Ad Widget

மூன்றாவது தடவையாக தேர்தலில் போட்டியிட மஹிந்தவிற்கு எவ்விதத் தடையுமில்லை – உயர் நீதிமன்றம்

மூன்றாம் தவணைப் பதவிக்காலத்திற்காக ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ போட்டியிடுவதில் எவ்விதத் தடையும் இல்லை என உயர் நீதிமன்றம் விளக்கமளித்துள்ளதாக சபை முதல்வர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இன்று பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

பிரதம நீதியரசர் உட்பட உயர்நீதிமன்றத்தின் ஒன்பது நீதியரசர்களும் இதனை ஏகமனதாக தீர்மானித்து ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறினார்.

அமைச்சர் பாராளுமன்றில் தெரிவித்த முழுமையான கருத்து,

எமது ஜனாதிபதிக்கு மீண்டுமொரு தடவை போட்டியிட்டு வெற்றிபெறமுடியும் அதற்கு சட்டத்தில் எந்தவொரு தடையும் இல்லை உயர்நீதிமன்றம் தெளிவாகக் கூறியுள்ளது. எமது ஜனாதிபதிக்கு மூன்றாவது தவணைக்கு செல்ல முடியும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது என்பதனைக் கூற விரும்புகின்றேன் மீண்டும் ஒருமுறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கோ, தேர்தலை நடாத்துவதற்கான அறிவித்தலை விடுவதற்கோ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு உள்ள உரிமையை உயர் நீதிமன்றம் தெளிவாக அறிவித்துள்ளது.

அரசியல் அமைப்பின் (31/3 A 11) என்ற சரத்திற்கு அமைய வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை செயற்படுத்தி மீண்டும் ஒருமுறை தேர்தல் மூலம் தெரிவாதற்கும் தேர்தலில் போட்டியிடுவதற்கும் எவ்வித சட்ட தடையும் தற்போதைய ஜனாதிபதிக்கு இல்லையெனவும் அரசியல் அமைப்பின் ஊடாக அந்த அதிகாரத்தை செயற்படுத்தி மேலுமொரு தவணைக்கான தேர்தலில் போட்டியிட முடியும் என ஏகமனதாக உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது

ஜனாதிபதிக்குள்ள அந்தச் சந்தர்ப்பம் தொடர்பில் எவரேனும் ஒருவரது மனதில் சந்தேகம் இருந்தால் அதற்கான பதில் தற்போது கிடைத்துள்ளது. ஆகவே எவ்வித தயக்கமின்றி ஜனாதிபதி நினைக்கும் எந்தவொரு நேரத்திலும் தேர்தலில் போட்டியிட எமது தலைவருக்கு எமது நாட்டை பாதுகாத்த நாட்டின் தலைவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது என்பதை நாம் மகிழ்ச்சியாக கூறுகின்றோம் என்றார்

Related Posts