பல்லிளித்து, வாழ்வதற்காக தமிழ் மக்கள் போராட்டம் நடத்தவோ, உயிர்த் தியாகங்களைச் செய்யவோ இல்லை – விக்கி

சிறிலங்கா அதிபரை நாடிச்சென்று, அவர் தம் சகோதரர்களுக்குப் பல்லிளித்து, வாழ்வதற்காக தமிழ் மக்கள் போராட்டம் நடத்தவோ, உயிர்த் தியாகங்களைச் செய்யவோ இல்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வட மாகாணசபையின் அமைச்சர்கள், உறுப்பினர்கள், அதிகாரிகளுக்கான ஆண்டுஇறுதி கருத்துப் பரிமாற்றக் கூட்டம் யாழ் பொது நூலக மண்டபத்தில் நேற்று மாலை மாலை 5 மணியளவில்...

மைத்திரிக்கு ஆதரவாக கூட்டமைப்பு மட்டக்களப்பில் பிரசாரம்

ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரசாரங்கள் மட்டக்களப்பில் இன்று வியாழக்கிழமை பகல் ஆரம்பமாகின. இந்த விநியோக பிரசார நடவடிக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களான கே.துரைராஜசிங்கம், ஆர்.துரைரெட்ணம், கோ.கருணாகரம்(ஜனா), இ.நித்தியானந்தம், ஞா.கிருஷ்ணப்பிள்ளை, எம்.நடராஜா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். இவர்கள் நகரில் உள்ள...
Ad Widget

டக்ளஸ் அமைச்சரவையில் பேசாதிருந்தார் – ராஜித குற்றச்சாட்டு

டக்ளஸ் தேவானந்தா இந்த மக்களுக்கு என்ன செய்துவிட்டார். அமைச்சரவையில் வாயில் புட்டு அடைந்தவர் போல் இருப்பார் என பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்தின தெரிவித்தார்.வவுனியா வைரவ புளியங்குளம் சிறுவர் பூங்கா மைதானத்தில் இடம்பெற்ற ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கும் பிரசார கூட்டத்திலேயே இவ்வாறு தெரிவித்தார்.தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர். பாதுகாப்பு செயலாளரும் ராஜபக்ச...

ஏயார் ஏசியா விமானம் கடலில்! இதுவரை 40 சடலங்கள் மீட்பு

விபத்துக்குள்ளான ஏர் ஏசியா விமானத்தில் பயணம் செய்தவர்களில் 40 பேரின் உடல்கள் சிங்கப்பூருக்கு தென் பகுதியில் களிமன்தன் தீவு பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக இந்தோனேசிய கடற்படை தெரிவித்துள்ளது. கடந்த ஞாயிறன்று 162 பயணிகளுடன் சிங்கப்பூர் சென்ற ஏர் ஏசியா விமானம் ஜாவா கடல் பகுதியில் மாயமானது. மோசமான வானிலை காரணமாக பாதை மாறிச் சென்ற விமானம் விபத்தில்...

பொது மக்களின் ஊழியனாக செயற்படவே விரும்புகின்றேன். -யாழில் மைத்திரி

தமிழ்த் தேசியக் கூட்டடைப்பு எந்தவிதமான ஒப்பந்தங்கள், நிபந்தனைகள் இன்றி  எங்களுக்குஆதரவு வழங்கியுள்ளனர்.  நாம் எந்தவொரு அரசியல் கட்சிகளுடனும், அமைப்புக்களுடன் இரகசிய ஒப்பந்தங்கள் செய்து கொள்ளவுமில்லை, கைச்சாத்திடவுமில்லை. நாம் அனைவரும் மிகவும் புரிந்துணர்வுடன் செயற்படுகின்றோம்.என பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இன்றைய தினம் மாலை 4 மணியளவில் யாழ்.வருகை தந்த மைத்திரிபால சிறிசேன கிட்டுப்பூங்காவில் நடைபெற்ற பொது...

கிழக்கு மாகாணசபை எதிரணிகள் வசம்!அரசு பெரும்பான்மையினை இழந்தது!

முஸ்லிம்காங்கிரஸ் அரசில் இருந்து விலகி எதிரணி சனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவுதெரிவித்துள்ள நிலையில் கிழக்குமாகாணசபை யில் இருந்த அவர்களது 7 இடங்களும் எதிரணிக்கு ஆதரவாகி உள்ளது. இந்நிலையில் 37 இடங்களை கொண்ட கிழக்கு மாகாணசபை எதிரணிகள் வசம் வந்திருக்கிறது. அரசு சார்பில் 12 உறுப்பினர்களும் கூட்டமைப்பு சார்பில் 11 இடங்களும் ஐதேக சார்பில் 4 இடங்களும் உள்ளன. ரிசாத்...

முஸ்லிம் காங்கிரஸ் அரசில் இருந்து விலகியது

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிலிருந்து விலகி, பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கவுள்ளதாக அக்கட்சி அறிவித்தது. கட்சியின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் கட்சியின் தலைமையகமாக தாருஸ்ஸல்லாமில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் மேற்கண்ட அறிவிப்பை...

க.பொ.த உயர்தரம் கணிதப் பிரிவில் யாழ். இந்துக் கல்லூரி மாணவன் தேசிய ரீதியில் முதலிடம்!

இன்று பிற்பகல் வெளியாகிய க.பொ.த. உயர்தரப் தரப் பரீட்சைப் பெறுபேறுகளில் யாழ். இந்துக் கல்லூரி மாணவன் பாக்கியராஜா டாருகீசன் கணிதப் பிரிவில் 3 ஏ சித்திகளைப் பெற்று தேசிய ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார் இதேவேளை கணிதப் பிரிவில் தேசிய ரீதியில் 8ஆம் இடத்தையும் யாழ். இந்து மாணவன் ஒருவர் பெற்றுள்ளார். அதேபோல் கிளிநொச்சி மாவட்டத்தில் கிளி/மத்திய கல்லூரி மாணவர்கள் இருவர்...

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முடிவு ஞாயிறன்று?

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்  சிகிச்சையின் பின்னர் இன்று இந்தியாவில் இருந்து இலங்கைக்கு நாடு திரும்பியுள்ள நிலையில்,சனாதிபதித்தேர்தல் தொடர்பில் நாளை ஞாயிற்றுக்கிழமை தமிழ்தேசியக்கூட்டமைப்பு கொழும்பில் கூடி ஆராயவுள்ளதாக தெரியவருகிறது. இரண்டு வேட்பாளர்களும் வடக்கில் இருந்து இராணுவத்தினை அகற்றும் பேச்சுக்கே இடமில்லை என்று தெரிவித்துள்ள நிலையில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தேர்தல் தொடர்பிலான அறிக்கை மிகுந்த எதிர்பார்ப்புடன் எதிர்பார்க்கப்படுகின்றது....

எலி, பூனை, கரப்பத்தான் மட்டுமே மஹிந்தவுடன் இறுதியாக இருக்கும்!- மைத்திரி சவால்

எதிர்வரும் 5ம் திகதி எலி - பூனை - கரப்பத்தான் மட்டுமே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் இறுதியாக இருக்கும் என எதிரணியின் பொது வேட்பாளரான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக கட்சித்தாவலை நிறுத்தியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்கத்துக்கு ஒன்றை சொல்ல விரும்புகின்றேன் வருகின்ற 5 ம் திகதி தேர்தல் பிரசார இறுதி நாளில்...

இன்னும் ஒரு சமூக வலைத்தளம்

Face book போலவே இன்னும் ஒரு சமூக வலைத்தளம்(http://www.TSU.co) உருவெடுத்துள்ளது அதில் இணைந்து பங்களிப்பவர்களுக்கு பணமும் தருவதாக கூறுகிறார்கள் . TSU நிறுவனம் 90 வீதமான வருமானத்தினை பயனாளர்களுக்கு பகிர உள்ளார்களாம்.ஒக்டோபர் 2014 இல் இருந்து புதிய மெருகூட்டப்பட்டு இந்த தளம் பல மில்லியன் பயனாளர்களை தாண்டிவிட்டதாம் Face book இதை செய்தால் நிச்சயம் நன்றாயிருக்கும். வருமானத்தின்...

காங்கேசன்துறைக்கான புகையிரத சேவை 2 ஆம் திகதி ஆரம்பம்.

யாழ்தேவி ரயில் எதிர்வரும் ஜனவரி மாதம் 2 ஆம் திகதி முதல் காங்கேசன்துறை வரை தனது பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது. இதனை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தேர்தல் பரப்புரைக்காக யாழ்ப்பாணம் வரவுள்ள அன்றைய நாள் உத்தியோகபூர்வமாக புகையிரத சேவையை ஆரம்பித்து வைக்கவுள்ளார். இந்தநிலையில் புகையிரத புனரமைப்பு வேலைகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே காங்கேசன்துறைக்கான...

தேவையென்றால் 2ம், 3ம் விருப்பு வாக்கினையும் அளிக்க முடியும்!- மஹிந்த தேசப்பிரிய

எதிர்வரும் ஜனாதிபதி தோதலின் போது தேவையென்றால் இரண்டாம், மூன்றாம் விருப்பு வாக்கினையும் அளிக்க முடியும் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். வாக்குச் சீட்டில் தாம் வாக்களிக்கும் வேட்பாளரின் சின்னத்திற்கு எதிரில் 1 என்ற இலக்கத்தை எழுதுவதன் மூலம் முதலாம் விருப்பத் தெரிவினை செய்ய முடியும். மேலும் இரண்டு வேட்பாளர்களுக்கு விருப்பு வாக்கினை அளிக்க...

திஸ்ஸ அத்தநாயக்கவின் இரகசிய உடன்படிக்கை குற்றச்சாட்டு பொய்யானது!– ரவி கருணாநாயக்க

சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்கவின் இரகசிய உடன்படிக்கை குற்றச்சாட்டு பொய்யானது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையில் இரகசிய உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதனூடாக வடக்கின் இராணுவ முகாம்கள் அகற்றப்படுவதுடன், படையினர் சர்வதேச நீதிமன்றில்...

இரத்தக்கறை படிந்தவர்களின் கையால் செய்யப்படும் எந்தவொரு காரியமும் நிலைக்காது ; சரவணபவன் எம்.பி –

யாழ்.விஷன் கிருஸ்ணா அறநெறிப் பாடசாலையின் இரண்டாவது ஆண்டு விழாவும், புதிய கட்டடத் திறப்பு விழாவும் இன்று காலை 11.00 மணியளவில் இடம்பெற்றது. கோணாவளை வீதி கொக்குவிலில் அமைந்துள்ள குறித்த அறநெறிப் பாடசாலைக்கென  புதிதாக அமைக்கப்பட்ட கட்டடத்தொகுதியை பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் நாடாவெட்டி திறந்துவைத்தார். க.சுசீந்திரன் தலைமையில் இடம்பெற்ற...

திசைகாட்டி நிறுவனத்திற்கு தீவைப்பு

கடந்த சில வாரங்களாக பல கோடி ரூபா விசா மோசடி தொடர்பில் இணையத்தளங்களில் செய்திகள் வெளியாகி சர்சைக்குள்ளாகியிருந்த விசா வழிகாட்டி நிறுவனமான திசைகாட்டி நிறுவனத்தில் பாதிக்கப்பட்டவர்களால் குறித்த நிறுவனம் நேற்று முன்னிரவு தீயிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. குறித்த நிறுவனத்தில் பல லட்சங்களை செலுத்தி பாதிக்கப்பட்டவர்களால் காவல்துறையில்  பல முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் இருப்பினும் வழக்குகள் எதுவும்...

இம்முறை பெண் வாக்காளர்கள் அதிகம் -யாழ் அரச அதிபா் தகவல் !

எதிர்வரும் ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு யாழ். மாவட்டத்தில் தகுதி பெற்ற 4 இலட்சத்து 50 ஆயிரத்து 132 பேரில் 2 இலட்சத்து 34 ஆயிரத்து 186 பேர் பெண் வாக்காளர்கள் என யாழ். மாவட்ட செயலாளரும் மாவட்ட தெரிவு அத்தாட்சி அதிகாரியுமான சுந்தரம் அருமைநாயகம், வெள்ளிக்கிழமை (19) தெரிவித்தார்....

அனந்தி, சிவாஜிலிங்கம் நடுநிலை:2015 வடமாகாணசபை ”பட்ஜெட்” நிறைவேற்றம்

வடமாகாண சபையின் 2015ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் மீதான் வாக்கெடுப்பின் போது  தாங்கள் நடுநிலை வகிக்கப்போவதாக ஆளுங்கட்சி உறுப்பினர்களாக அனந்தி சசிதரன், எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் தெரிவித்ததையடுத்து, மற்றைய ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் வரவு-செலவுத்திட்டம் நிறைவேறியது. வடமாகாண சபை வரவு – செலவுத்திட்டத்தில் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறிக்கு அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை...

யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை தமிழ் மக்களே தீர்மானிக்க வேண்டும் – சங்கரி

ஜனாதிபதித் தேர்தலில் தாம் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை தமிழ் மக்கள் அவர்களாகவே தீர்மானிக்க வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணி தெரிவித்துள்ளது. தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஒவ்வொரு தமிழரும் மிகக் கவனமாக பரிசீலித்து, வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களை நன்கு ஆராய்ந்து யாருக்கு வாக்களிப்பது என்ற முடிவை எடுக்கவேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணி...

ஆளுனருக்காக பரிந்து பேசிய அவைத்தலைவர் சீ.வி.கே. சிவஞானம்!

வடமாகாண சபையின் 2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் ஆளுநர் செயலகத்திற்கான  நிதி ஒதுக்கீட்டை எதிர்ப்புக்கள் மத்தியில் அங்கீகரிக்க வைத்து தனது விசுவாசத்தை வெளிப்படுத்தியுள்ளார் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் என குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. ஆளுநர் அலுவலகம், முதலமைச்சர் அலுவலகம் மற்றும் பிரதம செயலாளர் அலுவலகத்திற்கான நிதி ஒதுக்கீட்டு முன்மொழிவு பிரேரணைகள் இன்று காலை வடமாகாணசபையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. மதிய...
Loading posts...

All posts loaded

No more posts