Ad Widget

ஐக்கியத்தை பாதுகாப்போம்! யுத்த வெற்றி கொண்டாட்டங்கள் தொடரும்: ஜனாதிபதி

சிங்கள,தமிழ்,முஸ்லிம் மக்களை மட்டுமல்ல தமிழ்த்தலைவர்களையும் பயங்கரவாதிகள் கொன்றொழித்தனர். அவ்வாறான பயங்கரவாதிகளிடமிருந்து படையினர் உயிர்துறந்து பெற்றுக்கொண்ட ஐக்கியத்தை நாம் பாதுக்காக்கவேண்டும். அதனை பறித்தெடுப்பதற்கும் யாருக்கும் இடமளிக்கக்கூடாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

என்றுமே மரணிக்க முடியாதது இன ஐக்கியமாகும். அந்த ஐக்கியத்தை அபகரிப்பதற்கு ஒரு சிறு பிரிவினர் முயற்சிக்கின்றனர் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

யுத்தவெற்றியின் ஐந்து ஆண்டுகள் பூர்த்தி விழா, மாத்தறை கடற்கரை வீதியில் நடைபெற்றுகொண்டிருகின்றது. அதில் கலந்து கொண்டு நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு நாடாளுமன்ற தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. அக்குழுவில், ஜனநாயகரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் இருக்கின்றனர். அக்குழுவின் ஊடாக இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும் என்றும் அவர் சொன்னார்.

அரசாங்கத்தை விமர்ச்சிப்பதற்கு ஊடங்களுக்கு முழு சுதந்திரம் இருக்கின்றது. பொய்யான பிரசாங்கள் ஊடாக தவறாக வழிநடத்தவேண்டாம் என்றும் அவர் கூறினார்.

இது யுத்த வெற்றி விழா அல்ல. சமாதானத்தை வெற்றி கொண்ட நாள் என்றும் அவர் தெரிவித்தார்

பயங்கரவாதிகளினால் பணயக்கைதிகளாக வைக்கப்பட்டிருந்த தமிழர்களை படையினர் மீட்டுள்ளதுடன். இன்றைக்கு ஐந்து வருடங்களுக்கு முன்னர் இதேபோன்றதொரு நாளில் எமக்கு கிடைத்த வெற்றி தமிழர்களுக்கு எதிரான வெற்றியல்ல. பயங்கரவாதிகளுக்கு எதிரான வெற்றியாகும். அந்த வெற்றிக்கு பங்கம் ஏற்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர். அதற்கு இடமளிக்ககூடாது என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழீழ விடுதலை புலிகளுக்கு எதிரான போரில் படையினர் கண்ட வெற்றியை கொண்டாடுவதற்கு எதிராக மேற்கொள்ளப்படும் வெளி அழுத்தங்களை அரசாங்கம் ஒரு போதும் செவிமடுக்காது. அதே போல் யுத்த வெற்றி கொண்டாட்டத்தையும் அரசாங்கம் ஒரு போதும் நிறுத்தாது என்றும் அவர் தெரிவித்தார்.

‘நாங்கள் பயங்கரவாதிகளின் தோல்வியை நிச்சயமாக கொண்டாடுவோம். இக்கொண்டாட்டத்தில் யார் கலந்து கொண்டாலும் கலந்து கொள்ளாவிட்டாலும் எமது அந்த யுத்த வெற்றி கொண்டாட்டங்கள் தொடரும்’ என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.1

9(1951)

 

 

 

 

 

 

 

 

 

 

Related Posts