Ad Widget

வித்தியா கொலைக் குற்றவாளிகள் மேன்முறையீடு!

யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஏழு குற்றவாளிகள் சார்பிலும் யாழ். மேல் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

வழக்கின் பிரதான குற்றவாளியான சுவிஸ்குமார் மற்றும் அவரது அவரது சகோதரர் சார்பில், அவர்களது சட்டத்தரணிகள் தனியாக மேன்முறையீடு செய்துள்ளனர்.

அத்தோடு குறித்த ஏழு குற்றவாளிகள் சார்பிலும், அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள கண்டி போகம்பர சிறைச்சாலை அத்தியட்சகர் ஊடாக பிறிதொரு மேன்முறையீட்டு மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த மேன்முறையீட்டு மனுக்கள் தொடர்பில், வழக்கை விசாரித்த ட்ரயல் அட் பார் நீதிபதிகளுக்கு அறிவிக்கப்படவுள்ளதோடு, அதன் பின்னர் உயர் நீதிமன்றத்தின் ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாமிற்கு குறித்த மேன்முறையீட்டு மனு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

வித்தியா கொலை வழக்கில், ஏழு பேருக்கு எதிரான குற்றங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், யாழ். மேல் நீதிமன்ற ட்ரயல் அட் பார் தீர்ப்பாயத்தால் கடந்த மாதம் 27ஆம் திகதி குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதுடன் 30 வருட கடூழிய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts