- Thursday
- August 20th, 2026
கடந்த சில வாரங்களாக பல கோடி ரூபா விசா மோசடி தொடர்பில் இணையத்தளங்களில் செய்திகள் வெளியாகி சர்சைக்குள்ளாகியிருந்த விசா வழிகாட்டி நிறுவனமான திசைகாட்டி நிறுவனத்தில் பாதிக்கப்பட்டவர்களால் குறித்த நிறுவனம் நேற்று முன்னிரவு தீயிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. குறித்த நிறுவனத்தில் பல லட்சங்களை செலுத்தி பாதிக்கப்பட்டவர்களால் காவல்துறையில் பல முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் இருப்பினும் வழக்குகள் எதுவும்...
எதிர்வரும் ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு யாழ். மாவட்டத்தில் தகுதி பெற்ற 4 இலட்சத்து 50 ஆயிரத்து 132 பேரில் 2 இலட்சத்து 34 ஆயிரத்து 186 பேர் பெண் வாக்காளர்கள் என யாழ். மாவட்ட செயலாளரும் மாவட்ட தெரிவு அத்தாட்சி அதிகாரியுமான சுந்தரம் அருமைநாயகம், வெள்ளிக்கிழமை (19) தெரிவித்தார்....
வடமாகாண சபையின் 2015ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் மீதான் வாக்கெடுப்பின் போது தாங்கள் நடுநிலை வகிக்கப்போவதாக ஆளுங்கட்சி உறுப்பினர்களாக அனந்தி சசிதரன், எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் தெரிவித்ததையடுத்து, மற்றைய ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் வரவு-செலவுத்திட்டம் நிறைவேறியது. வடமாகாண சபை வரவு – செலவுத்திட்டத்தில் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறிக்கு அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை...
ஜனாதிபதித் தேர்தலில் தாம் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை தமிழ் மக்கள் அவர்களாகவே தீர்மானிக்க வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணி தெரிவித்துள்ளது. தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஒவ்வொரு தமிழரும் மிகக் கவனமாக பரிசீலித்து, வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களை நன்கு ஆராய்ந்து யாருக்கு வாக்களிப்பது என்ற முடிவை எடுக்கவேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணி...
வடமாகாண சபையின் 2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் ஆளுநர் செயலகத்திற்கான நிதி ஒதுக்கீட்டை எதிர்ப்புக்கள் மத்தியில் அங்கீகரிக்க வைத்து தனது விசுவாசத்தை வெளிப்படுத்தியுள்ளார் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் என குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. ஆளுநர் அலுவலகம், முதலமைச்சர் அலுவலகம் மற்றும் பிரதம செயலாளர் அலுவலகத்திற்கான நிதி ஒதுக்கீட்டு முன்மொழிவு பிரேரணைகள் இன்று காலை வடமாகாணசபையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. மதிய...
ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவரும், அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவருமான தம்பி மு. தம்பிராசா அவர்கள் இன்று (07.12.2014) கொழும்பில் நடாத்திய ஊடாக மகாநாட்டில் முக்கியமான பல்வேறு விடயங்களைச் சுட்டிக்காட்ட சில கோரிக்கைகளையும் முன்வைத்தார். அதன் விபரங்கள் பின்வருமாறு, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் இரண்டு முன்னணி வேட்பாளர்களுமே கடந்த...
இரண்டு பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களும் தமிழர்களின் பிரச்சனை குறித்து சாதகமான தீர்வுகளை முன்வைக்கவில்லை. இதனால் இருவேட்பாளர்களிலும் நாம் திருப்தியடைந்திருக்கவில்லை என தமிழ்தேசியக்கூட்டமைப்பு பேச்சாளர் நாடளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் ஊடகம் ஒன்றுக்கு கருத்துகூறியுள்ளார். அரசுக்கட்சியோ சிறுபான்மையினரின் வாக்குகளில் தாம் தங்கியிருக்கவில்லை என கூறியுள்ளது. அதேவேளை மைத்திரி பால சிறிசேன அவர்களின் அண்மைக்கால கூற்றுக்கள் எமக்கு எதிரான...
இராணுவக் கெடுபிடிகளுக்கு மத்தியிலும், இன்று வியாழக்கிழமை மாவீரர் நாள் நிகழ்வுகள் தமிழர் தாயகம் எங்கும் உணர்வு பூர்வமாகக் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட இடங்கள், வீடுகள், ஆலயங்களில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி பொதுமக்கள் வழிபட்டுள்ளனர். கடந்த வாரமே யாழ்.பல்கலைக் கழகம் இராணுவத்தினரால் முற்றுகையிடப்பட்டிருந்த நிலையில் இராணுவ கெடுபிடிகளையம் மீறி பல்கலை வளாகத்தில் மாணவர் பொது அறையில் ஈகைச்...
யுத்தத்தை வெற்றி கொண்டாலும் ஆட்சியாளர்களுக்கு நாட்டை திண்பதற்கு பொது மக்கள் அதிகாரம் வழங்கவில்லை என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். அதனால் ஆரம்பரத்தை கைவிட்டு நாட்டை ஆட்சி செய்யுமாறு மஹிந்த ராஜபக்ஷவை கேட்டுக் கொள்வதாக தேரர் தெரிவித்துள்ளார். முதலில் நாடு, அடுத்து இனம், பின்னர் மதம் என்று...
ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக போட்டியிடும் மைத்திரிபால சிறிசேன 'அப்பே ஜாதிக்க பெரமுன' என்ற கட்சியின் பெயரில் புறா சின்னத்தில் போட்டியிட உள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கட்சியின் பெயர் மற்றும் சின்னம் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட போதும் இந்த தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன...
மாவீரர் தினமாக இன்று வியாழக்கிழமை வடக்குமாகாண விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் மரநடுகை நிகழ்வு வரணிப்பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்னற உறுப்பினர்கள், வடக்குமாகாண சபை அமைச்சர்கள், உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபை உறுப்பினர், பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டு மரங்களை நட்டுவைத்தனர். இந்த நிகழ்வில் கருத்துத் தெரிவித்த விவசாய அமைச்சர், எமக்காகப் போராடியவர்களின் நினைவு...
தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் நாளான இன்று அது கொண்டாடப்படலாம் என்ற அச்சத்தில் யாழ்ப்பாணம் உட்பட வடக்கு முழுவதும் இராணுவத்தினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். போர்க்காலங்கள் போல் வீதிகள் ஒழுங்களைகள் எங்கும் இராணுவம் நிலை நிறுத்தப்பட்டு வீதிகளில் செல்வோர் சோதனைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர். கடந்த ஒருவார காலமாக குறிப்பாக யாழ்.பல்கலைக்கழகம், நல்லூர், யாழ்.போதனாவைத்தியசாலை...
'மலையக மக்களின் நலனுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படாத வகையில், அரசியல் சூழலுக்கேற்ப தகுந்த முடிவுகள் எடுக்கப்படும்' என்று நாடாளுமன்ற உறுப்பினர் பெ.ராஜதுரை, நேற்று ஞாயிற்றுக்கிழமை (23) தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் ராஜதுரை, ஐக்கிய தேசியக் கட்சியில் இணையவுள்ளதாக வெளிவந்த தகவல்களை உறுதிப்படுத்திகொள்ளும் வகையில், அவரிடம் தொடர்புகொண்டு கேட்டபோதே அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பில் அவர்...
அரசாங்கத்தினதும் எதிர்கட்சியினதும் ஜோதிடம் என் கையில் உள்ளது. நேற்று ஒரு பெரிய கிரகத்துடன் சிறு சிறு கிரகங்கள் மாறியுள்ளன.அரசாங்கத்திற்கு மயக்கம் வரும் கிரகமாற்றம் எதிர்காலத்தில்தான் நிகழும். அரசாங்கத்தின் பிரபல கிரகம் ஜனாதிபதியால் கிரக மாற்றத்தை தடுக்க முடியும். ஆனால் சுற்றியுள்ள பலனற்ற கிரகம் அதற்கு இடமளிக்காது. என்றாவது எமது பிரபல கிரகத்தை பலனற்ற கிரகங்கள் சேர்ந்து...
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரான மைத்திரிபால சிறிசேன அவர்கள் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிலைமைகளை ஆராய்ந்தே முடிவெடுக்கும் என்று அந்த அமைப்பின் தலைவரான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். மைத்திரிபால சிறிசேன அவர்கள் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டதையும், தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அவரது செவ்வியையும் தான்...
மைத்திரி பால சிரிசேன அவர்களின் பொதுவேட்பாளர் அறிவிப்பினை அடுத்து அவரையும் அவருடன் பிரிந்து சென்ற அமைச்சர்களான ராஜித சேனாரத்தின,துமிந்த திசநாயக்க , கே.எஸ் குணவர்த்தன ஆகியோரை அமைச்சுப்பதவி உள்ளிட்ட சகல பதவிகளிலிருந்தும் சனாதிபதி மகிந்த பதவி நீக்கம் செய்தார். அத்துடன் அவர்களின் அடிப்படை கட்டி உறுப்புரிமையும் நீக்கப்பட்டுள்ளது இதேவேளை கட்சியில் மைத்திரிபால வின் இடத்திற்கு எஸ்...
மீண்டும் அரசியல் எனும் தனது தாய் வீட்டுக்குள் நுழைய சந்தர்ப்பம் கிடைத்தமையையிட்டு தான் மகிழ்வதாக கண்ணீர் மல்க முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க குறிப்பிட்டுள்ளார். இன்று நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் இங்கு மேலும் கூறியதாவது, 9 வருட மௌத்தின் பின் மீண்டும் அரசியலில் பிரவேசிக்க தினம்...
ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் ஜனவரி மாதம் 8ம் திகதி (08.01.2015) நடைபெறும் என தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. இதன்படி டிசம்பர் 8ம் திகதி முதல் வேட்புமனுக்கள் ஏற்கப்படும் என கூறப்பட்டுள்ளது. முன்னதாக நேற்று நண்பகல் 1.30 மணியளவில் சனாதிபதி தேர்தலை நடாத்த ஆணையாளரை கோருவதற்கான பிரகடனத்தில் கையொப்பமிட்டிருந்தார்
எதிரணியின் பொது வேட்பாளராக தம்மை நியமித்தமைக்கு நன்றி தெரிவிப்பதாக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். குறிப்பாக சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட கட்சியின் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று மாலை நகர சபை மண்டபத்தில் இடம்பெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்ட...
ஜாதிக ஹெல உறுமயவின் பொது செயலாளரும் தொழில்நுட்பம் மற்றும் ஆய்வுகள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க மற்றும் பிரதி பொதுச்செயலாளரும் மேல் மாகாண சபை அமைச்சர் உதயன் கம்மன்பிலவும் தங்களது அமைச்சு பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர். கொழும்பில் தற்போது இடம்பெற்றுவரும் ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அக்கட்சி இதனை உறுதி செய்தது. அரசாங்கத்திடம் தமது கட்சி...
Loading posts...
All posts loaded
No more posts
