எழிலன் எங்கே? ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவின் பதில்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல் பொறுப்பாளர் எழிலனுடன் அவரது மனைவி அனந்தியும் இருந்திருந்தால் எழிலன் எங்கேயிருக்கிறார் எனத் தெரிந்திருக்கும் என இலங்கையின் முன்னாள் இராணுவ அதிகாரியும் போர்க்குற்றவாளியுமான ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய ஊடகம் ஒன்றுக்கு செவ்வி வழங்கியுள்ளார்.

போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக மனித உரிமை அமைப்பொன்று பிரேசில் நாட்டுக்கான இலங்கைத் தூதுவராகக் கடமையாற்றிய ஜெனரல் ஜெகத் சூரியமீது வழக்குத் தாக்கல்செய்ததையடுத்து இலங்கைக்கு திரும்பியிருந்த ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவை கொழும்பு ஊடகம்ஒன்று செவ்வி கண்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

விடுதலைப் புலிகளின் தலைவர்களான நடேசனும், புலித்தேவனும் மரணமடைந்து விட்டனர் எனவும் அவர்களது உடல்கள் அடையாளம் காணப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளராகச் செயற்பட்ட எழிலன் இராணுவத்தினரிடம் சரணடைந்ததாகவும் அதற்கு தான் சாட்சியாக உள்ளதாகவும் அவரது மனைவி அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். அதற்கு நீங்கள் என்ன பதில் கூறுகிறீர்கள் என குறித்த ஊடகம் வினவியபோது,

யார் அவர் புலித்தேவனா? அவர் ஒருபோதும் சரணடைந்திருக்கவில்லை அவர் மரணமடைந்துவிட்டார், நடேசனும் மரணமடைந்துவிட்டார். அவர்களது உடல்கள் அடையாளங் காணப்பட்டன எனத் தெரிவித்தபோது குறித்த ஊடகம் எழிலன் தொடர்பாகவே கேள்வி எழுப்பியதாகத் தெரிவித்தமைக்கு,

எழிலனுடன் அவரது மனைவி அனந்தி உடனிருந்திருப்பாராக இருந்தால் அவர் எங்கிருக்கின்றார் என்பது தெரிந்திருக்கும் எனப் பதிலளித்துள்ளார்.

Related Posts