Ad Widget

மைத்திரி அரசு அமைந்தால் அமைச்சுப் பதவிகளை ஏற்கோம்! – தமிழ் தேசிய கூட்டமைப்பு

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கும் ஓர் கட்சியாக செயற்பட உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அரசியல் சாசனத்தை மாற்றியமைப்பதில் முக்கியமான பங்களிப்பு வழங்க விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தில் எவ்வாறான பங்கினை வகிப்பது என்பது பற்றி இறுதித் தீர்மானங்கள் எதனையும் எடுக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறான பங்களிப்பினை வழங்குவது என்பது பற்றி கட்சி இறுதித் தீர்மானம் எதனையும் இதுவரையில் எடுக்காத போதிலும், அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்பதே தமது தனிப்பட்ட நிலைப்பாடு என அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும், புதிய அரசாங்கத்தின் 100 நாள் திட்டத்தில் ஆலேசானைக் குழுவாக இயங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.ஜே.வி.பி கட்சியும் இவ்வாறான ஓர் நிலைப்பாட்டை பின்பற்றும் என எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.நாடு தற்போது சர்வாதிகார ஆட்சியின் கீழ் அடிமைப்பட்டு கிடப்பதாகத் தெரிவித்துள்ளார்.நாட்டில் ஜனநாயகம் இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts