இலங்கைத் தமிழர்களின் தீர்வில் இந்தியா உறுதி: சுஷ்மா சுவராஜ்

இலங்கைத் தமிழர்களின் நிரந்தரத் தீர்விற்கு இந்தியா உதவுவதுடன், அவர்களை இந்தியா ஒருபோதும் கைவிடாது என இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார்

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பு அலரி மாளிகையில் நடைபெற்றது.

இதன்போது கருத்துத் தெரிவித்தபோதே சுஷ்மா சுவராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நிரந்தர அரசியல் தீர்வே இலங்கைத் தமிழர்கள் சகல உரிமைகளையும் பெற்று சுதந்திரமாக வாழ வழியமைக்கும் எனவும், நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை இலங்கை அரசுக்கு இந்தியா தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் என்னிடம் தெரிவித்திருக்கின்றார்.

அந்த வகையில் இந்தியா இலங்கைத் தழிழர் விடயத்தில் உறுதியான தீர்வுகளை வழங்கும். அவை ஒருபோதுமே இலங்கைத் தழிழர்களுக்கு பாதகமாக அமையாது” என இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பில் சுஷ்மா சுவராஜுடன் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலர் எஸ்.ஜெய்சங்கர், இலங்கைக்கான இந்தியத் தூதுவர் தரண்ஜித் சிங் சந்து மற்றும் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

Related Posts