சர்வதேச காணாமல்போனோர் தினத்தில் இன்று (புதன்கிழமை) முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தில் ஐ.நா. செயலாளருக்கு மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.
யாழ்.நல்லூர் ஆலய முன்றலில் ஆரம்பமான குறித்த பேரணி யாழ்.ஐ.நா.அலுவலகத்தினைச் சென்றடைந்து அங்கு ஐ.நா.செயலாளர் அன்ரோனியோ குட்டரஸிற்கான மகஜர் கையளிக்கப்பட்டது.
வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மற்றும் சிவில் சமூகங்கள் இணைந்து மேற்படி ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தன.