Ad Widget

கிழக்கு மாகாணசபை எதிரணிகள் வசம்!அரசு பெரும்பான்மையினை இழந்தது!

முஸ்லிம்காங்கிரஸ் அரசில் இருந்து விலகி எதிரணி சனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவுதெரிவித்துள்ள நிலையில் கிழக்குமாகாணசபை யில் இருந்த அவர்களது 7 இடங்களும் எதிரணிக்கு ஆதரவாகி உள்ளது. இந்நிலையில் 37 இடங்களை கொண்ட கிழக்கு மாகாணசபை எதிரணிகள் வசம் வந்திருக்கிறது. அரசு சார்பில் 12 உறுப்பினர்களும் கூட்டமைப்பு சார்பில் 11 இடங்களும் ஐதேக சார்பில் 4 இடங்களும் உள்ளன. ரிசாத் பதியுதீன் சார்பில் 2 உறுப்பினரும் அரசு கட்சியில் இருந்து விலகிய தவிசாளர் பிரேமகுமார வையும் சேர்த்து  தற்போது எதிரணியில் 25 இடங்கள் இருப்பதால் கிழக்கு மாகாணசபையில் அரசு தனது பெரும்பான்மையினை இழந்துவிட்டது.

இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சியமைப்பதற்கு ஆளுனரிடம் கோரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.இது தொடர்பில் எதிரணியினரிடையே பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

Related Posts