- Sunday
- September 7th, 2025

இந்திய அரசுகளிடம் ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து, உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து உயிர்நீத்த தியாகதீபம் லெப்.கேணல் திலீபனின் 30 ஆவது ஆண்டு நினைவேந்த நிகழ்வு நேற்று நல்லூரில் இடம்பெற்றது. நல்லூர் கந்தன் ஆலய வீதியில் 12 நாட்கள் உண்ணா நோன்பிருந்த தியாகதீபம் திலீபன், 1987ஆம் ஆண்டு செப்ரெம்பர் 26ஆம் நாள் காலை 10.48 மணியளவில் வீரச்சாவை...

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று (திங்கட்கிழமை) உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 214 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தமது கோரிக்கைகளுக்கு இதுவரை ஆக்கபூர்வமான பதிலேதும் சம்பந்தப்பட்டவா்களினால் வழங்கப்படாத நிலையில் சர்வதேசம் தமக்கான நீதியை பெற்றுத்தரவேண்டும் என கோரி இருநாள் உணவு தவிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். வவுனியா கந்தசாமி...

‘எவரையும் உதாசீனம் செய்யாமல் எல்லோரிடமும் நாங்கள் பேசி தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு நன்மை பயக்கக் கூடிய விடயங்களில் ஒருமித்து நாங்கள் தீா்மானங்களை எடுக்க விரும்புகிறோம்’ என எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்மந்தன் தெரிவித்தார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கல்முனை ஜெயா திருமண மண்டபத்தில் இடம்பெற்றது....

மன்னார் மாந்தை திருக்கேதீஸ்வரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான 10 ஏக்கர் காணியை அபகரித்து பௌத்த கோவில் அமைப்பது குறித்து மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளார். குறித்த பௌத்த விகாரையை எதிர்வரும் 29 ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்படவுள்ள நிலையிலேயே...

காலம் பதில் சொல்லும் போது மக்களே எங்களை அரசியல் செய்யச் சொல்வார்கள். அதுவரை அரசியலுக்கு வரும் எண்ணம் எங்களுக்கு இல்லை என புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட நபர்களின் ஒன்றியத் தலைவர் கந்தசாமி இன்பராசா தெரிவித்தார். மூதூர் கிழக்கு கட்டைபறிச்சானில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,...

இலங்கையின் புதிய அரசியலமைப்பு குறித்த இடைக்கால அறிக்கையின் மூலம், தமிழ் மக்கள் நடுத்தெருவில் விடப்படப் போகின்றனர் என்பது புலனாகிறது என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் முன்வைக்கப்பட்ட அரசியலமைப்பு சபையின் வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவித்த அவர்,...

முன்னாள் ராணுவ தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூரியவுக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகளுக்கு எவ்வித ஆதாரமும் இல்லையென இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்றில் நேற்று (வியாழக்கிழமை) உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, ஜகத் ஜயசூரிய தொடர்பில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வெளியிட்டுள்ள கருத்துக்கள் யாவும் அவருடைய தனிப்பட்ட கருத்துக்கள் என்றும்...

பிரபாகரனுக்கு நந்திக்கடலில் ஒரு நினைவுத்தூபி அமைக்கப்பட வேண்டும் என்று ஞானசார தேரர் கூறியமை துட்டகைமுனு அன்று கையாண்ட விடயமாகும் என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு – ஏறாவூர்ப்பற்று சவுக்கடி தமிழ் கிராமத்தில் இடம்பெற்ற தமிழினப் படுகொலையின் 27ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை...

பிளவுபடாத, பிரிக்கப்பட முடியாத ஐக்கிய இலங்கை என்ற உறுதியான கட்டமைப்புக்கு அமைவாக, யாவரும் சுயமாக விரும்பி ஏற்றுக்கொள்ள கூடிய வகையில் அரசியல் அமைப்பு உருவாக்கப்படும் என எதிர்க கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். உத்தேச அரசியல் யாப்பிற்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை நேற்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றில் சமர்பிக்கப்பட்ட பின்னர் உரையாற்றிய போதே சம்பந்தன் இதனை...

மாகாண சபைகளுக்கான தேர்தல் திருத்தச் சட்டமூலம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. நேற்று(புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் குறித்த சட்டமூலத்தின் மூன்றாவது வாசிப்பு மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக 159 வாக்குகளும், எதிராக 37 வாக்குகளும் அளிக்கப்பட்டதன் மூலம் குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இச்சட்ட மூலத்துக்கான வாக்கெடுப்பு நேற்று இரவு 6.30 மணிக்கு நடைபெற...

தீர்வு வரும் வராமல் போகலாம். நாங்கள் நிதானமாகச் செயற்பட வேண்டும். அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, தலைமை அமைச்சர் ரணில் விக்கிரம சிங்க இருவரும் தமது கட்சி உறுப்பினர்களை ஒழுங்காக முறையாக வழிநடத்த வேண்டும். இனிமேல்தான் முக்கிய தருணங்கள் இருக்கின்றன. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். தமிழ்ப் பத்திரிகை...

இலங்கையில் அதிகமான சித்திரவதைகள் நடைபெற்ற முகாமாக கருதப்படும் ஜோசப் முகாமில், பெண்களின் கதறல் சத்தங்களும் ஆண்களின் அழுகுரலும் தனக்கு கேட்டதாக, தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனின் மனைவியான சசிரேகா குறிப்பிட்டுள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உள்ளக அரங்கில் இடம்பெற்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்....

இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல், ஜனநாயக சுதந்திரத்தை மறுசீரமைத்தல், சட்டம் மற்றும் மனித உரிமைகளை நிலைநாட்டுதல் போன்றவற்றிற்காக அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லும் செயற்பாடுகளுக்கு சர்வதேச சமூகம் பூரண ஆதரவை வழங்கவேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஐ.நா. பொதுச் சபை அமர்வில் நேற்று (புதன்கிழமை) காலை உரையாற்றிய போதே அவர் இக் கோரிக்கையை முன்வைத்தார். மேற்குறித்த விடயங்கள்...

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தினை நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடனும் சர்வஜன வாக்கெடுப்பு மூலமும் நிறைவேற்றுவது அவசியமென உச்ச நீதிமன்றத்தினால் பரிந்துரைக்கப்பட்டமையை சபாநாயகா் கரு ஜயசூரிய இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். 20ஆவது சட்டத் திருத்த சட்டமூலதத்திற்கு பெரும்பாலான மாகாண சபைகள் தங்களுடைய எதிா்ப்பை தெரிவித்திருந்த நிலையில் பல்வேறு தரப்பினா் இணைந்து அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக...

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளவர்களின் வழக்குகளைத் துரிதப்படுத்துவதற்கு சட்டமா அதிபர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக சிறைச்சாலைகள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். சிறிலங்கா பவுண்டேசனில் நடைபெற்ற சிறைக்கைதிகள் நாள் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள 73 பேரின் வழக்குகளை துரிதமாக முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக,...

யாழ். மாவட்டத்திலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை பராமரிக்கும் வகையிலான தீர்மானமொன்று, மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) நிறைவேற்றப்பட்டது. ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவர்களான வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஆகியோர் தலைமையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில், இதற்கான பிரேரணையை தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற...

வட மாகாண சபையின் அடுத்த முதலமைச்சராக வரக்கூடியவர் இந்த மண்ணில் இருப்பவராகவும், மண்ணுக்காக பாடுபட்டவராகவும், அரசியல் மற்றும் நிர்வாகங்கள் தெரிந்தவராகவும் இருக்க வேண்டும் என வட மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சி நிகழ்வில் பங்குபற்றி கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவா் வே. பிரபாகரன்...

தமிழீழ விடுதலைப் புலிகளின் காலப்பகுதியில் நல்ல நிர்வாகக் கட்டமைப்புக்கள் காணப்பட்டன என்று நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். அங்கஜன் இராமநாதனின் ஏற்பாட்டில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணம் நாவலர் கலாச்சாரமண்டபத்தில் சர்வதேச தொழிலாளர் சங்கமும் ஸ்ரீலங்கா சுதந்திர தொளிலாளர் சங்கமும் இணைந்து நடாத்திய விழிப்புணர்வுக் கல்விக்கருத்தரங்கில் பிரதம விருந்தினராக கலந்து உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்தார்....

தியாகி திலீபனின் நினைவேந்தல் அனுஸடிக்கப்பட்டுவரும் நிலையில் யாழ்ப்பாணம் நல்லூரிலுள்ள அவரது நினைவுத் தூபிக்கு முன்பாக இனந்தெரியாத நபர்களால் ரயர்கள் போடப்பட்டு தீயிட்டுக் கொடுத்தபட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு 10.00 மணியளவில் மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த திலீபன் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழு அங்கத்தவர் திரு சு.சுதாகரன் அவர்கள் இச் சம்பவத்தை மிகவும்...

யாழ்.நகர்ப் பகுதியில் உள்ள சில கரையூர் பிரதேசங்களில் உள்ள கிணறுகளில் மலத்தொற்று கிருமி கலந்துள்ளதால் 100 இற்கு மேற்பட்ட கிணறுகள் மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஈகோலி என்னும் மலத்தொற்று கிருமி கிணறுகளில் கலந்துள்ளதாக யாழ் மாநகர சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக குருநகர் பாசையூர் கொட்டடி நாவாந்துறை போன்ற கரையூர் பிரதேச மக்கள் குடிதண்ணீர்...

All posts loaded
No more posts