Ad Widget

மது வெறியில் நினைவஞ்சலியைக் குழப்பிய குண்டர்கள்

நேற்று மாலை யாழ். நகரினில் தேவாலயங்கள் மற்றும் ஆலயங்களினில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களிற்கு அஞ்சலி செலுத்த பிரார்த்தனைகளினில் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் பரவலாக முற்பட்டிருந்தனர்.அவர்களுடன் பொதுமக்களும் திரண்டிருந்தனர்.

இந்நிலையினில் நல்லூர் வீரமாகாளி அம்மன் ஆலயத்தினில் வெளியே நின்று அவர்கள் பிரார்த்தனையினில் ஈடுபட முற்பட்ட வேளை அங்கு இராணுவப் புலனாய்வாளர்களினால் தயார் நிலையினில் வைக்கப்பட்டிருந்த கும்பலொன்று பிரார்த்தனைகளினில் ஈடுபட விடாது அடாவடியினில் ஈடுபட்டது.

பெரும்பாலும் மதுபோதையினில் இருந்த கும்பல் கூக்குரல் இட்டுக்கொண்டிருந்ததுடன் கேவலமாக அனைவரையும் மிரட்டியும் கொண்டிருந்தனர். அவற்றை இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் வேடிக்கை பார்த்த வண்ணமிருந்தனர்.

யாழ்.நகரினிலுள்ள வெங்கடேஸ்டவரா வர்த்தக நிலைய உரிமையாளரான நபர் ஒருவரே குழுவினரை வழிநடத்திய வண்ணமிருந்தார்.

அவர் இலங்கை பிரதமர் ஜயரட்ணவின் நெருங்கிய சகாவெனவும் தனிப்பட்ட ரீதியினில் இவரது வீட்டினிலேயே அவர் தனது யாழ்.வருகையின் போது தங்கியிருப்பதாகவும் கூறப்படுகின்றது.

இத்தகைய தொடர்பாடலை பயன்படுத்தியே புலனாய்வு பிரிவு இக்குண்டர்களை தூண்டிவிட்டு குழப்பங்களை ஏற்படுத்தியதாக கூறப்படுகின்றது.

ஆலய முன்றலினில் கற்பூரத்தை எரிக்கவோ தேங்காய்களை உடைக்கவோ அனுமதிக்க மறுத்த குண்டர்கள் அச்சிலேற்ற முடியாத வார்த்தைகளினால் அனைவரையும் திட்டி தீர்த்தனர்.

அத்துடன் அங்கு எடுத்து வரப்பட்டிருந்த தேங்காய்களை பலாத்காரமாக தூக்கி வீசினர். அதையும் தாண்டி சிவாஜிலிங்கம் அங்கு சுடரேற்றினார். அத்துடன் குறித்த குண்டர்கள் கும்பல் அங்கு பிரசன்னமாகியிருந்த ஊடகவியலாளர்களையும் மிரட்டியமை குறிப்பிடத்தக்கது.

jaffna_gang_001

jaffna_gang_003

Related Posts