில் நாட்டுக்கான இலங்கைத் தூதுவராகக் கடமையாற்றிய ஜெனரல்...

யுத்தத்தின் போதும் அதன் பின்னரான காலப்பகுதியிலும் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவினர்கள் குறித்த உண்மை நிலையை வெளிப்படுத்துமாறு கோரி, கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று (வியாழக்கிழமை) 200 நாட்களை எட்டியுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் கொட்டகை அமைத்து, மழையையும் வெயிலையும் பொருட்படுத்தாது இம் மக்கள் இரவு பகலாக...

வரலாற்று தொன்மைமிக்க சின்னமாக விளங்கும் யாழ்.கோட்டையில், மீண்டும் படையினரை நிலைநிறுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாதென ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். வடக்கில் தமிழ் மக்களின் காணிகளில் நிலைகொண்டுள்ள ராணுவத்தினரை அங்கிருந்து வெளியேற்றினால், அவர்களை யாழ். கோட்டையில் நிலைநிறுத்த வேண்டுமென வவுனியாவில் விஹாராதிபதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பில் வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரே...

காணாமல்போனோர் தொடர்பான பிரச்சினையில் குறுகிய காலத்திற்குள் மனிதாபிமான ரீதியில் தீர்வைக்காண நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் பிரதிநிதிகளை ஜனாதிபதி மாளிகையில் நேற்று (புதன்கிழமை) சந்தித்து கலந்துரையாடிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்படி உறுதியளித்துள்ளார். இதன்போது, காணாமல் போனோர் பிரச்சினைக்கு முன்னுரிமையின் அடிப்படையில் குறுகிய காலத்தில் தீர்வு காணப்படும்...

நேற்று முன்தினம் {05/09/17} யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் தமிழ் மக்கள் பேரவையினால் ஒழுங்குபடுத்தப்பட்ட "எம் அரசியல் தீர்வின் அடிப்படைகளும் சிறிலங்காவின் உத்தேச அரசியலமைப்பு முயற்சியும் " எனும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில்வெளியிடப்பட்ட பிரகடனம். பிரகடனம் தமிழ் மக்கள் பேரவை 05/09/17 1. இலங்கைத்தீவின் இனப்பிரச்சினைக்கான தீர்வானது, இந்த இனப்பிரச்சினையின் அடிப்படைக்காரணிகளை இனம்கண்டு நிரந்தரமாகத் தீர்ப்பதாக அமைய...

ஊடகவியலாளா் நவரத்தினம் பரமேஸ்வரன்(55) மீது நேற்று மாலை யாழ்ப்பாணத்தில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எதிர்கட்சி தலைவராக இருந்த அமிர்தலிங்கத்தின் மகன்( வெளிநாட்டு பிரஜை) மற்றும் மாணிப்பாய் பிரதேசத்தை சேர்ந்த கௌரிகாந்தன் ஆகியோரே தன் மீது தாக்குதலை மேற்கொண்டதாக பரமேஸ்வரன் யாழ் பொலீஸ் நிலையத்தின் முறைபாடு பதிவு செய்துள்ளாா். இது தொடர்பில் ஊடகவியலாளா் பரமேஸ்வரனிடம் தொடர்பு கொண்டு கேட்ட...

வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள், தமது உரிமைகளுக்காக ஆயுதம் ஏந்தாத ஒரு போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டும்” என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் வி.தர்மலிங்கத்தின் 32ஆவது ஆண்டு நினைவு தினம், தாவடியில் அமைந்துள்ள அவரது நினைவுத் தூபியில் நேற்று (03) இடம்பெற்றது. இந்த நிகழ்வில்...

வவுனியா குருமன்காட்டு சந்திக்கு அருகாமையில் புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள வலுவூட்டல் நிலையமொன்றிற்குள் வாள்களுடன் புகுந்த குழுவொன்று கடையை சூறையாடியதுடன் விற்பனை நிலைய உரிமையாளரையும் வெட்டிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம்தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நேற்றிரவு 10.20 மணியளவில் வவுனியா குருமன்காடு புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள உடல் வலுவூட்டல் நிலையமொன்றிற்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல் அதன்...

இலங்கையின் இராணுவத்தளபதிகள் மற்றும் இராணுவத்தினரின் விடயங்களில் சர்வதேசம் தலையிட முடியாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 66ஆவது ஆண்டு நிறைவு விழா பொரளை கெம்பல் பார்க் மைதானத்தில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “தற்போது முன்னாள் இராணுவத்தளபதி ஜகத் ஜயசூரியவிற்கு எதிராக...

2012 ம் ஆண்டு ஆனந்த விகடனில் அநாமதேயமான முன்னாள் போராளி ஒருவரின் பேட்டி வெளியாகியிருந்தது அப்பேட்டியில் முன்னாள் போராளி ஒருவர் தான்பல்வேறு கொடுமைகளை சந்தித்து பாலியல் கொடுமைகளுக்கு உள்ளகிய நிலையில் வேறுவழியின்றி தற்போது பாலியல் தொழில் செய்வதாக ஒப்புதல் வாக்குமூலம் கூறியதாக வெளியாகயிருந்தது. அந்த பேட்டியினை கண்டவர் ஈழத்து மாணவ பத்திரிகையாளரான அருளினியன் ஆவார்....

‘எம் அரசியல் தீர்வின் அடிப்படைகளும் சிறிலங்காவின் உத்தேச அரசியலமைப்பு முயற்சியும் ‘ தமிழ் மக்கள் பேரவையின் கருத்துப்பகிர்வும் பிரகடனமும். செப்டம்பர் 5 – காலை 9 மணி; யாழ் வீரசிங்கம் மண்டபம் தமிழ் மக்கள் பேரவையானது, துறைசார் நிபுணர்களின் உதவியுடன் சர்வதேச நாடுகளின் அரசியல் அனுபவங்களிற்கேற்ப ,தமிழர்களின் இருப்பை பாதுகாக்கும் அரசியற்கோரிக்கைகளையும் ஒரு தீர்வு யோசனையாக...

தன்னை அமைச்சர் பதவியிலிருந்து, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நீக்கியமையை எதிர்த்து, வடமாகாண முன்னாள் அமைச்சர் பா.டெனிஸ்வரன் மனுத்தாக்கல் செய்துள்ளார். மேன்முறையீட்டு நீதிமன்றிலேயே அவர் மனுத் தாக்கல் செய்துள்ளார். தன்னைப் பதவி நீக்கியதற்கு எதிராகத் தடை விதிக்கும்படியும், வடமாகாண சபையின் உறுப்பினர்களான குணசீலன் மற்றும் சிவநேசன் ஆகியோருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டமைக்கு எதிராகத் தடை விதிக்குமாறும் அந்த...

நாடு பிரிக்கப்படுவதை விரும்பவில்லை எனவும், மாறாக நாட்டில் வாழும் அனைத்து சிறுபான்மை இனத்தவரும் சுயகௌரவத்துடனும், சுயமரியாதையுடனும் வாழ வேண்டும் என்பதே தமது எதிர்பார்ப்பு என கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க் கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் நாட்டுக்கு வருகை தந்துள்ள ஐக்கிய அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலக தூதுவர் அலிஸ் வெல்ஸ்க்கும் இடையிலான...

இலங்கைத் தமிழர்களின் நிரந்தரத் தீர்விற்கு இந்தியா உதவுவதுடன், அவர்களை இந்தியா ஒருபோதும் கைவிடாது என இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பு அலரி மாளிகையில் நடைபெற்றது. இதன்போது கருத்துத் தெரிவித்தபோதே சுஷ்மா சுவராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது...

தமிழீழ விடுதலைப் புலிகளின் (எல்.ரீ.ரீ.ஈ) புலனாய்வுத் துறை என்ற பெயரில், அந்த இயக்கத்தின் இலட்சினையுடன் அச்சடிக்கப்பட்ட துண்டுப் பிரசுரங்கள், வவுனியாவில் உள்ள வீதிகள் சிலவற்றில், வீசப்பட்டு கிடந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. வவுனியா, குருமன்காடு பிரதேசத்தில் உள்ள வீதிகள் மற்றும் சிறி டெலோ கட்சியின் காரியாலயத்துக்கு அண்மையில், வீசப்பட்டுக் கிடந்த நிலையிலேயே அந்தத் துண்டுப் பிரசுரங்களை...

All posts loaded
No more posts