Ad Widget

பொது வேட்பாளருக்கு முதல்வர் விக்கினேஸ்வரன் தகுதியானவர் எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு என்ன? சுமந்திரன் எம்.பி. கேள்வி

ஜனா­தி­பதி தேர்­த­லுக்­கான பொது வேட்­பா­ள­ராக முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வ­ரனை சிபா­ரிசு செய்­துள்­ளமை தொடர்பில் எதிர்க்­கட்­சிகள் தமது நிலைப்­பாட்­டினை தெரி­விக்க வேண்டும் எனத் தெரி­வித்த தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ.சுமந்­திரன், அதி­காரப் பகிர்வின் மூல­மாக நாட்டை ஒற்­று­மைப்­ப­டுத்த இவரின் தெரிவு சிறந்­த­தொன்­றாக அமையும் எனவும் சுட்­டிக்­காட்­டினார்.

அதி­கா­ரத்தைப் பகிர்ந்து நாட்டை ஐக்­கி­யப்­ப­டுத்தும் அமைப்­பினால் நேற்று கொழும்பில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி ருந்த

செய்­தி­யாளர் சந்­திப்பின் போதே அவர்

மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரி­விக்­கையில், எதிர்க்­கட்சி கோரினால் பொதுத்­தேர்­தலை நடத்தத் தயார் என அர­சாங்கம் குறிப்பிட்­டது.இப்­போது அதையே

எதிர்க்­கட்­சி­களும்வெளிப்­ப­டை­யா­கவே கோரிவருகின்றன. எனவே, அர­சாங்கம் இப்­போது வாய்­மூடி மௌனியாக இருக்­காது பொதுத்­தேர்­தலை

நடத்த வேண்டும்.

அதேபோல் கடந்த வாரம் ராவய பத்­தி­ரிக்­கையில் ஜனா­தி­பதித் தேர்­தலில் எதிர்க்­கட்­சியின் சார்பில் பொது வேட்­பா­ள­ராக வட மாகாண முத­ல­மைச்சர் சி.வி. விக்­கி­னேஸ்­வ­ரனை நிய­மிக்க வேண்டும் என்ற கருத்து வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. இந்தக் கருத்து தொடர்பில் பிர­தான எதிர்க்­கட்­சி­களான ஐக்­கிய தேசியக் கட்சி, மக்கள் விடு­தலை முன்­னணி, மற்றும் ஜன­நா­யகக் கட்­சிகள் ஆகியன தமது நிலைப்­பாட்­டினை தெரி­விக்க வேண்டும்.

எதிர்க்­கட்­சிகள் இன்­னமும் தமக்­கென பொது வேட்­பாளர் ஒரு­வரை தேடிக்­கொண்­டி­ருக்­கின்­றன. இந்த நிலையில் வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி. விக்­கி­னேஸ்­வ­ரனின் பெய­ரினை சிபா­ரிசு செய்­தி­ருப்­ப­தா­னது சிறந்­த­தொரு விட­ய­மாகும். இது எமது தனிப்­பட்ட கருத்தோ அல்­லது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் கருத்தோ அல்ல. இது சிங்­கள பத்­தி­ரிக்­கை­யொன்றின் பொது­வான கருத்­தே­யாகும். அத்­தோடு விக்­கி­னேஸ்­வரன் அவர்கள் வடக்கில் மிகப்­பெ­ரி­ய­தொரு வெற்­றி­யுடன், அனைத்து மக்­க­ளி­னதும் விருப்பில் தெரிவு செய்­யப்­பட்­டவர் ஆவார்.

அத்­தோடு நீதி­ய­ர­ச­ராக செயற்­பட்ட கால கட்­டங்­களில் நாட்­டிற்கு உண்­மை­யா­கவும், எந்­த­வித குற்­றச்­சாட்­டுக்­கு­மின்றி சேவை­யாற்­றிய ஒருவர். ஆகவே தான் அவரின் பெயர் சிபா­ரிசு செய்­யப்­பட்­டுள்­ளது. எனவே, இதனை சாதா­ர­ண­மா­ன­தொரு விட­ய­மாகக் கருத்தில்கொள்ளாது எதிர்க்­கட்­சிகள் இவ்விடயம் தொடர்பில் தமது நிலைப்­பாட்டை தெரி­விக்க வேண்டும்.

அதேபோல் இவர் பொது வேட்­பா­ள­ராக நிய­மிக்க தகுதி இல்­லை­யென்றால் அதற்­கான காரணம் என்­ன­வென்­ப­த­னையும் தெரி­விக்க வேண்டும். அதி­காரப் பகிர்வின் மூல­மாக நாட்டை ஒற்­று­மைப்­ப­டுத்த இவ்­வா­றான ஒரு­வரே சிறந்த தெரி­வாக இருக்கும் என்று கரு­து­கின்­றனர். ஆக­வேதான் இவரை சிபா­ரிசு செய்ய முன்­வந்­துள்­ளனர்.

எந்தத் தேர்­தர்தல் இடம்­பெற்­றாலும் மக்கள் தமது வாக்குப் பதி­வினை மேற்­கொள்ள வேண்­டி­யது அவர்களின் கடமையாகும். எனவே வடக்கில் இருந்து வெளியே வாழும் தமிழ் மக்கள் தமது வாக்காளர் இடாப்புப் பதிவுகளை செய்து கொள்ள வேண்டும். இதனை ஒரு முக்கிய பொறுப்பாக தமிழ் மக்கள் மேற்கொள்ள வேண்டும். தேர்தலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

Related Posts