- Tuesday
- September 2nd, 2025

வடக்கு மாகாணத்தில் கடந்த ஜூலை மாதம் நடத்தப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான பரீட்சைப் பெறுபேறுகள் தற்பொழுது வெளியாகியுள்ளன. வடக்கு மாகாணத்தின் பொதுச்சேவை ஆணைக்குழுவால் நடத்தப்பட்ட இந்தப் பரீட்சையில் வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் மட்டும் பரீட்சைகளுக்காக உள்ளீர்க்கப்பட்டிருந்தனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கதாகும். தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான நேர்முகத் தேர்வுகள் நடத்தப்பட்டு அவர்களுக்கான நியமனக் கடிதங்களை மிக விரைவில் வழக்கப்படவுள்ளதாக...

எப்பொழுதும் உரிமை உரிமை என பாலர் பாடசாலை முதல் எல்லா மேடைகளிலும் பேசுகின்ற அரசியல்வாதிகள் மக்களின் வறுமையை நீக்கி அவர்கள் மூன்று வேளை சாப்பிடுவதற்கும் வழி செய்ய வேண்டும் என கிளிநொச்சி பொன்னகர் மத்தி, அக்கராயன் கரிதாஸ் குடியிருப்பு மக்கள் தெரிவித்துள்ளனர். இவர்கள் உரிமையை பெற்றுத் தருகின்ற நேரத்தில் நாங்கள் உயிரோடு இருப்போமா என்ற நிலையில்...

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு நாட்படினது பல மாவட்டங்களில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இன்று (புதன்கிழமை) இடம்பெற்றன. முல்லைத்தீவு நகரில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவாஜிலிங்கம், சிவனேசன், ரவிகரன், புவனேஸ்வரன் உள்ளிட்ட அரசியல்வாதிகளும் பங்கு கொண்டிருந்தனர். நகர மத்தியில் இருந்து மாவட்ட செயலகம் முன்பாக...

சர்வதேச காணாமல்போனோர் தினத்தில் இன்று (புதன்கிழமை) முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தில் ஐ.நா. செயலாளருக்கு மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. யாழ்.நல்லூர் ஆலய முன்றலில் ஆரம்பமான குறித்த பேரணி யாழ்.ஐ.நா.அலுவலகத்தினைச் சென்றடைந்து அங்கு ஐ.நா.செயலாளர் அன்ரோனியோ குட்டரஸிற்கான மகஜர் கையளிக்கப்பட்டது. வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மற்றும் சிவில் சமூகங்கள் இணைந்து மேற்படி ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தன.

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டெம்பர் மாத இறுதிக்குள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறித்த வழக்கின் விசாரணை நேற்று (செவ்வாய்க்கிழமை) யாழ்.நீதிமன்ற கட்டடத் தொகுதியின் இரண்டாம் மாடியில் மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில் நீதாய...

பிரதேச அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு அரசாங்கம் போர் வெற்றிக்காக அன்பளிப்பாக வழங்கிய காணியில் வேலை புரிவதற்காக முன்னாள் போராளிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த காணியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீட்டின் கட்டட வேலைக்கான உதவியாளர்களாக பணியாற்ற வந்தவர்களில் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் நான்கு பேர் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு நாராஹென்பிட்டி ஹிங்...

யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா கொலையுண்ட பின்னர் யாழ். வேலணை மக்கள் தன்னைப் பிடித்து மரத்தில் கட்டிவைத்து அடித்த போது, ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனே தன்னை காப்பாற்றி குடும்பத்திடம் ஒப்படைத்தார் என வித்தியா கொலை வழக்கின் பிரதான சந்தேகநபர் எனக் கருதப்படும் சுவிஸ்குமார் சாட்சியமளித்துள்ளார். வித்தியா கொலை வழக்கின் எதிரிகள் தரப்பு சாட்சியப்பதிவு நேற்று...

‘கொழும்பில் பிளாட் வாங்கு வதற்குப் பணம் தேவையா கவுள்ளது. சீதனத் தொகையை 25 லட்சம் ரூபாவாக அதிகரித்துத் தாருங்கள்’’ என்று மண மகனின் தாயார் மணமகளி டம் கேட்டுள்ளார். அதன் பின்னரே முன்பள்ளி ஆசிரியை உயிரை மாய்த்தார் என்று இறப்பு விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. ஆசிரியை நேற்றுமுன்தினம் அவரது சகோதரியின் வீட் டின் குளியலறையில் தூக் கில்...

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 6ஆம் திகதி வரையில் இலங்கைக்கு சூரியன் உச்ச வெப்பநிலையை கொடுக்கும் சாத்தியம் காணப்படுகின்றது. இதனால் வடக்கில் மேலும் வெப்பநிலை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது, அடுத்த மாதம் 6 ஆம் திகதி வரையில் இலங்கைக்கு செங்குத்தாக சூரியன் பயணிக்கவுள்ளது....

யாழ்ப்பாணம் - மண்டைதீவு கடற்பரப்பில் இடம்பெற்ற படகு விபத்தில் பாடசாலை மாணவர்கள் உயிரிழந்தமைக்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது. குறித்த மாணவர்கள் பயணித்த படகு உரிய தரத்துடன் இல்லாமை மற்றும் மாணவர்கள் மதுபோதையில் இருந்தமையே இந்த அனர்த்தத்திற்கு காரணம் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. உயர்தர பரீட்சைக்கு தோற்றிய 7 மாணவர்கள், பிறந்த நாள் கொண்டாட்டம் ஒன்றுக்காக...

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் உடுத்துறைப் பகுதியில் நேற்று நள்ளிரவு யானைத் தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன. மேலும் இந்த தாக்குதலுக்கு இலக்கான இருவர் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் தெரியவந்துள்ளது. நேற்று நள்ளிரவு வேளையில் வடமராட்சி கிழக்கு ஆழியவளை மற்றும் வெற்றிலைக்கேணிப் பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் காணப்பட்டதாகவும் இதனை அறிந்த...

ராணுவ கட்டுப்பாட்டில் காணப்படும் யாழ். பருத்தித்துறை – பொன்னாலை வீதியில் போக்குவரத்து செய்ய மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட செயலாளர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். எனினும், இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேரூந்துகளில் ராணுவத்தின் பாதுகாப்புடனேயே மக்கள் தமது பிரயாணங்களை மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த இரு தசாப்தங்களுக்கு மேலாக ராணுவத்தின் கட்டுப்பாட்டில் காணப்பட்ட மயிலிட்டி துறைமுகம்,...

காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் வடமாகாணம் தழுவிய மாபெரும் போராட்டமொன்றை நடத்த எதிர்பார்த்துள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக மையத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் போனோரின் உறவினர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான...

பொலித்தீன்களை தடைசெய்யும் புதிய சட்டம் அமுல்படுத்தப்படவுள்ள நிலையில், அதற்கு மாற்றீடாக, உக்கக்கூடிய பொலித்தீன் வகையொன்று இனங்காணப்பட்டுள்ளதாக, மத்திய சுற்றாடல் அதிகாரசபை தெரிவித்துள்ளது. மாற்றீடாக அறிமுகப்படுத்தப்படும் புதிய பொலித்தீன் 100 நாட்களுக்குள் உக்கி அழியக்கூடியது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பொலித்தீனை நவம்பர் முதலாம் திகதியிலிருந்து விற்பனை நிலையங்களில் பெற்றுக்கொள்ள முடியும் என மத்திய சுற்றாடல் அதிகாரசபை...

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊற்றுபுலம் பகுதியில், இராணுவ வீரர்கள் இருவர் மீது வாள்வெட்டு நடத்தினர் என்ற சந்தேகத்தின் பேரில், அறுவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என, கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். நேற்று இரவு 10 மணியளவில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில், இராணுவத்தில் சேவையாற்றி விடுமுறையில் சென்ற இருவரே, காயமடைந்து கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இருவரில் ஒருவர், மேலதிக...

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கை துரிதப்படுத்துமாறு கோரியும், அரசாங்கத்திற்கு எதிராக எதிர்ப்புத் தெரிவித்தும் இன்று (வெள்ளிக்கிழமை) காலை ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கொழும்பில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகளின் தலைமைக் காரியாலயத்திற்கு முன்னால் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தினை தேசிய மகளிர் வழக்கறிஞர்கள் முன்னணி ஏற்பாடு செய்திருந்தது. இதன்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரால், ‘இதுவா நல்லாட்சி’, ‘நீதியரசர் இளஞ்செழியனை சுட...

கிளிநொச்சி ஊற்றுப்புலத்தை சேர்ந்த இரண்டு தமிழ் இராணுவத்தினர் வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், இருவரினதும் இடது கைகளில் வெட்டுக் காயம் ஏற்பட்டுள்ளதுடன், கிளிநொச்சி பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். காயமடைந்த இராணுவ வீரர்களின் நிலமையில் கவலையில்லை என்றும், வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்ட நபர்களை...

இலங்கை, இந்திய மீனவர் பிரச்சினையை தீர்க்க வித்தியாசமான ஒரு நடைமுறை பின்பற்றப்படும் என கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா தெரிவித்துள்ளார். கடற்படை தளபதியாக நியமிக்கப்பட்ட பின்னர் நடைபெற்ற முதல் செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார். இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் இந்திய மீனவர்களை அச்சுறுத்தும் செயற்பாடுகளை...

டக்கு கிழக்கில் விடுதலைப் புலிகள் மீள உருவாகுவதற்கான எந்த சூழ்நிலையும் தற்போது இல்லையென புதிய கடற்படை தளபதியான வைஸ் அட்மிரால் ட்ராவிஸ் சின்னையா தெரிவித்துள்ளார். கடற்படை தளபதியாக பதவியேற்ற பின்னர், நேற்று (புதன்கிழமை) முதன்முதலாக செய்தியாளர் சந்திப்பை நடத்திய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். யுத்தம் நிறைவடைந்து நாடு முழுமையான சமாதானத்தை நோக்கி நகர்ந்து செல்கின்ற நிலையில்,...

கேப்பாப்புலவு மக்களை மீளக்குடியமர்த்துவதற்காக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் எஞ்சியுள்ள காணியில் 111 காணியை விடுவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அங்குள்ள இராணுவ முகாமினை வேறோரு இடத்தில் அமைப்பதற்கான நிதியினை அரசாங்கம் வழங்கவுள்ளது. இதுதொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் காணி அமைச்சரும்...

All posts loaded
No more posts