Ad Widget

இன்று முதல் காணாமல் போனோர் அலுவலகம்

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் இன்று முதல் தனது வேலைத்திட்டங்களை ஆரம்பிக்கின்றது.
இந்த அலுவலகத்தை செயற்பட இடமளிப்பது தொடர்பான வர்த்தகமானி அறிவித்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த செவ்வாய்கிழமை கைச்சாத்திட்டார்.

காணாமல் போனவர்களது பெற்றோர் மற்றும் உறவினர் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், ஜனாதிபதி இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தை ஸ்தாபித்து கடந்த காலத்தில் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய உண்மைகளை கண்டறிந்து, அது தொடர்பில் நீதி நிலைநாட்ட வேண்டும் என்பது ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கோரிக்கையாக இருந்தது.

இந்த நிலையில் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் அமைக்கப்பட்டதை தமது பிள்ளைகளையும் உறவினர்களையும் இழந்த குடும்பங்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர்.

Related Posts