Ad Widget

கொழும்பில் பிளாட் வாங்கவே மாமியாரால் சீதனக் கொடுமை! : உயிரை மாய்த்­தார் ஆசிரியை

‘கொழும்­பில் பிளாட் வாங்­கு­ வ­தற்­குப் பணம் தேவை­யா க­வுள்­ளது. சீத­னத் தொகையை 25 லட்­சம் ரூபா­வாக அதி­க­ரித்­துத் தாருங்­கள்’’ என்று மண­ ம­க­னின் தாயார் மண­ம­க­ளி டம் கேட்­டுள்­ளார்.

அதன் பின்­னரே முன்­பள்ளி ஆசிரியை உயிரை மாய்த்­தார் என்று இறப்பு விசா­ர­ணை­யில் தெரி­விக்­கப்­பட்­டது.

ஆசி­ரியை நேற்­று­முன்­தி­னம் அவ­ரது சகோ­த­ரி­யின் வீட் டின் குளி­ய­ல­றை­யில் தூக் கில் தொங்­கிய நிலை­யில் சட­ல­மாக மீட்­கப்­பட்­டார்.

பருத்­தித்­து­றை­யைச் சேர்ந்த முன்­பள்ளி ஆசி­ரி­யை­யின் பெற்­றோர்­கள் இறந்­து­விட்­ட னர். கொழும்­பில் பெரிய தாய் வீட்­டில் அவர் தங்­கி யி­ருந்து அங்­குள்ள முன்­பள் ளி­யில் ஆசி­ரி­யை­யா­கப் பணி­யாற்றி வந்­தார். அவ ருக்­கும் வெள்­ள­வத்­தை­யில் மற்­றொரு குடும்­பத்­தி­ன­ரின் மக­னுக்­கும் திரு­ம­ணம் பேசப்­பட்­டது.

சீத­ன­மாக மட்­டு­வி­லில் பெண்­ணின் பெய­ரில் வாங்­கிய காணி­யில் வீடு கட்­டித் தரு­வ­தா­க­வும் சீத­ன­மாக 15 லட்­சம் ரூபா வழங்­கு­வ­தா­க­வும் கூறப்­பட் டுத் திரு­ம­ணத்­துக்­குச் சம்­ம தம் தெரி­விக்­கப்­பட்­டது. எதிர்­வ­ரும் டிசெம்­பர் 28ஆம் திகதி திரு­ம­ணம் செய்­வ தென்று நாள் குறிக்­கப்­பட்­டது.

தனக்­கு­ரிய பொருள்­களை வாங்­கு­வ­தில் பெண் ஆர்­வம் காட்­டி­னார். பல பொருள் களை வாங்­கி­யும் அவர் வைத்­துள்­ளார். இவ­ருக்கு மூத்த சகோ­த­ரி­யும் இளைய சகோ­த­ர­னும் உள்­ள­னர்.

சகோ­தரி மட்­டு­வி­லில் திரு ம­ணம் செய்து கைத­டி­யி லுள்ள பாட­சா­லை­யில் ஆசி ரி­யை­யா­கப் பணி­யாற்­று­கி றார். சகோ­த­ரன் தொழில் நிமித்­தம் அரபு நாடொன்­றில் தங்­கி­யுள்­ளார்.

இரண்­டாம் தவணை விடு முறை கார­ண­மா­கக் முன்பள்ளி ஆசி­ ரியை கொழும்பி­லி­ருந்து புறப்­பட்டு மட்­டுவி­லில் உள்ள சகோ­த­ரி­யின் வீட்­டில் வந்து தங்­கி­யி­ருந்துள்­ளார்.

இந்த நிலை­யில், கொழும் பில் பிளாட் வாங்­கு­வ­தற்­குப் பணம் தேவை­யாக உள்­ளது. சீத­ன­மா­கத் தரு­வ­தா­கக் கூறிய தொகையை 25 லட் சம் ரூபா­வாக அதி­க­ரித்­துத் தரு­மாறு மாப்­பிள்­ளை­யின் தாயார் முன்­பள்ளி ஆசி­ரி யை­யின் பெரிய தாயா­ரி­டம் கேட்­டுள்­ளார்.

அவர் இந்த விட­யத்தை மண­ம­க­ளின் சகோ­த­ரி­யி­டம் கூறி­யுள்­ளார். சகோ­தரி தக வலை வெளி­யி­டா­மல் அரபு நாட்­டில் உள்ள சகோ­த­ர­னுக் குக் கூறி­யுள்­ளார்.

இந்த நிலை­யில், மாப்­பிள் ளை­யின் தாயார், மண­ம­க ளுக்கு அலை­பே­சி­யில் அழைப்பு ஏற்­ப­டுத்தி சீத­னத் தொகையை அதி­க­ரித்து வழங்­கு­மாறு கேட்­டுள்­ளார். இத­னால் அவர் மன­வி­ரக் திக்கு உள்­ளா­னார்’’ என்று இறப்பு விசா­ர­ணை­யில் தெரி­விக்­கப்­பட்­டது.

திடீர் இறப்பு விசா­ரணை அதி ­காரி சீ.இளங்­கீ­ரன் மற்­றும் பொலி­ஸார் விசா­ரணை மேற்­கொண்­ட­னர். உடற்­கூற் றுப் பரி­சோ­த­னை­யின் பின் னர் சட­லம் உற­வி­னர்­க­ளி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டது.

சாவ­கச்­சேரி சட்ட மருத்­துவ அதி­ காரி ஊடாக உடற்­கூற்றுப் பரி­ சோ­தனை நடத்தி அறிக்கை சமர்ப்­பிக்­கு­மா­றும் சட­லத்தை உற­வி­ன­ரி­டம் ஒப்­ப­டைக்­கு மா­றும் பணிக்­கப்­பட்­டது.

Related Posts