டெனிஸ்வரனின் நடவடிக்கை வேதனையை ஏற்படுத்தியுள்ளது: செல்வம் அடைக்கலநாதன்

வடக்கு மாகாண அமைச்சர் டெனிஸ்வரன் கட்சியின் கட்டளை தொடர்பில் வெளியிட்டுள்ள கருத்து வேதனையை ஏற்படுத்தியுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் தொடர்பிலான நிலைப்பாடு குறித்து நாடாளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவரிடம் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் ஊடகங்களுக்கு...

வன்முறைச் சம்பவங்கள் மற்றும் அரசாங்கத்துக்கு எதிரான செயற்பாடுகளுக்கு புனர்வாழ்வளிக்கப்பட்ட புலிகள் பொறுப்பல்ல!!

“யாழ்ப்பாணத்தில், அண்மைக் காலமாக இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் மற்றும் அரசாங்கத்துக்கு எதிரான செயற்பாடுகளுடன், புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுக்கு எவ்விதத்திலும் தொடர்பு இல்லை” என்று, புனர்வாழ்வளிப்பு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜானக ரத்னாயக்க தெரிவித்தார். “நான் இதனை, நம்பிக்கையுடனும் மிகவும் பொறுப்புடனும் தெரிவித்துக் கொள்கின்றேன்” என்றும் அவர் குறிப்பிட்டார். வவுனியா, பூந்தோட்டம் புனர்வாழ்வு...
Ad Widget

தமிழ்மக்கள் பொறுமை இழந்துவிட்டனர்: இரா. சம்பந்தன்

காணி விவகாரத்தில் தமிழ்மக்கள் பொறுமை இழந்துவிட்டனர் எனவே சர்வதேச சமூகம் தலையிட வேண்டும் என ஐ.நா. செயலாளர், மனித உரிமைகள் ஆணையாளர் மற்றும் வெளிநாட்டு தூதரங்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்மந்தன் அவசர கடிதம் அனுப்பி வைத்துள்ளார். குறித்த கடிதத்தில், தமிழ் மக்களின் காணிகளில் இராணுவத்தினர் தொடர்ந்தும் குடியிருப்பது நல்லிணக்கத்திற்கு சாதகமான சமிக்ஞை அல்ல என்றும்...

துன்னாலை அமைதியின்மை: குழுவின் தலைவர் கைதானார்

யாழ். துன்னாலைப் பகுதியில் அண்மையில் ஏற்பட்ட அமைதியின்மைக்கு காரணமான குழுவின் தலைவரை இன்று (15) அதிகாலை இரண்டு மணியளவில் கைது செய்துள்ளதாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். துன்னாலைப் பகுதியை அண்மித்த முள்ளிக் காட்டுப் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போது இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், தற்போது இடம்பெற்று வரும் குழப்ப நிலைக்கு...

அமைச்சுப் பதவியில் இருந்து விலக மாட்டேன்: டெனிஸ்வரன்

வடக்கு மாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சிப்பொறுப்பில் இருந்து தான் ஒரு போதும் சுய விருப்பத்துடன் பதவி விலகப்போவதில்லை என்றும், கட்சியோ முதலமைச்சரோ தனக்கு பெரியவர்கள் இல்லை என்றும் அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார். அமைச்சுப் பதவியில் இருந்து விலகுமாறு டெனிஸ்வரனுக்கு டெலோ அறிவித்திருந்த நிலையில், அவரது நிலைப்பாடு குறித்து நேற்று (திங்கட்கிழமை) மன்னாரில் உள்ள அமைச்சரின் உபஅலுவலகத்தில்...

தமிழ் மக்களின் காணிகளை முஸ்லிம் மக்கள் அபகரிக்கின்றனர்: சுமணரத்ன தேரர்

தமிழ் மக்களுடைய காணிகளை முஸ்லிம் அமைப்புக்கள் அத்துமீறி கைப்பற்றுவதாகவும் அதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட சிங்கள தமிழ் இன விழிப்புணர்வுக்கான அமைப்பு தொடர்பான ஊடகவியலாளர் மகாநாடு நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மங்களராமய விகாரையில் இடம்பெற்றது. அதில் கலந்து...

சுவிஸ் குமார் தொடர்பில் மற்றுமொரு அதிர்ச்சியளிக்கும் செய்தி!!!

புங்குடுதீவை சேர்ந்த மாணவியான சிவலோகநாதன் வித்தியா வன்புணர்வு செய்யப்பட்ட பின்னர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான சுவிஸ் குமார் தொடர்பில் மற்றுமொரு அதிர்ச்சியளிக்கும் செய்தி வெளியாகியுள்ளது. சுவிஸ் குமார் என்று அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார், இதற்கு முன்னர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த யுவதிகளை பயன்படுத்தி ஆபாச காணொளி தயாரித்துள்ளார்.சுமார் 5 காணொளிகள் அவ்வாறு...

தமிழீழ விடுதலைப்புலிகளாக இருந்தால் அவர்களை படுகொலை செய்யுங்கள் நாங்கள் கேட்க வரமாட்டோம் : அமைச்சர் விஜயகலா

தமிழீழ விடுதலைப்புலிகளாக இருந்தால் அவர்களை இனம் கண்டு நீங்கள் படுகொலை செய்யுங்கள் நாங்கள் கேட்க வரமாட்டோம். ஆனால் எங்களுடைய அப்பாவி பொது மக்களை படுகொலை செய்திருக்கின்றீர்கள் என சிறுவா் பெண்கள் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நில மெஹர ஜனாதிபதி நடமாடும் சேவை...

ஷெல்களை தோள்களில் சுமந்துச்சென்று தாக்குதல்களை நடாத்திய எமக்கு கத்திகளுடனும் பிளேட்டுகளுடனும் அலையவேண்டிய தேவையில்லை!!

வடக்கில், ஆவாக்குழு என்று ஒரு மாயை உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அதன் பின்னணி வெளிப்படுத்தப்படவேண்டும் என்றும் ஜனநாயக போராளிகள் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது. ஷெல்களை தோள்களில் சுமந்துச்சென்று தாக்குதல்களை நடாத்தி, ஜனநாயக பாதைக்கு திரும்பியுள்ள முன்னாள் போராளிகள், கத்திகளுடனும் பிளேட்டுகளுடனும் அலையவேண்டிய தேவையில்லை என்றும் அக்கட்சியின் ஊடக செயலாளர் துளசி தெரிவித்தார். மட்டக்களப்பு, உப்போடை லயன்ஸ் கிளப் மண்டபத்தில் நடைபெற்ற...

ஆவா என்பது புலிகள் இல்லை: இராணுவத் தளபதி

வடக்கில் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் ஆவா குழுவினர் என்பது புலிகள் இல்லை எனவும், வடக்கின் தாக்குதல்களுக்கு புலிகளின் பெயர் உபயோகப்படுத்தப்படுவது ஏற்கத் தகாதது என்றும் புதிய இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். வடக்கின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவித்த அவர்,...

வடக்கில் மீண்டும் இரா­ணு­வப்­ப­தி­வுகள் ஆரம்பம்! : சிறி­தரன்

புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான செயற்­பா­டுகள் ஆமை வேகத்­தினை அடைந்­தி­ருப்­ப­தாக சபையில் சுட்­டிக்­காட்­டிய தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிவ­ஞானம் சிறி­தரன் வடக்கில் மீண்டும் இரா­ணு­வப்­ப­தி­வுகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் குறிப்­பிட்டார் பாரா­ளு­மன்­றத்தில் வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்ற இலங்கை மத்­திய வங்­கியின் 2016ஆம் ஆண்­டுக்­கான ஆண்­ட­றிக்கை குறித்த சபை ஒத்­தி­வைப்பு வேளை விவாதத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு...

சமுர்த்தி அனுகூலங்கள் மக்களுக்கு தொடர்ந்து கிடைக்கும்: ஜனாதிபதி

சமுர்த்தி அனுகூலங்களை குறைப்பதற்கு அல்லது நீக்குவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளாது என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தொவித்தார். நேற்றயதினம் முற்பகல் எம்பிலிப்பிட்டிய கம்உதாவ விளையாட்டரங்கில் நடைபெற்ற வளவை வலய விவசாய மக்களுக்கு 5000 காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி, ”சமுர்த்தி...

மாகாண சபைகளைக் கட்டுபடுத்தும் நாடாளுமன்ற சட்டமூலத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கவேண்டும் : சுரேஸ்

மாகாணசபைகளை நாடாளுமன்றத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கான சட்டமூலம் இயற்றப்பட்டால் அதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கவேண்டுமென ஈபிஆர்எல்எவ் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அவரது இல்லத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், இலங்கையில் வடக்குக் – கிழக்கு மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்கவே மாகாணசபை கொண்டுவரப்பட்டது. ஜனநாயக விரோதமான முறையில்...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திடம் விலைபோய்விட்டது!!! : கஜேந்திரகுமார்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திடம் விலைபோயுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். அவுஸ்ரேலியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள அவர் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கொள்கை ஒரு நாடு இரு தேசமாகும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கை வடக்குக்...

மனித உரிமை ஆணைக்குழுவில் துன்னாலை மக்கள் முறைப்பாடு

துன்னாலை, குடத்தனை பகுதியில் கைது செய்யப்பட்ட 42 பேரின் உறவினர்கள், மனித உரிமை ஆணைக்குழுவில் இன்று (09) முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். அண்மையில் சட்டவிரோதமாக மணல் அகழச் சென்றவர்கள் மீது, பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில், இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து, துன்னாலைப் பகுதியில் அமைந்திருந்த பொலிஸ் காவலரண், பொதுமக்களால் அடித்து நொருக்கப்பட்டு, தீயிட்டுக் கொளுத்தப்பட்டது....

யாழில் ஆவா குழு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது : காவல்துறை மா அதிபர்

யாழ்ப்பாணத்தில் இயங்கி வந்த ஆவா குழு முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுதந்தர தெரிவித்துள்ளார். இந்தக் குழுவின் தலைவர் உள்ளிட்ட 12 உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர் இந்தக் குழுவுடன் தொடர்புடைய இரண்டு முக்கிய உறுப்பினர்கள் நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார். கைது செய்பய்பட்டவர்களில் முன்னாள்...

ஆவா’ குறித்த இரகசிய தகவல்கள் வெளியாகின : பயங்கரவாத தடைச் சட்ட விதிகளின் கீழ் விசாரணை!

வடக்கை அச்சுறுத்தி வந்த ஆவா எனும் பாதாள உலகக் குழுவின் தற்போதைய தலைவனான நிஷா விக்டர் உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்த பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் (ரீ.ஐ.டி.) அவர்களை நேற்று மேலதிக விசாரணைகளுக்காக யாழ். பொலிஸாரிடம் கையளித்தனர். இதன்போது வாள், மோட்டார் சைக்கிள், கூரிய கத்தி, கைக்குண்டு பயன்படுத்தியமை மற்றும் வெளிநாட்டு தொடர்புகள், 2014...

வித்தியா கொலை விவகாரம்: இரு அரசியல்வாதிகளிடம் வாக்குமூலம்!

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியாக கருதப்படும் சுவிஸ்குமார் தப்பிச்செல்ல உதவியமை தொடர்பாக, இரு அரசியல்வாதிகளிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளதாக அரச சட்டத்தரணி நாகரட்னம் நிசாந்த் தெரிவித்துள்ளார். யாழில் கைதுசெய்யப்பட்ட சுவிஸ்குமார், கொழும்பிற்கு தப்பிச்சென்றமை தொடர்பான வழக்கு, யாழ். ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் நேற்று...

புலிகள் அமைப்பு மீள இயங்க ஆரம்பித்துள்ளதா? : நாடாளுமன்றில் கேள்வி

ஆவாகுழு உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதை மேற்கோள்காட்டி, புலிகள் அமைப்பு மீள இயங்க ஆரம்பித்துள்ளதா என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பத்ம உதயசாந்த கேள்வியெழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) வாய்மூலவிடைக்கான கேள்வி நேரத்தின் போதே சட்டம் ஒழுங்கு அமைச்சரிடம் மேற்படி கேள்வியை எழுப்பினார். இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், “ஆவாகுழுவின் தலைவர்...

பொலிஸாரின் பிணை மனுவை நிராகரித்தார் நீதிபதி இளஞ்செழியன்

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களின் பிணை மனுவை, யாழ். மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மாணவர்களின் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஐவர் சார்பில் பிணை மனு, நீதிபதி எம்.இளஞ்செழியன் முன்னிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, இக் கொலை தொடர்பான விசாரணை நடைபெற்று...
Loading posts...

All posts loaded

No more posts