- Thursday
- September 4th, 2025

தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்கான போராட்டத்தில் மெழுகாய் உருகி தன்னுயிரை ஈகம் செய்த மாவீரன் தியாகி லெப் கேணல் திலீபன் அவர்களின் 30ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று நல்லூர் தெற்கு வீதியில் உள்ள அவரது நினைவுத் தூபி அமைந்திருந்த இடத்தில் காலை 10.10 மணிக்கு நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பமானது. முதல் நிகழ்வாக கடந்த 23...

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் இன்று முதல் தனது வேலைத்திட்டங்களை ஆரம்பிக்கின்றது. இந்த அலுவலகத்தை செயற்பட இடமளிப்பது தொடர்பான வர்த்தகமானி அறிவித்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த செவ்வாய்கிழமை கைச்சாத்திட்டார். காணாமல் போனவர்களது பெற்றோர் மற்றும் உறவினர் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், ஜனாதிபதி இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. காணாமல் போனோர் தொடர்பான...

கிளிநொச்சி மாவட்டத்தில் மாவீரர் துயிலும் இல்லம் அமைப்பதற்கு கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றம் நேற்று அனுமதி அளித்துள்ளது. குறித்த துயிலுமில்லமானது வடமாகாணசபைக்குட்பட்டதும் பிரதேச சபையின் அனுமதியுடனும் அமைக்கப்படவேண்டுமெனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் துயிலுமில்லம் அமைப்பது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஆனந்தராஜா இவ்வுத்தரவைப் பிறப்பித்துள்ளார். சில மாதங்களுக்கு...

யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையுடன் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகள் தப்பிவிட்டனர் என்றும், வழக்குத் தொடுனர் தரப்பினால் முன்வைக்கப்பட்ட சாட்சியங்கள் அனைத்தும் நம்பகத்தன்மை அற்றதெனவும் எதிரிகள் தரப்பு சட்டத்தரணிகள் தமது தொகுப்புரையில் தெரிவித்துள்ளனர். மாணவி கொலை வழக்கின் வழக்கு தொடுனர் தரப்பு மற்றும் எதிரிகள் தரப்பு சாட்சி பதிவுகள் கடந்த மாதம் நிறைவடைந்த நிலையில் கடந்த இரு...

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரது கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஐவருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது. அத்தோடு, இவர்கள் ஐவருக்கும் வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த பிணை கோரிய விண்ணப்பம், யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, குறித்த சந்தேகநபர்கள்...

நாட்டில் யுத்தம் இல்லாததால், இராணுவ வீரர்களைக் கொண்டு கஞ்சா வளர்க்கும் முயற்சியை மேற்கொள்வதாக, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார். நாட்டிற்கு அவசியமான மூலிகை மருத்துவத்திற்கு முக்கிய மூலப்பொருளாக விளங்கும் கஞ்சா மற்றும் அபின் என்பவற்றை வேறு நாடுகளில் இருந்து பெற்றுக் கொள்வதில் உள்ள சிரமங்களின் அடிப்படையில், அவற்றை உள்நாட்டில் உற்பத்தி செய்ய முடிவு செய்ததாகவும்...

பருத்தித்துறை –யாழ்ப்பாணம் பிரதான வீதியில் உள்ள வீடு ஒன்றிற்குள் புகுந்து பகல் கொள்ளையில் ஈடுபட்ட நபரை பொதுமக்கள் கையும் மெய்யுமாக பிடித்த சம்பவம் நேற்று(13) மதியம் இடம்பெற்றுள்ளது. கோப்பாய் பிரதேச செயலகத்திற்கு அருகில் உள்ள வீடு ஒன்றிற்குள் புகுந்து திருட முற்பட்ட சமயம் குறித்த நபர் கையும் மெய்யுமாக பிடிபட்டுள்ளார். பிடித்த இளைஞனை அப் பகுதி...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தன்னுடன் நட்பு பாராட்டுவது போலவும் அன்புடன் பேசுவது போலவும் வெளிப்படுத்தி, தான் விடுத்த கோரிக்கைகளைக் கணக்கிலெடுக்காமல் உதாசீனம் செய்தார் என, வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். சிரேஷ்ட ஊடகவியலாளராக குசல் பெரேராவின், "மஹிந்த - சிங்கள செல்பி" என்ற நூல் வெளியீடு நேற்று இடம்பெற்ற போது, அதில்...

சாவகச்சேரி, கிராம்புவில் பகுதியிலுள்ள வீடொன்றிட்குள் புகுந்த அடையாளம் தெரியாத குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு தாக்குதலில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றதுடன், சம்பவத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, மோட்டார் சைக்கிள்களில் வந்த 12 பேர் கொண்ட அடையாளம் தெரியாத குழுவொன்று கிராம்புவில் பகுதியிலுள்ள வீடொன்றிட்குள் நுழைய...

யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கு தொடுனர் மற்றும் எதிரி தரப்பின் தொகுப்புரைகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) தீர்ப்பாயம் முன்னிலையில் இடம்பெற்று வருகின்றன. இதில் முதலாம் மற்றும் ஏழாம் எதிரிகளுக்கு எதிரான சாட்சியங்கள் பற்றிய விபரங்கள் தெரிவிக்கப்பட்ட வில்லை. குறித்த வழக்கு விசாரணைகள் மூன்று நீதிபதிகள் அடங்கிய “ட்ரயலட் பார்” முறையில் இடம்பெற்று வரும் நிலையில், நேற்று...

20 வது திருத்தச் சட்டத்தில் உத்தியோகபூர்வமாக திருத்தங்கள் செய்யப்படாத நிலையில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக கூறிக்கொண்டு 20 வது திருத்தச் சட்டத்தை ஆதரிக்க தமிழரசு கட்சியினர் எடுத்திருக்கும் நிலைப்பாட்டை ஈ.பி.ஆர்.எல்.எவ் வன்மையாக கண்டிக்கின்றது. அதேவேளை தமிழரசு கட்சியின் இத்தகைய தீர்மானம் தமிழ் மக்களை நிச்சயமாக படுகுழிக்குள் தள்ளுவதாகவே அமையும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சியான...

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு தொகுப்புரைக்காக இன்று செவ்வாய்கிழமை நீதாயவிளக்கம் ( ரயல் அட் பார் ) கூடவுள்ளது. புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதியின் இரண்டாம் மாடியில் மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில் நீதாயவிளக்கம்...

யாழ். சர்வதேச திரைப்பட விழா, தியாகி திலீபனின் தியாகங்களை கொச்சைப்படுத்துவதாக அமையக்கூடாது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. யாழில் நடைபெறவுள்ள சர்வதேச திரைப்பட விழா தொடர்பில், குறித்த கட்சி விடுத்துள்ள ஊடக அறிக்கையின் மூலமாகவே இதனைக் குறிப்பிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழ் மக்களின் உரிமைக்காக திலீபன் தன்னுயிரை மெழுகாய் உருக்கிய...

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக, நம்பிக்கையில்லா பிரேரணையை கையளிப்பதற்கு, உறுப்பினர்கள் சிலர் நடவடிக்கை எடுத்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை திட்டம் தொடர்பில் மிக இரகசியம் பேணப்பட்டு நடவடிக்கைகள் பேணப்பட்டுவந்தன. எனினும் பிரேரணைக்கு போதியளவு உறுப்பினர்களின் ஆதரவின்மையால் முதலமைச்சர் சார்பு உறுப்பினர்களின் ஆதரவு கோரப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் மூலமே தகவல் வெளிக்கசிந்ததாக தெரியவருகின்றது. மாகாண...

முன்னாள் விவசாய அமைச்சரும் வடமாகாணசபை உறுப்பினருமான பொ.ஐங்கரநேசனுக்கு ஒதுக்கப்பட்ட மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியில் இருந்து போரினால் பாதிக்கப்பட்ட இரண்டு குடும்பங்களுக்கு வீடுகள் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாகாணசபை உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களால் பரிந்துரைக்கப்படும் அபிவிருத்தி வேலைகளை முன்னெடுப்பதற்கென குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியாக ஆண்டுதோறும் 6 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டு வருகிறது....

வவுனியா தேக்கவத்தை பகுதி வீதியில் ராணுவச்சீருடை மீட்கப்பட்டதையடுத்து, அப்பிரதேசத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று (திங்கட்கிழமை) காலை பொதுமக்களால் கண்டுபிடிக்கப்பட்ட குறித்த சீருடையில் விசேட அதிரடிப்படையினரின் இலச்சினை பொறிக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் குறித்த பகுதிக்குச் சென்ற வவுனியா பொலிஸார், அவற்றை மீட்டு விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். குறித்த இராணுவச்சீருடை மற்றும் விஷேட அதிரடிப்படையினரின் இலச்சினை என்பன...

மகிந்த ராஜபக்ச மீண்டும் அதிகாரத்துக்கு வந்து விடுவார் என்ற அச்சத்தினால், தற்போதைய அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதைத் தவிர்த்து வருவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். பிபிசி சிங்கள சேவைக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “தமிழ் மக்களுக்கு ஏதாவது நன்மை செய்து விட்டால், மகிந்த ராஜபக்ச மீண்டும் அதிகாரத்தைக்...

யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் என குறிப்பிடப்பட்டுள்ள சுவிஸ்குமாரை தப்பிக்க வைக்க, மிகவும் பிரபல்யமான ஒருவர் செயற்பட்டுள்ளதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான அசாத் சாலி குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் இவ்வாறு குறிப்பிட்ட அசாத் சாலி, உண்மையான குற்றவாளியை கைதுசெய்ய அரசாங்கம்...

கடந்தகால யுத்தம் காரணமாக ஆயுத கலாசாரத்திற்கு மத்தியில் வாழ்ந்த வடக்கு மக்களின் மனநிலையில், மாற்றம் ஏற்படுவது அவசியம் என்று பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். வடக்கு மக்களின் எண்ணங்களும் சிந்தனைகளும் ஆயுதக்கலாசாரத்துடன் கலந்ததென குறிப்பிட்ட அவர், இந்த மனநிலையில் மாற்றம் ஏற்படுவது அவசியமென மேலும் குறிப்பிட்டுள்ளார். தனியார் தொலைக்காட்சியொன்றிற்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு...

நல்லாட்சியின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ராணுவத்திடம் இருந்து எழுகின்ற அழுத்தங்களை மீறி காணாமல் ஆக்கப்பட்டவா்களின் விடயத்தில் செயற்படுவரா என காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்களை நோக்கி ஜரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் கேள்வி எழுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது, தம்மால் அதனை உறுதியாக கூற முடியாது எனவும், அவரால் அவ்வாறு எதனையும் செய்ய முடியாது என காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள்...

All posts loaded
No more posts