மதிப்பீட்டு வரி செலுத்துபவர்களுக்கு சிறப்புரிமை அட்டை அறிமுகம்!

யாழ். மாநகர சபையினால் குறித்த காலப்பகுதியினுள் மதிப்பீட்டு வரி செலுத்துபவர்களுக்காக சிறப்புரிமை அட்டை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவ்அட்டையானது கடந்த 3 வருடங்களில் ஜனவரி மாதத்திற்குள் மதிப்பீட்டு வரிகளைச் செலுத்தி நகர அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்த மாநகர சபைக்குட்பட்ட பிரதேசத்திற்குள் வாழும் பிரஜைகளுக்கு உரித்தானது. அதாவது குறித்த வருடத்திற்குரிய சோலைவரி கொடுப்பனவினை அந்த வருடம் ஜனவரி மாதம்...

வட மாகண பிரதம செயலாளராக பத்திநாதன் நியமனம்

வடமாகாகண சபையின் பிரதம செயலாளராக முல்லைத்தவு மற்றும் மொனாறாகலை ஆகிய மாவட்டங்களில் முன்னர் அரசாங்க அதிபராகக் கடமையாற்றிய அ.பத்திநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.வடக்கு மாகாண சபையின் பிரதம செலாளராக முன்னர் கடமையாற்றி வந்த திருமதி.விஜயலட்சுமி றமேஸ் இச்சபையின் நிர்வாகச்செயற்பாடுகளுக்கு தடையாக இருந்துவருவதாக முதலமைச்சர் விக்கினேஸ்வரனும் ஏனைய உறுப்பினர்களும் சுட்டிக்காட்டி வந்த நிலையில் தற்பொழுது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள மைத்திரிபால்...
Ad Widget

3 மாதங்கள் இருக்க விடுங்கள் -கிழக்கு முதலமைச்சரின் வேண்டுகோள்

கிழக்கு மாகாண சபையின் ஆட்சிமாற்றம் சம்மந்தமாக புதிதாக தோன்றியிருக்கின்ற நெருக்கடியைக் கவனத்திற் கொண்டு, அக்கிழக்கு மாகாண சபையில் ஆட்சியமைப்பது சம்மந்தமாக பொதுஜன ஐக்கிய முன்னணிக்கும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையில் ஏற்கெனவே செய்யப்பட்டிருக்கின்ற உடன்படிக்கையைத் தொடர்ந்தும் செயற்படுத்துவதற்கு ஏதுவான வகையில் தலையீட்டை மேற்கொள்ளுமாறு கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் எம்.நஜீப் அப்துல் மஜீத், ஜனாதிபதி...

வடக்கு மாகாண சபை பிரதம செயலாளர் மாற்றம்!

வடக்கு மாகாணசபையில் முன்னாள் ஆளுனரான சந்திரசிறியிற்கு ஆதரவாக செயற்பட்டு முதலமைச்சருக்கு தலையிடியை கொடுத்து வந்த பிரதம செயலாளர் திருமதி ஆர் விஜயலட்சுமி மாற்றப்பட்டுள்ளார்.அவர் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று வழங்கப்பட்ட அமைச்சர்களின் செயலாளர்களுக்கான நியமனத்தின் மூலம் இந்த மாற்றம் நடைபெற்றுள்ளது. புதிய வடக்குமாகாண அமைச்சின் செயலாளர் யார் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது அறியவரவில்லை. ஆளுனருக்கு...

அமைச்சுக்களின் செயலாளர்கள் நியமனம் – முழு விபரம்

புதிய அமைச்சரவையின் அமைச்சுக்கள் மற்றும் இராஜாங்க அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் அவர்கள் தமது நியமனக் கடிதங்களை பெற்றுக் கொண்டனர். அமைச்சுக்கள் மற்றும் செயலாளர்களின் விபரம் வருமாறு, 01.மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் - என்.ரூபசிங்க 02.கொள்கை திட்டமிடல், நிதித்துறை, சிறுவர்,இளைஞர் மற்றும் கலாசாரம் -...

ஐநாவின் போர்க்குற்ற விசாரணைக்கு ஒத்துழைப்பு: பிரதமர் ரணில்

இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்த ஐநாவின் விசாரணைக்கு இலங்கை முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.அது இலங்கைக் கெதிரான விசாரணையல்ல குற்றமிழைத்த தனிப்பட்ட நபர்களுக்கெதிரானது என்றார். இலங்கையில் புதிய அமைச்சரவை அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சில தினங்களுக்கு முன்பு பதவி ஏற்றது. பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றார். அவருக்கு திட்டமிடல்...

பிரபாகரனின் உடம்பில் இருக்கும் ஒரு முடிக்குகூட மகிந்த பெறுமதியற்றவர்- பொன்சேகா

மகிந்த ராஜபக்ச விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உடம்பில் இருக்கும் ஒரு முடிக்குகூட பெறுமதியற்றவர் என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தேர்தல் பிரசாரத்தின்போது சரத் பொன்சேகா இந்த கருத்தினை தெரிவித்திருந்தாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு ஒரு கொள்கை இருந்தது. அவர் எமது குடும்பங்களை...

டக்ளஸின் இடத்திற்கு விஜயகலா!

புதிய அமைச்சரவையில் மகளிர் விவகாரப் பிரதி அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜயகலா மகேஸ்வரன் யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களின் போது இணைத் தலைவராக நியமிக்கப்படுவார் என்று நம்பகரமாகத் தெரியவருகிறது. இதுவரை காலமும் இணைத்தலைவராகப் பதவி வகித்து வந்த முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அப்பதவியைத் தொடர முடியாத நிலையில் அந்தப் பதவியை பிரதி அமைச்சர்...

கிழக்கு மாகாண ஆட்சி ! மு.காவுடனான பேச்சுவார்த்தை தோல்வி!

கிழக்கு மாகாணசபையில் ஆட்சி அமைப்பது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினருக்கே முதலமைச்சர் வழங்கப்பட வேண்டும் என்பதில் தாம் உறுதியாகவுள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரட்ணம் தெரிவித்தார். அத்துடன், ஆட்சி அமைப்பதற்காக ஐக்கிய தேசிய கட்சியுடனும் அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்....

தேசிய நிறைவேற்று சபை நியமனம்: சம்பந்தன் உள்ளடக்கம்! –

தேசிய நிறைவேற்று சபை என்ற உயர் சபையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று நியமித்துள்ளார். இச்சபையின் முதல் கூட்டம் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. 100 நாள் வேலைத்திட்டம், உறுதியளிக்கப்பட்டுள்ள அரசியல் அமைப்பு திருத்தங்கள், கடந்த அரசின் ஊழல், சட்டவிரோத நடவடிக்கைகள், மனித உரிமை மீறல்கள், நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது நடைபெற்ற முறைகேடுகள், கொழும்பு...

சம்பந்தன் குழுவால் பல கோரிக்கைகள் முன்வைப்பு!

ஆர். சம்பந்தனின் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த குழுவினர் இன்று பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து உரையாடியுள்ளனர்.இன்று பகல் 12 மணி முதல் ஒரு மணி 30 நிமிடம் வரையில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது, தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. இந்த சந்திப்பின் போது, தேசிய...

புதிய அமைச்சரவை

இன்று மாலை 6.30 மணிக்கு இலங்கை சனாதிபதி செயலகத்தில் 27 பேர் கொண்ட இலங்கையின் புதிய அமைச்சரவை பதவி ஏற்றுள்ளது. 1) ரணில் விக்கிரமசிங்க- கொள்கை அமுலாக்கம் 2)ஜோன் அமரதுங்க-கிறிஸ்தவ விவகாரம் 3)மங்கள சமரவீர- வெளிவிவகாரம் 4)கரு ஜயசூரிய- புத்தசாசன அமைச்சர் 5)ஜோசப் மைக்கல் பெரேரா- உள்நாட்டு அலுவல்கள் 6)காமினி ஜயவிக்ரம பெரேரா- உணவு பாதுகாப்பு...

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இரண்டாக பிளவடைந்தது! கட்சிக்கு 2தலைவர்கள் நியமனம்!

இலங்கையின் பிரதான அரசியல் கட்சிகளில் ஒன்றாகக் கருதப்படும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இரண்டாக பிளவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.கட்சியின் தலைவர் பதவியில் இரு வேறுபட்ட கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.   கட்சியின் புதிய தலைவராக மைத்திரிபால சிறிசேனவை நியமித்துள்ளதாக கட்சியின் ஒரு தெர்குதி உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர்.எனினும், கட்சியின் தலைமைப் பதவியில் மாற்றமில்லை என கட்சியின் பொதுச் செயலாளராக அண்மையில் நியமிக்கப்பட்ட...

கட்சி தாவிய த.தே.கூ எம் பி பியசேன சந்திரகாந்தனிடம் அடைக்கலம் கோரினார்!

சுதந்திரக்கட்சிக்கு கட்சி தாவிய அம்பாறை மாவட்ட த.தே.கூ எம்பி பியசேன சனாதிபதித்தேர்தலுக்கு முதல் நாள்  முன்னால் த.தே.கூ எம்பி சந்திரகாந்தனிடம் அடைக்கலம் கோரியதாக சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். தனது வீட்டில் கூடியிருந்த இளைஞர்களும், ஆதரவாளர்களும் முன்னிலையில் மன்னிப்பும், அடைக்கலமும் கோரி தனது ஆதரவாளர்களிடமிருந்து தேர்தல் முடிவுகளின் பின் தன்னை பாதுகாக்குமாறு கேட்டுக்கொண்டதாக கூறியுள்ளார். இருப்பினும் தான் அவரை பண்பாட்டுக்கமைவாக உபசரித்து...

சு.கவின் தலைவராக மைத்திரிபால சிறிசேன! போசகராக சந்திரிகா!?

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் புதிய தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நியமிப்பதற்கு கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதுவரை இறுதி முடிவுகள்  வெளியாகவில்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்தியக்குழு கூட்டம், முன்னாள் ஜனாதிபதியும் கட்சியின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கொழும்பிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை கூடியுள்ள நிலையில் இந்த பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.மைத்திரிபால சிறிசேன...

நிதி அமைச்சின் செயலாளராக அருச்சுண் மகேந்திரன்

மூத்த பொருளாதார நிபுணரான அர்ஜூன் மகேந்திரன், நிதியமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நிதியமைச்சு மற்றும் திறைசேரியின் செயலாளராக பதவிவகித்த கலாநிதி பி.பீ ஜயசுந்தர அப்பதவிகளிலிருந்து இராஜினாமா செய்ததையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே அவர், நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சந்திரிகா குமாரதுங்க ஆட்சிக்காலத்தில் முதலீட்டு அதிகாரசபையின் தலைவராகவும் 2009-13 காலப்பகுதியில் HSBC வங்கியில் முகாமைத்துவ பணிப்பாளராகவும் தொழிற்பட்டிருந்தார் மேலும் எமிரேற்ஸ் NDB...

கோத்தா , பசில் ,தொண்டமான் ஆகியோர் நாட்டைவிட்டு வெளியேறினர்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சகோதரரும், நாடாளுமன்ற உறுப்பினருமாகிய பசில் ராஜபக்ச, டுபாய் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.   கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இன்று அதிகாலை 2 மணியளவில் எமிரேட்ஸின் ஈ.கே.349 விமானத்தில் தனது மனைவியுடன் சென்றுள்ளார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், முன்னாள் கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சருமான...

அனந்தி மற்றும் சிவகரன் நீக்கப்பட்டார்கள் என்ற செய்தி உண்மை இல்லை

மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் மற்றும் இளைஞரணித் தலைவர் சிவகரன் ஆகியோர் கட்சியில் இருந்தோ, மாகாண சபை உறுப்பினர் பதவியில் இருந்தோ நீக்கப்பட்டதாக வெளியான தகவல்களில் உண்மை இல்லை என தமிழரசுக் கட்சியின் செயலாளர் துரைராஜசிங்கம்   தெரிவித்தார். எனினும் கட்சியின் முடிவுகளை மீறி இவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் கட்சிக்கு நெருக்கடிகளை உருவாக்குவதாகவும், அது...

25 பேர் கொண்ட அமைச்சரவை அறிவிக்கப்பட உள்ளது!

அமைச்சரவை அந்தஸ்துள்ள இருபத்தைந்து அமைச்சர்கள், பத்து அமைச்சரவை அந்தஸ்து இல்லாத அமைச்சர்கள், இருபத்தைந்து பிரதி அமைச்சர்கள் என அறுபது பேர் கொண்ட அமைச்சர்கள் பட்டாளம் நாளை ஞாயிற்றுக்கிழமை அல்லது திங்கட்கிழமை பதவியேற்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுடன் பொதுஜன ஐக்கிய முன்னணி அரசில் இருந்த சிலருக்கும் முக்கிய அமைச்சுப் பதவிகள்...

மீண்டுமொருமுறை ஜனாதிபதியாகும் எண்ணம் இல்லை: பதவி ஏற்பின் போது மைத்திரி

உயர்நீதிமன்ற நீதியரசர் ஸ்ரீபவன் முன்னிலையில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் புதிய ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன, கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாலை 06.21 மணியளவில் பதவியேற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கவை நியமித்துள்ளார்.ரணில் விக்கிரமசிங்கவும் அங்கு பதவி பிரமாணம் செய்துகொண்டார். இதன் பின்னர் நாட்டு...
Loading posts...

All posts loaded

No more posts