Ad Widget

தட்டயமலை கிராம மக்கள் முதலமைச்சரரிடம் நீதிகேட்டனர்!

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் செய்த வட மாகாண முதலமைச்சர் உள்ளிட்ட தரப்பினரை இடைமறித்து தட்டயமலை கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தமது கிராமத்திற்கு குடிநீர் மற்றும் வயல் நிலங்களுக்கான நீரைப் பெற்றுதருமாறு கோரியே தட்டயமலை மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தாம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும், பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் தெரிவித்த கிராமமக்கள், முதலமைச்சர் பயணித்த வாகனத்தை இடைமறித்து தமது பிரச்சனைகளை  தெரிவித்தனார். 

தாம் கடந்த 40 வருடகாலமாக இவ்விடத்தில் வசிப்பதாகவும் ,தாம் யாரிடமும் பணம் வாங்கிவிட்டு இந்தபோராட்டத்தினை நடாத்தவில்லை எனவும் கல்குவாரி பிரச்சனை வேறு தமது பிரச்சனை வேறு கல்குவாரியை ஆதரிப்பது தமது திட்டமல்ல என்றும் தமக்கு உடனடி தீர்வு தேவை  என்றும் குறிப்பிட்டனர்.மகாணசபை உறுப்பினர் ரவிகரன் மீதும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.

மக்களின் பிரச்சனையினை முதலமைச்சர் அமைதியாக செவிமடுத்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

காணொளி :நன்றி  யாழ்நாதம்

Related Posts