Ad Widget

கெடுபிடிகளுக்கு மத்தியிலும் பல்கலையில் தீபம் ஏற்றப்பட்டது!

இராணுவக் கெடுபிடிகளுக்கு மத்தியிலும், இன்று வியாழக்கிழமை மாவீரர் நாள் நிகழ்வுகள் தமிழர் தாயகம் எங்கும் உணர்வு பூர்வமாகக் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட இடங்கள், வீடுகள், ஆலயங்களில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி பொதுமக்கள் வழிபட்டுள்ளனர்.

கடந்த வாரமே யாழ்.பல்கலைக் கழகம் இராணுவத்தினரால் முற்றுகையிடப்பட்டிருந்த நிலையில் இராணுவ கெடுபிடிகளையம் மீறி பல்கலை வளாகத்தில் மாணவர் பொது அறையில் ஈகைச் சுடர் ஏற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது என இணையத்தள செய்திகள் தெரிவிக்கின்றன.

maveera day 657485 557

வடக்கு, கிழக்கு பகுதிகளில் இராணுவத்தினரும் புலனாய்வாளர்களும் குவிக்கப்பட்டு தீவிர ரோந்து நடவடிக்கைகளும் முடுக்கிவிடப்படுள்ளன. இந்த நெருக்கடி, அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் போராட்டத்தில் கொல்லப்பட்ட மாவீரர்களுக்கு மக்கள் தமது அஞ்சலியைச் செலுத்தினர்

முல்லைத்தீவில் ராணுவ மற்றும் புலனாய்வாளர்களின் அழுத்தத்திற்கு மத்தியிலும் முல்லைத்தீவில் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று மாலை மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். 15 இற்கும் மேற்பட்ட மக்களுடன் நடைபெற்ற இந்நிகழ்வு உணர்வு பூர்வமாக,கண்ணீருடன் இடம்பெற்றதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. மாவீரர் குடும்ப தாய் ஒருவரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டது சிறப்பம்சமாகும்.

Related Posts