- Thursday
- August 20th, 2026
இலங்கையில் எதிர்வரும் ஜனவரி மாதம் நடத்தப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவை எதிர்த்துப் போட்டியிடுவதற்கான பொதுக் கூட்டணியில், 'தற்போதைய நிலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அங்கம் வகிக்கவில்லை' என்று அதன் தலைவர் இரா. சம்பந்தன் பிபிசி தமிழோசையிடம் கூறியுள்ளார். குறித்த பொதுக் கூட்டணிக்குள்ளேயே இன்னும் சில விடயங்கள் தொடர்பில் இணக்கப்பாடு காணப்பட வேண்டியிருப்பதாகவும் சம்பந்தன்...
யாழ்ப்பாணத்திற்கான புகையிரத சேவை ஆரம்பித்த பின்பு தனியார் பேருந்துச் சேவையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் தனியார் போக்குவரத்துச் சேவை பேருந்து சங்கத் தலைவர் பி.கெங்காதரன் கவலை தெரிவித்துள்ளார். ரயில் சேவை கட்டணம் குறைந்த அளவில் உள்ளது இதனால் அதிகளவு பயணிகளிகள் ரயிலில் பயணத்தை மேற்கொள்கிறார்கள். ரயிலில் 320 ரூபா 3 ஆம் வகுப்புக் கட்டணமாக அறவிடப்படுகிறது. ஆனால்...
மூன்றாம் தவணைப் பதவிக்காலத்திற்காக ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ போட்டியிடுவதில் எவ்விதத் தடையும் இல்லை என உயர் நீதிமன்றம் விளக்கமளித்துள்ளதாக சபை முதல்வர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இன்று பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார். பிரதம நீதியரசர் உட்பட உயர்நீதிமன்றத்தின் ஒன்பது நீதியரசர்களும் இதனை ஏகமனதாக தீர்மானித்து ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால...
வடமாகாணத்தில் 100 மில்லியன் ரூபாவை, நெல்சிப் திட்டத்தில் பணியாற்றிய பொறியியலாளர் ஒருவர் ஊழல் செய்துள்ளார் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழமை (30) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் அங்கு மேலும் கூறியதாவது, 'உலக...
15.10.2014 - புதன்கிழமைஆனையிறவு உப்பளத்தின் உப்பு வயல்களது புனரமைப்புப் பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் அதன் நிலைமைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேரில் ஆராய்ந்தறிந்து கொண்டார். ஆனையிறவு உப்பளத்திற்கு அமைச்சர் அவர்கள் விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன்போது, கடந்தகால நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக முற்றாக அழிந்தும், சேதமடைந்தும் இருந்த உப்பள வயல்களின் வரம்புகளைச்...
கடந்த 20 நாட்களாக பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜெ., சிறைவாசம் முடிகிறது. இவர் மீதான சிறப்பு கோர்ட்டின் தீர்ப்பும், தண்டனையும் நிறுத்தி வைக்கப்படுவதுடன், இவருக்கு ஜாமினும் வழங்குவதாக சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கொண்ட பெஞ்ச் உத்தரவு பிறப்பித்தது. புதுடில்லி: சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அ.தி.மு.க., பொதுசெயலர் ஜெ., மீதான ஜாமின் மனு...
இலங்கையில் முதியவர்களுக்கு என்று தனியான வைத்தியசாலை இதுவரை அமைக்கப்படவில்லை.எனினும் தனியான வைத்தியசாலை உருவாக்க வேண்டிய தேவையுள்ளது என யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் பவானி தெரிவித்தார். முதியோர்களுக்கு வலுவான அமைப்பு ஒன்றினை உருவாக்குவதற்கான கலந்துரையாடலும் உபகுழு தெரிவும் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே...
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது விதிக்கப்பட்ட தடையை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் நீக்கி தீர்ப்பளித்துள்ளமை தொடர்பில் கரிசனை செலுத்தியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. இந்த தீர்ப்பு குறித்து அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடன் ஆழமாக ஆராய்ந்துவருவதாகவும் அமைச்சு மேலும் அறிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவானது ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடையை...
ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் புலிகள் மீதான தடையை நீக்கியுள்ளது. லதன் சுந்தரலிங்கம் என்பவர் ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடையை எதிர்த்து 2011-ல் லக்சம்பேர்க்கில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் விடுதலைப் புலிகள் சார்பாக நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் விக்டர் கோப் முன்னிலையாகி வாதாடி வந்தார். இந்த வழக்கில்...
13.10.2014 - திங்கட்கிழமையாழ்ப்பாணத்திற்கு வருகைதந்த ஜனாதிபதி அவர்கள் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி, யாழ்ப்பாணம் இந்துமகளிர் கல்லூரி, நெல்லியடி மத்திய கல்லூரி ஆகியவற்றில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மகிந்தோதய தொழில்நுட்ப ஆய்வுகூடங்களை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்து பாடசாலை சமூகத்திடம் கையளித்தார். மேற்படி நிகழ்வுகள் அந்தந்தப் பாடசாலைகளில் இன்றைய தினம் (13) இடம்பெற்றன. முன்பதாக யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கு சென்ற ஜனாதிபதி அவர்கள்...
கிளிநொச்சி நகரின் பிரதான வீதியில் சூரியமின்கல வீதி விளக்குகளை பொருத்துமாறு மின்வலு மற்றும் மின்சக்தி அமைச்சருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்றைய தினம் (13) இடம்பெற்ற மாவட்டங்களின் விசேட அபிவிருத்தி குழுக் கூட்டத்தின் போதே இந்தப் பணிப்புரையை விடுத்தார். இதன்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கிளிநொச்சி நகர்பகுதியிலுள்ள வீதி விளக்குகள் இரவு...
இன்றைய தினம் (03.10.2014) யாழ் இந்துக் கல்லூரியில் விஜயதசமி நிகழ்வும், 125 ஆண்டு விழாவின் ஆரம்ப நிகழ்வும் கல்லூரியின் அதிபர் ஐ.தயானந்தராஜா தலைமையில் சிறப்பாக நடைபெற்றன. முதல் நிகழ்வாக சிவஞான வைரவப் பெருமான் ஆலயத்தில் பொங்கல் இடம்பெற்று 125 ஆவது ஆண்டு விழா கொண்டாட்டம் ஆரம்பமாகியது. அதனை தொடர்ந்து வைரவப் பெருமானுக்கு விசேட அபிசேகம் நடைபெற்றது. இந்...
வடமாகாணத்தில் தனக்குள்ள அதிகாரம் தொடர்பில் வடமாகாண ஆளுனர் G.A சந்திரசிறி இன்று காலை ஊடகவிலாளர்களுக்கு விளக்கமளித்திருந்தார் அதில் மாகாண சபை ஆளுனரை நீக்க வேண்டுமாயின், 1 குறித்த ஆளுனர் அரசியல் அமைப்புக்கு எதிராக செயற்பட்டு இருக்க வேண்டும். 2 அரச நிதியை கையாடல் செய்திருக்க வேண்டும். 3 லஞ்சம் ,ஊழல் செய்திருக்க வேண்டும். 4 தான் பினபற்ற...
யாழ் பல்கலைக்கழகத்தின் இணையத்தின் ஊடான தமிழ் மொழி மூலமான வியாபார முகாமைத்துவமாணி பட்டக்கற்கை நெறி புதிய பிரிவுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றது இதற்கான விண்ணப்ப முடிவுத்திகதி 15.09.2014 ஆகும்.யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவக் கற்கைகள் வணிக பீடமானது முகாமைத்துவமாணிக் கற்கை நெறியை Bachelor of Business Management (BBM) நடாத்துகின்றது. (more…)
மழை பெய்து கொண்டு இருந்தவேளையில் மின்சாரம் திருத்தும் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் மூவரை மின்சாரம் தாக்கியதில் ஒருவர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட மற்றும் இருவர் ஆபத்தான நிலையில் தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளார்கள். இன்று இரவு 7.00 மணியளவில் இந்த சம்பவம் இளவாலை சித்திரமேளி சந்தியில் இடம் பெற்றுள்ளது. இலங்கை மின்சார சபையில் ஒப்பந்த அடிப்படையில் கடமையாற்றும்...
பிரபல பொருளியல் ஆசிரியரான சின்னத்துரை வரதராஜன் இன்று தனது 63 வது வயதில் காலமானார்.புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று(18-08-2014) காலமானார். இவர் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி சார்பாக அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸில் கடந்த 2010 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் முதன்மை வேட்பாளராகப் போட்டியிட்டிருந்தார் என்பது...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் வணிக பீடத்தின் பீடாதிபதியாக பேராசிரியர் தி.வேல்நம்பி மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இன்று (14.08.2014) இடம்பெற்ற தேர்தலில் மூன்றில் இரண்டு வாக்குப் பலத்துடன் இவரது தெரிவு இடம்பெற்றுள்ளது. பேராசிரியர் தி,வேல்நம்பி யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் என்பதும் புத்தூர் ஸ்ரீ சோமாஸ்கந்தக் கல்லூரியின் பழைய மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கன. ஏற்கனவே கடந்த...
Facebook தளத்தில் அண்மையில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்களின் படி உங்கள் Facebook கணக்கிற்கான முகப்புப் பக்கத்தில் (News Feed) பகிரப்படும் வீடியோ கோப்புக்கள் தானாக இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. எனவே தேவையற்ற வீடியோ கோப்புக்களும் இவ்வாறு இயங்குவதனால் எமது தரவுப்பாவனை அதிகரிக்க வாய்ப்புண்டு. மேலும் இது சிலருக்கு சங்கடமாகக் கூட அமையலாம். எனவே இந்த வசதி உங்களுக்கு...
கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையில் கணிதம் பாடத்தில் சித்தியெய்தாத நிலையில் கபொத உயர்தரத்தில் கற்கும் போது இரண்டு வருடத்துக்குள் கணிதப் பாடத்தில் சித்தியெய்தும் முறைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.அமைச்சரவை கூட்டம் இன்று காலை ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன இதற்கான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்தார். இதனை ஆராய்ந்த அமைச்சரவை அதற்கு அங்கீகாரம்...
யாழ் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறைக்கு முன்பாக உள்ள மரத்தின்கீழ் மாணவர்கள் மதுக்கோப்பைகளை வைத்து மது அருந்தி மது போதையில் உளறிகொண்டிருப்பதாகவும் இதனால் இவ்வழியால் செல்லும் விரிவுரையாளர்களும் மாணவர்களும் சங்கடத்திற்குள்ளாவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்தும் அரங்கேறிவருவதாகவும் இன்று்(25) இது குறித்து விரிவுரையாளர்களால் மார்சல் அலுவலகத்திற்கு அறிவிக்கப்பட்டபோதும் நீண்டநேரமாக நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாத நிலையில் விரிவுரையாளர்களும் அலுவலர்களும் கூடியதை...
Loading posts...
All posts loaded
No more posts
