Ad Widget

ஜனாதிபதி பங்கேற்கும் நிகழ்வுகளில் கூட்டமைப்பினர் பங்கேற்கப்போவதில்லை

யாழ்ப்­பாணம் இந்­துக்­கல்­லூரி விளை­யாட்டுத் திடலில் கல்வி அமைச்­சினால் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்ள அகில இலங்கை தமிழ் தினப்­போட்­டியில் வெற்­றி­பெற்ற மாண­வர்­க­ளுக்­கான பரி­சுகள் வழங்கும் வைபவம் உட்­பட பல்­வேறு நிகழ்­வு­களில் பிர­தம அதி­தியாக கலந்­து­கொள்­வ­தற்­காக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இன்­றை­ய­தினம் யாழ்ப்­பா­ணத்­திற்கு வரவுள்ளார்.

இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்­சித்­த­லை­வ­ரு­மான இரா.சம்­பந்தன், வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் உட்­பட கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் எவரும் இந்த நிகழ்­வு­களில் பங்­கேற்­கப்­போ­வ­தில்லை என்று அறி­வித்­துள்­ளனர்.

இன்று காலை 10 மணி முதல் பிற்­பகல் 1 மணி­வரை நடை­பெறும் தமிழ்த்­தின பரி­ச­ளிப்பு விழாவில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரி­ய­வசம், இரா­ஜாங்க அமைச்சர் வேலு­சாமி இரா­தா­கி­ருஷ்ணன் எதிர்க்­கட்சித் தலை­வரும், தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா. சம்­பந்தன், வட­மா­காண ஆளுநர் ரெஜினோல்ட் குரே , வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி. விக்­கி­னேஸ்­வரன் உட்­பட பலரும் பங்­கேற்­க­வுள்­ள­தாக அறி­விக்­க­பட்­ட­டி­ருந்­தது. இருப்­பினும் தற்­போது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு இந் நிகழ்வில் பங்­கேற்­ப­தில்லை என்ற நிலைப்­பாட்­டினை எடுத்­துள்­ளது.

தமிழ் அர­சியல் கைதி­களின் விவ­கா­ரத்­திற்கு அர­சாங்கம் தீர்­வொன்றை காண­வில்லை என்­ப­த­னாலும் ஜனா­தி­ப­தியை இவ்­வி­டயம் தொடர்பில் சந்­திப்­ப­தற்கு சந்­தர்ப்பம் வழங்­கு­மாறு கோரி­ய­போ­திலும் அதற்­கான நேரம் ஒதுக்­கப்­ப­டா­மையை கண்­டித்­துமே கூட்­ட­மைப்­பினர் இந்த நிகழ்­வு­களில் பங்­கேற்­ப­தில்லை என்ற தீர்­மா­னத்­தினை எடுத்­துள்­ள­தாக தெரி­கின்­றது.

ஆனாலும் இவ்­வி­யடம் தொடர்­பாக எதிர்க்­கட்­சித்­த­லை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் தெரி­விக்­கையில்,

குறித்த விழா ஏற்­பாட்­டார்கள் என்னை தொடர்பு கொண்டு அழைப்பு விடுத்­த­போது அத்­தி­னத்தில் எனக்கு வேறு கரு­மங்கள் இருப்­பதால் பங்­கேற்­பதில் சிர­ம­மான நிலை­யொன்று உள்­ளது. ஏனினும் அந்­நி­கழ்வு சிறப்­புற எனது வாழ்த்­துக்­களை தெரி­வித்தேன். மேலும் அந்­நி­கழ்­வுக்­கான வாழ்த்துச் செய்­தி­யொன்­றையும் அனுப்­பி­யுள்ளேன். நான் அந்­நி­கழ்வில் பங்­கேற்­காத விட­யத்­தினை ஏற்­பாட்­டா­ளர்­க­ளுக்கு முன்­கூட்­டியே அறி­வித்து விட்டேன் என்றார்.

எனினும் வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் யாழ்,மற்றும் வன்­னி­மா­வட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அனை­வரும் தாம் உண்­ணா­வி­ர­த­மி­ருக்கும் அர­சியல் கைதிகள் தொடர்­பாக விடுத்த கோரிக்கை குறித்து ஜனா­தி­பதி பாரா­மு­க­மாக இருக்­கையில் ஜனா­தி­பதி பங்­கேற்கும் இவ்­வா­றான நிகழ்வில் பங்­கேற்­பது பொருத்­த­மற்­றது என்ற தீர்­மா­னத்­தினை எடுத்­துள்­ள­தாக அறி­வித்­துள்­ளனர்.

மேலும் வழக்­கு­களை இட­மாற்­றக்­கோரும் சாதாரணதொரு விடயத்திலே சட்டமா அதிபர் திணைக்களத்தினை மையப்படுத்தி ஜனாதிபதி இத்தகைய இழுத்தடிப்புக்களைச் செய்வது பொருத்தமற்றதாகும். அத்தகையவர் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் எத்தனை தூரம் சாதகமாக சிந்திப்பார் என்றும் இவர்கள் ஆதங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts