இந்திய வெளியுறவுச் செயலாளர் இலங்கைக்கு விஜயம்!!

இலங்கைக்கான ஒருநாள் விஜயம் மேற்கொண்டு வெளிவிவகார செயலர் ஶ்ரீ விக்ரம் மிஸ்ரி கொழும்பை வந்தடைந்தார்.

இந்த விஜயத்தின்போது அவர், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்டோரை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை – இந்திய இடையிலான வழமையான உயர் மட்ட பரிமாற்றங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் இந்த விஜயமானது நெருக்கமான இருதரப்பு உறவுகளை மீள வலுப்படுத்தும் அதேவேளை முக்கியமான முன்னெடுப்புகள் மீதான உத்வேகத்தையும் வலுவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts