- Monday
- September 8th, 2025

கிளிநொச்சியில் இயங்கி வருகின்ற மகாதேவ சைவ சிறார் இல்லத்தில் சித்திரவதைக்குள்ளான ஜந்து சிறுவா்கள் சிறுவா் நன்நடத்தை மற்றும் சிறுவா் பாதுகாப்பு அதிகாரிகளால் மீட்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா் குறித்த ஜந்து சிறுவா்களும் மின்சார வயர் மற்றும் ஹொக்கி பட் போன்றவற்றால் தாக்கப்பட்டுள்ளனா் எனவும் உடலின் பல பகுதிகளிலும் உட்காயங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எனவே...

வடக்கு மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஆசிய பசுப்பிக் பிராந்தியத்திற்கான அமைச்சர் மார்க் பீல்ட் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பில் கலந்துக் கொண்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தாம் பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டும் இதுவரை எந்த தீர்வும் வழங்கப்படவில்லை என எடுத்து கூறினர். இதன் போது காணாமல் போன தமது உறவுகளின் புகைப்படங்களையும்...

ஐக்கிய இராச்சியத்தின் ஆசிய பசுப்பிக் பிராந்தியத்திற்கான அமைச்சர் மார்க் பீல்ட்டுக்கும், வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரேக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (வெள்ளிக்கிழமை) காலை இடம் பெற்றுள்ளது. இதன் போது வடக்கு மாகாணத்தின் தற்போதய நிலைமைகள் நல்லிணக்கத்திற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆளுநரிடம் மார்க் பீல்ட் தலைமையிலான தூதுக்குழுவினர் கேட்டறிந்து கொண்டனர். வடக்கில் முதலீடுகளை...

நல்லூர் வீதியில் உள்ள தியாகி திலீபனின் நினைவுத் தூபியை அமைப்பதில் இருந்த தடை நீக்கப்பட்டுவிட்டதாக வட மாகாண சபை பேரவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார். இந்நிலையில் ஏற்கனவே இப்புனரமைப்பு பணிக்காக பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் ஒதுக்கியுள்ள நிதியைக் கொண்டு வேலைகளை மாநகர சபை ஆரம்பிக்க வேண்டும் . இத்தூபியைப் புனரமைத்து பாதுகாப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

சமகால அரசாங்கத்தின் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் நடவடிக்கைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதய சுத்தியுடன் பங்குபற்றியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இலங்கையில் உத்தியோகபூர்வ விஜயத்தில் ஈடுபட்டுள்ள ஆசிய - பசுபிக் பிராந்தியங்களுக்கான பிரிட்டன் அமைச்சர் மார்க் பீல்ட்டுக்கும் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனுக்குமிடையிலான சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த...

இலங்கை தமிழ் மக்களின் தீர்க்கப்படாத பிரச்சினையாக உள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில், தமிழ் தலைமைகள் இனியும் மௌனம் காக்காது உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரி, யாழ்.பல்கலைக்கழகத்திற்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோரியும், வவுனியா மேல் நீதிமன்றில் விசாரணையில் இருந்த தமிழ் அரசியல் கைதிகள் மூவரின் வழக்கை அநுராதபுரம்...

ஆயுதப் போராட்டத்திற்கு காரணமாக அமைந்த விடயங்கள் தொடர்ந்தும் நாட்டில் நீடிப்பது பாரிய பிரச்சனையாக உள்ளதென இலங்கையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இத்தகைய இனவாதச் செயற்பாடுகள் விரைவில் நீக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார். நாட்டை காக்கின்றோம் எனக் கூறி சிலர் மேற்கொள்ளும் இனவாதச் செயற்பாடுகள், இறுதியில் துன்பத்திலேயே முடிவடையுமென...

உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடும் தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கையை உடனடியாகத் தீர்க்கக் கோரியும், தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சனைக்கு உரிய தீர்வை வழங்கக் கோரியும் இன்று காலை 10 மணிக்கு யாழ். பல்கலைக்கழகச் சமூகத்தினர் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர். இக்கவனயீர்ப்புப் போராட்டம் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனுராதபுரம் சிறையில் உள்ள...

புதிய அரசமைப்பு உருவாக்கம் ஒன்றின் ஊடாக தமிழ்த் தேசிய இறையாண்மை பிரச்சினைக்கான தீர்வு காணப்படுதல் என்பதனை விடுத்து, 'தீர்வு' இன்னதுதான் என்ற விடயத்தில் அரசாங்கத்துடன் முதலில் ஓர் இணக்கப்பாடு காணப்பட வேண்டும். அதன் பிற்பாடு, அந்த இணக்கப்பாட்டின் அடிப்படையில் புதிய அரசமைப்பு உருவாக்கப்படல் வேண்டும் என்பதுவே தமிழ் மக்கள் பேரவையின் நிலைப்பாடாகும் எனத் தமிழ்மக்கள் பேரவை...

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அரசாங்கத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு அழுத்தம் கொடுக்க வேண்டுமென தெரிவித்து, யாழ்ப்பாணத்தில் பாரிய கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான தேசிய அமைப்பினர் மற்றும் அரசியல் கைதிகளின் உறவினர்கள் இணைந்து ஏற்பாடு செய்த இந்த கவனயீர்ப்பு போராட்டம், யாழ். தமிழரசுக் கட்சி அலுவலகத்திற்கு முன்பாக இன்று (செவ்வாய்க்கிழமை)...

யாழ்ப்பாண மக்களுக்கு சட்ட உதவிகளை வழங்கும் நோக்கில், ‘சொலிடாரிடி சென்ரர்’ எனும் சட்ட உதவி அலுவலகம் திறந்துவைக்கப்பட்டுள்ளது. யாழ். நல்லூர் வீதியில் அமைக்கப்பட்டுள்ள இவ் அலுவலகத்தை, யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் மற்றும் சொலிடாரிடி நிறுவனத்தின் வதிவிட பணிப்பாளர் அலோன்சோ சசோன் ஆகியோர் இணைந்து நேற்று (திங்கட்கிழமை) சம்பிரதாயபூர்வமாக திறந்துவைத்தனர். இந்த அலுவலகத்தின் ஊடாக...

எனது மகளைப் படுகொலை செய்த கொலைகாரர்களிடமிருந்து ஒரு சதமும் வேண்டாம்” என புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் தாயார் தெரிவித்துள்ளார். 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி பாடசாலை சென்ற புங்குடுதீவைச் சேர்ந்த மாணவி சிவலோகநாதன் வித்தியா கடத்தப்பட்டு, பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக வழக்கு விசாரணைகள்...

நாட்டில் அரசாங்கம் இழைத்துவரும் துரோகத்துக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு துணை போவதாக, லங்கா சமசமாஜக் கட்சியின் தலைரான, பேராசிரியர் திஸ்ஸ விதாரண குற்றஞ்சாட்டியுள்ளார். யாழ். ஊடக அமையத்தில், இடம்பெற்ற ஊடகவியாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்ட விடயத்தை தெரிவித்திருந்தார். இந்நிலையில் அங்கு அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, “நாட்டில் அரசாங்கம் செய்து வருகின்ற துரோகச் செயல்களுக்கு, தமிழ்த் தேசியக்...

இந்த நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்று முதன் முறையாக கோரிய கட்சி இலங்கை தமிழரசுக்கட்சிதான் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் மன்னார் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,...

வடக்கிலிருந்து உடனடியாக இராணுவத்தை அகற்றும் எந்த தேவையும் இப்போது கிடையாது என இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க நேற்று (28) கண்டியில் தெரிவித்தார். எதிர்வரும் ஒக்டோபர் 10ஆம் திகதி இராணுவம் தனது 68ஆவது தினத்தை கொண்டாடவுள்ள நிலையில் நேற்று கண்டி தலதா மாளிகையில் பௌத்த மத ஆசீர்வாதங்களில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர்களிடம்...

புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன், வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கில், ஏழு பேருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன என, ட்ரயல் அட் பார் மன்று, சற்று முன்னர் தீர்ப்பளித்து, அவர்களுக்கு மரண தண்டனைத் தீர்ப்பளித்தது. மரண தண்டனையோடு, 30 ஆண்டுகளுக்குச் சிறைத் தண்டனையும், 40,000 ரூபாய் தண்டப் பணமும், வித்தியாவின் குடும்பத்துக்கு 1...

வித்தியா கொலையுடன் தொடர்புடைய 13 சந்தேகநபர்களும் 3 நீதிபதிகளும் யாழ். மாவட்ட நீதிமன்றுக்கு வருகை தந்துள்ளதாக எமது இணையத்தள செய்தியாளர் தெரிவித்தார். புங்குடுதீவு பாட சாலை மாணவியான சிவலோக நாதன் வித்தியாவின் கூட் டுப் பாலியல் வல்லுறவு படுகொலை வழக்கின் தீர்ப்பானது இன்றைய தினம் வழங்கப்படவுள்ளது. யாழ்.மேல் நீதிமன்றில் அமைக்கப் பட்டுள்ள தமிழ் மொழி பேசும்...

யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கின் தீர்ப்பு இன்று (புதன்கிழமை) வழங்கப்படவுள்ள நிலையில், சந்தேகநபர்களில் ஒருவரைக்கூட விடுதலை செய்யக் கூடாதென வித்தியாவின் குடும்பத்தார் குறிப்பிட்டுள்ளனர். வழக்கு விசாரணைகளின் போதே பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியிருந்த நிலையில், இவர்களில் யாரேனும் விடுதலை செய்யப்படும் பட்சத்தில் தமது உயிருக்கு ஆபத்து ஏற்படுமென குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். வித்தியா கொலைச் சந்தேகநபர்கள்...

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீடொன்றில் 7 வயது சிறுவனின் கையை அடித்து முறித்த சிறியதந்தை மற்றும் சம்பவத்தை வேடிக்கை பார்த்த தாயை பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று முன்தினம் (25) காலை இடம்பெற்ற குறித்த தாக்குதலில் சிறியதந்தையால் துன்புறுத்தப்பட்ட சிறுவன் தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். தாக்குதலுக்குள்ளன...

அண்மையில் வெளியிடப்பட்ட அரசியல் அமைப்பு சீர்திருத்தத்தின் இடைக்கால வரைபு தொடர்பில் ஆராய்ந்து கள நிலைமையை விளக்குவதற்கு தமிழ் மக்கள் பேரவை விரைவில் கூடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னோடியாக தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் உபகுழு இடைக்கால வரைபை ஆராயும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தமிழ் மக்கள் பேரவை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இடைக்கால வரைபு தொடர்பில் ஆராய்ந்து அவற்றில்...

All posts loaded
No more posts