Ad Widget

உணவு தவிர்ப்பு போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்!

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று (திங்கட்கிழமை) உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 214 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தமது கோரிக்கைகளுக்கு இதுவரை ஆக்கபூர்வமான பதிலேதும் சம்பந்தப்பட்டவா்களினால் வழங்கப்படாத நிலையில் சர்வதேசம் தமக்கான நீதியை பெற்றுத்தரவேண்டும் என கோரி இருநாள் உணவு தவிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியா கந்தசாமி கோவிலில் தேங்காய் உடைத்து வழிபாடுகளில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அங்கிருந்து தாம் போராட்டத்தினை முன்னெடுத்துவரும் ஏ9 வீதியின் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக தமது உணவு தவிர்ப்பு போராட்டத்தினை ஆரம்பித்தனர்.

இப்போராட்டம் இரண்டு நாட்கள் நடக்கவுள்ளதுடன் தன் பின்னர் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பில் ஈடுபடுவர்.

எனினும் குறித்த காலப்பகுதிக்குள் தமக்கான தீர்வு வழங்கப்படாவிட்டால் தொடர் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

Related Posts