Ad Widget

தமிழர் தாயகத்தில் சர்ச்சைக்குரிய சுவரொட்டி! : திட்டமிட்ட சதியா?

எதிர்வரும் தீபாவளி பண்டிகைக்கு தமிழ் மக்கள் யாவரும் இந்துக்களின் கடைகளில் பொருட்களை வாங்கவேண்டுமென குறிப்பிட்டு வவுனியாவில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள், பாரிய சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.

குறித்த சுவரொட்டிகளில் சிவசேனா அமைப்பின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தாலும், அவ் அமைப்பு அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

ஒரு பொருள் வணிக நிறுவனத்துக்கு விற்பனைக்கு வருமுன், பல கைகள் மாறியே வருகின்றது. அந்தக் கைகளுக்குள் எந்த இன பேதமும் இருப்பதில்லை. இந்நிலையில், இன மத முரண்பாட்டை தோற்றுவிக்கும் இச் சுவரொட்டிகளுக்கும் சிவசேனைக்கும் தொடர்பில்லையென குறித்த அமைப்பின் தலைவர் மரவன்புலவு சச்சிதானந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நல்லிணக்க செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அதனை சீர்குலைக்கும் வகையில் சில விசமிகளால் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கலாமென சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இன மத முரண்பாடுகளை தோற்றுவிக்க சில சக்திகள் முனைந்து வரும் நிலையில், அதனை தமிழ் தரப்பின் மீது சாட்டிவிட்டு தப்பிக்கும் வகையில் இவ்வாறான விசமத்தனமான செயற்பாடுகளை திட்டமிட்டு மேற்கொண்டிருக்கலாமெனவும் நம்பப்படுகிறது.

Related Posts