- Thursday
- August 20th, 2026
யாழ்.குடாநாட்டில் படையினரின் அதி உச்சக்கட்ட பாதுகாப்பிற்குள் கட்சி அலுவலகங்கள் கோவில்கள் தேவாலயங்கள் கடந் த 3தினங்களாக வைக்கப்பட்டிருக்கும் நிலையிலும் முள்ளிவாய்க்கால் மண்ணில் கொல்லப்பட்ட மக்களுக்கான ஆத்மசாந்திப் பிரார்த்தனைகள் மற்றும் நினைவேந்தல்கள் நடைபெற்றிருக்கின்றன. முள்ளிவாய்க்கால் பகுதில் இறுதி யுத்தத்தில் இறந்த மக்களுக்கான ஆத்மசாந்தி பிரார்த்தனை நிகழ்வுகள் நடத்துவதற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ்தேசிய மக்கள் முன்னணி ஆகியன...
சிங்கள,தமிழ்,முஸ்லிம் மக்களை மட்டுமல்ல தமிழ்த்தலைவர்களையும் பயங்கரவாதிகள் கொன்றொழித்தனர். அவ்வாறான பயங்கரவாதிகளிடமிருந்து படையினர் உயிர்துறந்து பெற்றுக்கொண்ட ஐக்கியத்தை நாம் பாதுக்காக்கவேண்டும். அதனை பறித்தெடுப்பதற்கும் யாருக்கும் இடமளிக்கக்கூடாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.என்றுமே மரணிக்க முடியாதது இன ஐக்கியமாகும். அந்த ஐக்கியத்தை அபகரிப்பதற்கு ஒரு சிறு பிரிவினர் முயற்சிக்கின்றனர் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.யுத்தவெற்றியின் ஐந்து ஆண்டுகள்...
தெல்லிப்பழை சந்தியில் இருந்து கீரிமலை செல்லும் வீதிப்பாவனைக்கு இராணுவத்தினரால் தடை விதிக்கப்பட்டுள்ளது. தெல்லிப்பழை சந்தியில் இருந்து கீரிமலை செல்லும் வீதி சிங்கள சுற்றுலா பயணிகளைத் தவிர ஏனையவர்களுக்கு இராணுவத்தினரால் தடை விதிக்கப்பட்டுள்ளது. மே - 18 ஆம் நாளான இன்று முள்ளிவாய்க்காலில் இறுதிப்போரில் உயிரிழந்த உறவுகளுக்கு கீரிமலையில் ஆத்ம சாந்திப்பூஜை மற்றும் பிதிர்க்கடன் செய்ய செல்லக்...
கீரிமலைக்கு சென்ற வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் இராணுவத்தினரால் இடை மறிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். யுத்தத்தில் உயிரிழந்த உறவகளின் ஆத்மா சாந்தியடைய வேண்டி கீரிமலையில் பிதிர்க்கடன் களித்து வழிபடச் சென்ற வடக்கு மாகாண சபை உறுப்பினர் இராணுவத்தினரால் தெல்லிப்பழை சந்தியில் மறிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். மேலும் நல்லூர் ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளை மேற்கொண்டுள்ளார்...
உதயன் பணிமனை இன்று மதியம் முதல் இராணுவத்தினரால் திடீரெனச் சுற்றிவளைக்கப்பட்டு, போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளளது. இன்று காலை முதலே உதயன் பணிமனையைச் சூழ சிவில் உடையில் ஏராளமான புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டிருந்தனர்.வாகனமொன்றை உதயனுக்கு அருகில் நிறுத்தி விட்டு, அதிலிருந்து இறங்கிய சிலர், ஆயுதங்களுடனும் காணப்பட்டனர்.உதயன் பணியாளர்களை அச்சுறுத்தும் வகையில் அவர்களின் செயற்பாடுகள் அமைந்ததால், அது குறித்து அந்த...
கடந்த கால இறுதி போரின் போது மக்களின் இருப்புக்கள் மீது கொத்துக் கொத்தாக வீசப்பட்ட குண்டு மழையினால் கொல்லப்பட்ட எமது மக்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு எமக்கென்ன தடை என வட மாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் இன்று தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில், 2009ம் ஆண்டு இறுதி போரின்...
நைஜீரியாவில் கடந்த மாதம் பாடசாலை மாணவர்களை கடத்தி சென்ற ‘போகோ ஹாரம்’ தீவிரவாதிகளின் குழுவை சேர்ந்த 200 தீவரவாதிகளை வடகிழக்கு நைஜீரியா பகுதியை சேர்ந்த கிராம மக்கள் ஒன்றாக சேர்ந்து வெட்டிச் சரித்துள்ளனர். நைஜீரியாவில் ‘போகோ ஹாரம்’ தீவிரவாதிகளின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கிராமங்களுக்குள் புகுந்து கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி...
தெற்காசிய பிராந்தியத்தில் இன்னுமொரு மகிந்த ராஜபக்ஷ, அரசத் தலைவராக உருவாகியுள்ளார். அந்த வகையில் அவருக்கு எமது மக்கள் சார்பில் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்; கொள்கின்றேன் என இந்தியப் பொதுத் தேர்தல் முடிவுகளை அடுத்து நரேந்திர மோடியின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கட்சி அமோக வெற்றி பெற்று, இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி நியமிக்கப்படவுள்ளமை தொடர்பில் கருத்துத்...
வாடிக்கையாளர்களை மேலும் தன்னகத்தே ஈர்ப்பதற்காக பல்வேறு புதிய சேவைகளை அறிமுகப்படுத்தி அதை இலவசமாகவும் வழங்கி வரும் பேஸ்புக் வலைத்தளம், தற்போது வங்கியில் இடம்பெறுவதைப்போன்ற பணிப்பரிமாற்றம் செய்யும் ஒரு புதிய சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. குறித்த சேவை வங்கிகள் அளிக்கும் 'இன்டர்நெட் பேங்கிங்" வசதியை போன்றதாகும். இதன் மூலம் உலகின் எந்தவொரு மூலைக்கும் ஒரு நொடியில் பணத்தை...
விரைவான உலக செயற்பாட்டினால் தமிழ் மக்களின் இனத்துவ அடையாளங்கள் அழிவடைந்து வருகின்றன. அதிலிருந்து மீண்டு எங்களுடைய அடுத்த சந்ததியினருக்கு எமது அடையாளங்களை காண்பிக்க வேண்டியது எமது கடமையாகும் என யாழ்.பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியர் வி.பி.சிவநாதன் தெரிவித்தார் சைவநெறிக் கூடமும் சைவ மகா சபை தெய்வத் தமிழ் அறக்கட்டளை நிதியமும் இணைந்து நடத்திய தமிழ் அருட்சுனைஞர் பயிற்சி...
ஜனாதிபதி தேர்தலுக்கான பொது வேட்பாளராக முதலமைச்சர் விக்கினேஸ்வரனை சிபாரிசு செய்துள்ளமை தொடர்பில் எதிர்க்கட்சிகள் தமது நிலைப்பாட்டினை தெரிவிக்க வேண்டும் எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், அதிகாரப் பகிர்வின் மூலமாக நாட்டை ஒற்றுமைப்படுத்த இவரின் தெரிவு சிறந்ததொன்றாக அமையும் எனவும் சுட்டிக்காட்டினார். அதிகாரத்தைப் பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்தும் அமைப்பினால் நேற்று கொழும்பில்...
அச்சுவேலிப்பகுதியில் இடம்பெற்ற சம்பவத்தில் மூவர் உயிரிழந்ததுடன் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் நிக்கோநாதன் அருள்நாயகி (வயது 50),இவரது மகனான நி.சுபாங்கன் (வயது 20), மற்றும் இவரது மகள் யசோதரன் மதுசா (வயது 28) ஆகியோரே கொலை செய்யப்பட்டவர்களாகும் மேலும் படுகாயமடைந்த நிற்குணாந்தன் தர்மிகா (வயது 25),யசோதரன் வேலன் (வயது 30) ஆகியோர்...
புதுவை இரத்தினதுரைக்காக கவிஞர்கள், இலக்கியவாதிகள் குரல் கொடுக்க ஏன் தயக்கம் காட்டுக்கின்றனர் என வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.யாழ். தியாகி அறக்கொடை நிலையத்திலுள்ள சொர்ணாம்பிகை மண்டபத்தில் நேற்று மாலை ஊடகவியலாளரும் கவிஞருமான செல்வக்குமாரின் ஊசல் கவிநூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ் விழாவுக்கு ஐங்கரநேசன் தலைமை தாங்கி நடாத்தி இருந்தார். அதன் போது...
இந்துக்களின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் கொழும்பு இந்துக் கல்லூரி அணிக்கும் யாழ். இந்துக் கல்லூரி அணிக்கும் இடையிலான ஐந்தாவது துடுப்பாட்டப் போட்டி இன்று வெள்ளிக்கிழமை யாழ். இந்துக் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமானது. கொழும்பு இந்துக் கல்லூரி அணி திவாகரன் தலைமையிலும், யாழ். இந்துக் கல்லூரி அணி கல்கோகன் தலைமையிலும் களமிறங்கியுள்ளன. (more…)
மிக அக்கறையுடன் முன்னதாகவே பரிசீலித்திருக்க வேண்டிய சில விடயங்களை மிக ஆதங்கத்துடன் உங்கள் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகின்றேன். இப்போதே சில விடயங்களைக் கட்டுப்படுத்த தவறுவீர்களேயானால் அவை தமிழர்களினதும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினது ஒற்றுமைக்கும் பெரும் பங்கத்தை ஏற்படுத்துவது மட்டுமன்றி, பெரும் தேசிய அனர்த்தத்துக்கும் வழிகோலும் என எச்சரிக்க விரும்புகிறேன்' என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர்...
இலங்கையின் மாகாணங்களுக்கு புதிய திணைக்களங்களை (அரசுத் துறைகள்) உருவாக்கும் அதிகாரம் இருக்கிறது என்று கூறுகிறார் முன்பு ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபையில் முதல்வருக்கு செயலராகவும், பின்னர் கிழக்கு மாகாண முதல்வருக்கு ஆலோசகராகவும் பணியாற்றிய டாக்டர் கே.விக்னேஸ்வரன். இலங்கையின் வட மாகாணசபை முதல்வர் விக்னேஸ்வரன் சமீபத்தில் மாகாண கவுன்சிலில் சமர்ப்பித்த வரவு செலவுத் திட்ட உரையில்,...
வடக்கு மாகாண சபை தமது முதலாவது வரவு செலவுத் திட்டத்தில், சில புதிய திணைக்களங்களை உருவாக்க முயன்றுள்ளதாகவும், இது அரசியலமைப்புக்கு விரோதமானது என்றும் வடக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றிடம் கருத்து வெளியிட்டுள்ள அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் வடக்கு மாகாணசபை உறுப்பினர்களும், நாட்டின் அரசியலமைப்பையும்,...
வடக்கு மாகாண சபையின் அமர்வுகளில் இடையில் மதிய போசனத்தில் தம்முடன் இணைந்து ஊடகவியலாளர்கள் பங்கெடுப்பதனால் தமக்கு இடையூறு ஏற்படுவதாக தமிழ் மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் தன்னிடம் முறையிட்டுள்ளதாக வடக்கு மாகாண சபையின் உறுப்பினரும் அவைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்ததைத் தொடர்ந்து ஊடகவியலாளர்கள் சபை நிதியில் பரிமாறப்படும் உணவு மற்றும் தேனீர் போன்றவற்றை இன்று...
தென்னாபிரிக்காவின் முதல் கறுப்பின ஜனாதிபதியான நெல்சன் மண்டேலாவின் மறைவிற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது அனுதாபத்தை தெரிவித்துள்ளார். பொதுநலவாய நாடுகளின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள அந்த அனுதாப செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மறைந்த நெல்சன் மண்டேலா உலகளவில் அழிக்கமுடியாத புகழ்வாய்ந்த புனிதராவார். 1994 ஆம் ஆண்டில் தென் ஆபிரிக்கா, பொதுநலவாயத்தில்...
அதிகாரத்தைப் பகிர்வதாக சர்வதேசத்திற்கு 13ஆவது திருத்தச்சட்டத்தை காண்பித்துவிட்டு அதனை நடைமுறைப் படுத்தாது விடுவதே அரசாங்கத்தின் நோக்கமாக இருக்கின்றது. வடக்கு மாகாணசபைக்கு மத்திய அரசாங்கம் போடும் முட்டுக் கட்டைகள் இதனையே காட்டுகின்றன என சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கில் அதிபாதுகாப்பு வலயப் பகுதிகளுக்குள் அமைந்துள்ள ஆலயங்கள், வீடுகள் இடிக்கப்படுகின்றன. இதனை பார்வையிடச் சென்ற போது என்னை இராணுவத்தினர்...
Loading posts...
All posts loaded
No more posts
