- Friday
- August 21st, 2026
யாழ். கோண்டாவில் பகுதியில் வீடு புகுந்து இன்று திங்கட்கிழமை (16) இரவு நடத்திய வாள்வெட்டில் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியதுடன், இருவர் படுகாயமடைந்து மாலை யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். இதில் கோண்டாவிலினைச் சேர்ந்த ரவீந்திரன் சுகிர்தன் (19) என்பவர் பலியாகியதுடன், சகோதரர்களான ரவீந்திரன் லக்ஸணா (26), ரவீந்திரன் செந்தூரன் (23) ஆகியோரும்,...
யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் விவசாய பீடம் இன்றுகாலை 8.00 மணிக்கு கிளிநொச்சி அறிவியல் நகரில் திறந்து வைக்கப்பட்டது.இத்திறப்பு நிகழ்வுகளில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, உயர்கல்வியமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க, ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார், வடக்கு மாகாண ஆளுநர் சந்திரசிறி, யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் ஆகியோர்...
கவுணாவத்தை ஆலயத்தில் நடைபெறவிருந்த மிருகபலிக்கு தடைவிதித்து மல்லாகம் நீதிமன்று இன்று தீர்ப்பளித்துள்ளது. கடந்த பல வருடங்களாக நடைபெற்று வந்த வேள்வியை தடுத்து நிறுத்தக் கோரி மல்லாகம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் போதே மேற்படி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று தினங்களாக மல்லாகம் நீதிமன்றத்தில் குறிப்பிட்ட வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட...
வடக்கு மாகாணசபையின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.np.gov.lk இணையத்தளம் துனிசியா (Tunisia )நாட்டினை சேர்ந்த அரேபிய இணைய ஊடுருவல் காரர்களால் முடக்கப்பட்டுள்ளது. இந்த இணையத்தளம் நேற்று முதல் முடக்கி வைக்கப்படுள்ளது. இந்த இணையத்தளம் வடக்கு மாகாணசபை தமிழ்த்தேசிய கூட்டமைப்பினால் வெற்றிகொள்ளப்பட்ட பின்னரும் ஆளுனரின் கட்டுப்பாட்டிலேயே இயங்கி வந்தது குறிப்பிடத்தக்கது. Prodigy TN - Fallaga Team என்று...
பாத்தீனியம் கிலோ 10 ரூபாவுக்கு வாங்கப்படும் என் அறிவித்து விவசாய நிலங்களில் வளரும் நச்சுத்தன்மை வாய்ந்த பாத்தீனிய செடிகளை அழிக்கும் முயற்சியில் வடமாகாணசபை விவசாய அமைச்சு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் மூலம் மக்களைக்கொண்டே பாத்தீனியத்தினை அழிக்கும் உத்தியினை விவசாய அமைச்சு மேற்கொண்டிருக்கின்றது. பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மற்றும் அழிப்பு நடவடிக்கைககளின் தொடர்சியாக அந்த வித்தியாசமான அறிவிப்பினை...
வாகனங்களுக்குரிய வருடாந்த வரி கட்டும்போது வீதி ஒழுங்கு விதிகள் சம்பந்தமாக முன்னாள் போக்குவரத்து பொலிஸ் ஆணையாளர் பேரின்பநாயகம் அவர்களால் வெளியிடப்பட்டுள்ள புத்தகம் ஒன்று 150 ரூபா கொடுத்து வாங்கவேண்டும் என தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் கட்டாயநடைமுறையில் இருப்பதாக தெரியவந்துள்ளது ஒவ்வொரு வாகன உரிமையாளரும் இது தொடர்பில் கட்டாயப்படுத்தப்படுவதாக நேற்று அங்கு வரிசெலுத்த சென்ற வாகன உரிமையாளர் எமது இணையத்தளத்திற்கு தெரிவித்தார். புத்தகத்தை வாங்குபவர்களுக்கு...
கிருத்திகன் குகேந்திரன் இயக்கத்தில் யாழ்ப்பாணத்தில் உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ள கல்லூரி படையணி காணொளிப்பாடல் இரசிகர்கள் மத்தியில் சமூக வலைத்தளங்கள் ஊடாக பிரபலம் அடைந்து வருகின்றது.கல்லூரி படையணி என்பது இந்துவின் மைந்தர்கள் அனைவருக்கும் புத்துயுரும் உத்வேகமும் உண்டாக்கும் ஒரு ஒளிப்பதிவு பாடலாகும். யாழ்ப்பாணத்தில் பல பாகங்களில் எடுக்கப்பட்டு இசையமைத்து வெளியிடப்பட்டிருக்கிறது. கல்லூரி படையணி பாடலின் சிறப்பான இசையை தந்திருந்தவர்...
முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் செய்த வட மாகாண முதலமைச்சர் உள்ளிட்ட தரப்பினரை இடைமறித்து தட்டயமலை கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தமது கிராமத்திற்கு குடிநீர் மற்றும் வயல் நிலங்களுக்கான நீரைப் பெற்றுதருமாறு கோரியே தட்டயமலை மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தாம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும், பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் தெரிவித்த கிராமமக்கள், முதலமைச்சர் பயணித்த வாகனத்தை இடைமறித்து தமது...
இலங்கை அரசால் கடந்த மார்ச் மாதம் தடைவிதிக்கப்பட்ட 16 வெளிநாட்டு தமிழ் அமைப்புகள் மற்றும் 424 தனிநபர்களின் அனைத்து சொத்துக்களையும் இலங்கையில் முடக்கும் அரசு ஆணையை இலங்கை அரசு வெளியிட்டுள்ளது. பயங்கரவாதத்துக்கு நிதியளிப்போர் என்று ஐ.நா பாதுகாப்புச்சபையின் 1373-வது தீர்மானத்துக்கு அமைய தடை செய்யப்பட்ட அமைப்புகள் மற்றும் தனிநபர்களின் அனைத்து அசையும், அசையா சொத்துகள், நிதிகள்,...
தமிழக அரசியல் கட்சியினரிடம் இப்போது ஒரு கேள்வி கேட்கிறேன். அங்குள்ள தமிழர்கள், தமிழ் கட்சியினர் அனைவரும் உரிமைகளுடன் கூடிய ஒன்றுபட்ட இலங்கையே தேவை என்று கூறும்போது நீங்கள் மட்டும் ஏன் தனி ஈழம் தேவை என்கிறீர்கள்? அதுதான் புரியவில்லை. தனி ஈழ கோரிக்கையை பாஜக ஆதரிக்கவில்லை என்று லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்....
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்ள தன்னுடன் வருமாறு வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைத்திருப்பது நல்லதொரு நல்லெண்ண சமிக்ஞை என்றும், இந்த அழைப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஏற்பதே ஆக்கப்பூர்வ இணக்க அரசியலுக்கு வித்திடும் செயலாகும் என்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான கே.என்.டக்ளஸ்...
இந்தியாவின் 14 ஆவது பிரதமராக எதிர்வரும் 26 ஆம் திகதி பதவியேற்கவுள்ள நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக தன்னுடன் இந்தியாவுக்கு வருமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்த அழைப்பை வடமாகாண முதலமைச்சர் நிராகரித்துவிட்டார்.இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸிக்கு அவர் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.இன்றைய திகதியில் உங்கள் தொலைநகல் கிடைக்கப் பெற்றேன்....
மோடி பதவியேற்பு வைபவத்தில் சனாதிபதி கலந்துகொள்வது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இது தொடர்பில் சனாதிபதி செயலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது மோடி அவர்களின் பதவியேற்பு வைபவத்தில் கலந்துகொள்வதற்கு செல்கின்ற இலங்கை தூதுக்குழுவில் இணைந்துகொள்ளுமாறு சனாதிபதி விக்னேஸ்வரனுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்தியாவின் பிரதமராக பதவியேற்கவிருக்கும் திரு.நரேந்திர மோடி அவர்களின் பதவியேற்பு வைபவத்தில் கலந்துகொள்வதற்கு செல்கின்ற சனாதிபதியின் தூதுக்குழுவில் இணைந்துகொள்ளுமாறு வட...
நினைவு நடுகற்களை இடித்தழிப்பதன் மூலமோ, அல்லது நினைவு தினங்களைக் கடைப்பிடிப்பதற்குத் தடைவிதிப்பதன் மூலமோ மக்கள் மனங்களில் இருக்கும் நினைவுகளை ஒருபோதும் அழித்துவிட முடியாது என்று வடமாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணசபையின் ஒன்பதாவது அமர்வு நேற்று வியாழக்கிழமை (22.05.2014) நடைபெற்றபோது முள்ளிவாய்க்காலில்...
வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி நடைபெற்ற ஒரு கோடி 58 இலட்சம் ரூபா மோசடியின் பின்னணியில் பொன்சேகாவின் கட்சியைச் சேர்ந்த சுரைஸ் என்பவரே சூத்திர தாரியாக செயற்பட்டுள்ளார் என்பது அம்பலமாகியுள்ளது. வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி பருத்தித்துறையைச் சேர்ந்த 14 குடும்பங்களிடம் ஒன்றரைக் கோடி ரூபாயினைப் பெற்று மோசடி செய்த சம்பவத்தில் சரத்பொன்சேகாவின் கட்சியைச் சேர்ந்த சுரைஸ் என்பவரும்...
வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரனை இன்று காலை 9 மணிக்கு நீதிமன்றத்திற்கு சமுகமளிக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், அவ்வழக்கு சோடிக்கப்பட்டதென இனங்காணப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், இன்று காலை நீதிமன்ற வளாகத்தின் முன் ரவிகரனின் தலைமையில் காணாமல் போனோரை மையப்படுத்தி ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்படுத்த திட்டமிட்டிருப்பதாகவும் அது நீதிமன்ற அமைதிக்கு பங்கம் விளைவிக்க கூடிய...
இறுதி யுத்தத்தில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு உங்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால் அதைக் கொண்டாடுவதால் தேவையற்ற பிரச்சினைகள் வரும், எனவே அந்த நிகழ்வைக் கைவிடுங்கள் என யாழ். மாவட்ட இராணுவத் தளபதி உதய பெரேரா தெரிவித்துள்ளார். யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளை இன்று செவ்வாய்க்கிழமை படைத்தலைமையகத்துக்கு அழைத்த யாழ்.மாவட்ட படைத் தளபதி மேஜர்...
இலங்கைத் தமிழ் மக்களின் நலனில் நிச்சயமாக அக்கறையோடு செயற்படுவேன் என பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி உறுதியளித்ததாக மக்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, புதுடில்லியில் உள்ள குஜராத் பவனில் அம்மாநில முதல்வரும், பா.ஜ.க பிரதமர் பதவி வேட்பாளருமான...
நேற்று மாலை யாழ். நகரினில் தேவாலயங்கள் மற்றும் ஆலயங்களினில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களிற்கு அஞ்சலி செலுத்த பிரார்த்தனைகளினில் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் பரவலாக முற்பட்டிருந்தனர்.அவர்களுடன் பொதுமக்களும் திரண்டிருந்தனர். இந்நிலையினில் நல்லூர் வீரமாகாளி அம்மன் ஆலயத்தினில் வெளியே நின்று அவர்கள் பிரார்த்தனையினில் ஈடுபட முற்பட்ட வேளை அங்கு இராணுவப் புலனாய்வாளர்களினால் தயார் நிலையினில் வைக்கப்பட்டிருந்த...
உள்நாட்டவர்கள் தனியார் மற்றும் அரச காணிகளை வெளிநாட்டவர்களுக்கு கைமாற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 2013ம் ஆண்டு முன்வைக்கப்பட்ட பாதீட்டின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி தனியார் மற்றும் அரச காணிகள் வெளிநாடுகளுக்கு வழங்குவதற்கு தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனினும் இவ்வாறான நடைமுறையை சட்டரீதியானதாக மாற்றும்...
Loading posts...
All posts loaded
No more posts
