Ad Widget

வித்தியா படுகொலையின் பின்னணியில் செயற்பட்டவர்களை ஜனாதிபதி அறிந்து வைத்துள்ளார்!!!

யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் என குறிப்பிடப்பட்டுள்ள சுவிஸ்குமாரை தப்பிக்க வைக்க, மிகவும் பிரபல்யமான ஒருவர் செயற்பட்டுள்ளதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான அசாத் சாலி குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் இவ்வாறு குறிப்பிட்ட அசாத் சாலி, உண்மையான குற்றவாளியை கைதுசெய்ய அரசாங்கம் கூடுதல் கவனஞ்செலுத்த வேண்டியது அவசியமென வலியுறுத்தியுள்ளார்.

மேலும், வித்தியா படுகொலையின் பின்னணியில் செயற்பட்டவர்கள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரி அறிந்து வைத்துள்ளாரென குறிப்பிட்டுள்ள அசாத் சாலி, சுவிஸ்குமார் தப்பிச் சென்ற வழக்கில் கைதான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்க, திட்டமிட்டு இவ் வழக்கில் சிக்க வைக்கப்பட்டுள்ளாரென மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த பொலிஸ்மா அதிபர் பதவிக்கு லலித் ஜயசிங்கவே தகுதியுடையவர் என்றும், அதனை தடுக்கவே இவ்வழக்கில் அவர் சிக்கவைக்கப்பட்டுள்ளார் என்றும் அசாத் சாலி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வித்தியா படுகொலையின் பின்னணியில் செயற்பட்டவர்களை ஜனாதிபதி அறிந்து வைத்துள்ளார்

Related Posts