- Saturday
- August 8th, 2026
இலங்கை தமிழ் மக்களின் தீர்க்கப்படாத பிரச்சினையாக உள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில், தமிழ் தலைமைகள் இனியும் மௌனம் காக்காது உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரி, யாழ்.பல்கலைக்கழகத்திற்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோரியும், வவுனியா மேல் நீதிமன்றில் விசாரணையில் இருந்த தமிழ் அரசியல் கைதிகள் மூவரின் வழக்கை அநுராதபுரம்...
ஆயுதப் போராட்டத்திற்கு காரணமாக அமைந்த விடயங்கள் தொடர்ந்தும் நாட்டில் நீடிப்பது பாரிய பிரச்சனையாக உள்ளதென இலங்கையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இத்தகைய இனவாதச் செயற்பாடுகள் விரைவில் நீக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார். நாட்டை காக்கின்றோம் எனக் கூறி சிலர் மேற்கொள்ளும் இனவாதச் செயற்பாடுகள், இறுதியில் துன்பத்திலேயே முடிவடையுமென...
உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடும் தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கையை உடனடியாகத் தீர்க்கக் கோரியும், தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சனைக்கு உரிய தீர்வை வழங்கக் கோரியும் இன்று காலை 10 மணிக்கு யாழ். பல்கலைக்கழகச் சமூகத்தினர் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர். இக்கவனயீர்ப்புப் போராட்டம் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனுராதபுரம் சிறையில் உள்ள...
புதிய அரசமைப்பு உருவாக்கம் ஒன்றின் ஊடாக தமிழ்த் தேசிய இறையாண்மை பிரச்சினைக்கான தீர்வு காணப்படுதல் என்பதனை விடுத்து, 'தீர்வு' இன்னதுதான் என்ற விடயத்தில் அரசாங்கத்துடன் முதலில் ஓர் இணக்கப்பாடு காணப்பட வேண்டும். அதன் பிற்பாடு, அந்த இணக்கப்பாட்டின் அடிப்படையில் புதிய அரசமைப்பு உருவாக்கப்படல் வேண்டும் என்பதுவே தமிழ் மக்கள் பேரவையின் நிலைப்பாடாகும் எனத் தமிழ்மக்கள் பேரவை...
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அரசாங்கத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு அழுத்தம் கொடுக்க வேண்டுமென தெரிவித்து, யாழ்ப்பாணத்தில் பாரிய கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான தேசிய அமைப்பினர் மற்றும் அரசியல் கைதிகளின் உறவினர்கள் இணைந்து ஏற்பாடு செய்த இந்த கவனயீர்ப்பு போராட்டம், யாழ். தமிழரசுக் கட்சி அலுவலகத்திற்கு முன்பாக இன்று (செவ்வாய்க்கிழமை)...
யாழ்ப்பாண மக்களுக்கு சட்ட உதவிகளை வழங்கும் நோக்கில், ‘சொலிடாரிடி சென்ரர்’ எனும் சட்ட உதவி அலுவலகம் திறந்துவைக்கப்பட்டுள்ளது. யாழ். நல்லூர் வீதியில் அமைக்கப்பட்டுள்ள இவ் அலுவலகத்தை, யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் மற்றும் சொலிடாரிடி நிறுவனத்தின் வதிவிட பணிப்பாளர் அலோன்சோ சசோன் ஆகியோர் இணைந்து நேற்று (திங்கட்கிழமை) சம்பிரதாயபூர்வமாக திறந்துவைத்தனர். இந்த அலுவலகத்தின் ஊடாக...
எனது மகளைப் படுகொலை செய்த கொலைகாரர்களிடமிருந்து ஒரு சதமும் வேண்டாம்” என புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் தாயார் தெரிவித்துள்ளார். 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி பாடசாலை சென்ற புங்குடுதீவைச் சேர்ந்த மாணவி சிவலோகநாதன் வித்தியா கடத்தப்பட்டு, பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக வழக்கு விசாரணைகள்...
நாட்டில் அரசாங்கம் இழைத்துவரும் துரோகத்துக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு துணை போவதாக, லங்கா சமசமாஜக் கட்சியின் தலைரான, பேராசிரியர் திஸ்ஸ விதாரண குற்றஞ்சாட்டியுள்ளார். யாழ். ஊடக அமையத்தில், இடம்பெற்ற ஊடகவியாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்ட விடயத்தை தெரிவித்திருந்தார். இந்நிலையில் அங்கு அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, “நாட்டில் அரசாங்கம் செய்து வருகின்ற துரோகச் செயல்களுக்கு, தமிழ்த் தேசியக்...
இந்த நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்று முதன் முறையாக கோரிய கட்சி இலங்கை தமிழரசுக்கட்சிதான் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் மன்னார் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,...
வடக்கிலிருந்து உடனடியாக இராணுவத்தை அகற்றும் எந்த தேவையும் இப்போது கிடையாது என இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க நேற்று (28) கண்டியில் தெரிவித்தார். எதிர்வரும் ஒக்டோபர் 10ஆம் திகதி இராணுவம் தனது 68ஆவது தினத்தை கொண்டாடவுள்ள நிலையில் நேற்று கண்டி தலதா மாளிகையில் பௌத்த மத ஆசீர்வாதங்களில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர்களிடம்...
புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன், வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கில், ஏழு பேருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன என, ட்ரயல் அட் பார் மன்று, சற்று முன்னர் தீர்ப்பளித்து, அவர்களுக்கு மரண தண்டனைத் தீர்ப்பளித்தது. மரண தண்டனையோடு, 30 ஆண்டுகளுக்குச் சிறைத் தண்டனையும், 40,000 ரூபாய் தண்டப் பணமும், வித்தியாவின் குடும்பத்துக்கு 1...
வித்தியா கொலையுடன் தொடர்புடைய 13 சந்தேகநபர்களும் 3 நீதிபதிகளும் யாழ். மாவட்ட நீதிமன்றுக்கு வருகை தந்துள்ளதாக எமது இணையத்தள செய்தியாளர் தெரிவித்தார். புங்குடுதீவு பாட சாலை மாணவியான சிவலோக நாதன் வித்தியாவின் கூட் டுப் பாலியல் வல்லுறவு படுகொலை வழக்கின் தீர்ப்பானது இன்றைய தினம் வழங்கப்படவுள்ளது. யாழ்.மேல் நீதிமன்றில் அமைக்கப் பட்டுள்ள தமிழ் மொழி பேசும்...
யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கின் தீர்ப்பு இன்று (புதன்கிழமை) வழங்கப்படவுள்ள நிலையில், சந்தேகநபர்களில் ஒருவரைக்கூட விடுதலை செய்யக் கூடாதென வித்தியாவின் குடும்பத்தார் குறிப்பிட்டுள்ளனர். வழக்கு விசாரணைகளின் போதே பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியிருந்த நிலையில், இவர்களில் யாரேனும் விடுதலை செய்யப்படும் பட்சத்தில் தமது உயிருக்கு ஆபத்து ஏற்படுமென குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். வித்தியா கொலைச் சந்தேகநபர்கள்...
யாழ்ப்பாணம் பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீடொன்றில் 7 வயது சிறுவனின் கையை அடித்து முறித்த சிறியதந்தை மற்றும் சம்பவத்தை வேடிக்கை பார்த்த தாயை பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று முன்தினம் (25) காலை இடம்பெற்ற குறித்த தாக்குதலில் சிறியதந்தையால் துன்புறுத்தப்பட்ட சிறுவன் தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். தாக்குதலுக்குள்ளன...
அண்மையில் வெளியிடப்பட்ட அரசியல் அமைப்பு சீர்திருத்தத்தின் இடைக்கால வரைபு தொடர்பில் ஆராய்ந்து கள நிலைமையை விளக்குவதற்கு தமிழ் மக்கள் பேரவை விரைவில் கூடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னோடியாக தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் உபகுழு இடைக்கால வரைபை ஆராயும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தமிழ் மக்கள் பேரவை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இடைக்கால வரைபு தொடர்பில் ஆராய்ந்து அவற்றில்...
இந்திய அரசுகளிடம் ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து, உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து உயிர்நீத்த தியாகதீபம் லெப்.கேணல் திலீபனின் 30 ஆவது ஆண்டு நினைவேந்த நிகழ்வு நேற்று நல்லூரில் இடம்பெற்றது. நல்லூர் கந்தன் ஆலய வீதியில் 12 நாட்கள் உண்ணா நோன்பிருந்த தியாகதீபம் திலீபன், 1987ஆம் ஆண்டு செப்ரெம்பர் 26ஆம் நாள் காலை 10.48 மணியளவில் வீரச்சாவை...
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று (திங்கட்கிழமை) உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 214 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தமது கோரிக்கைகளுக்கு இதுவரை ஆக்கபூர்வமான பதிலேதும் சம்பந்தப்பட்டவா்களினால் வழங்கப்படாத நிலையில் சர்வதேசம் தமக்கான நீதியை பெற்றுத்தரவேண்டும் என கோரி இருநாள் உணவு தவிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். வவுனியா கந்தசாமி...
‘எவரையும் உதாசீனம் செய்யாமல் எல்லோரிடமும் நாங்கள் பேசி தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு நன்மை பயக்கக் கூடிய விடயங்களில் ஒருமித்து நாங்கள் தீா்மானங்களை எடுக்க விரும்புகிறோம்’ என எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்மந்தன் தெரிவித்தார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கல்முனை ஜெயா திருமண மண்டபத்தில் இடம்பெற்றது....
மன்னார் மாந்தை திருக்கேதீஸ்வரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான 10 ஏக்கர் காணியை அபகரித்து பௌத்த கோவில் அமைப்பது குறித்து மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளார். குறித்த பௌத்த விகாரையை எதிர்வரும் 29 ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்படவுள்ள நிலையிலேயே...
காலம் பதில் சொல்லும் போது மக்களே எங்களை அரசியல் செய்யச் சொல்வார்கள். அதுவரை அரசியலுக்கு வரும் எண்ணம் எங்களுக்கு இல்லை என புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட நபர்களின் ஒன்றியத் தலைவர் கந்தசாமி இன்பராசா தெரிவித்தார். மூதூர் கிழக்கு கட்டைபறிச்சானில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,...
Loading posts...
All posts loaded
No more posts
