Ad Widget

எங்களுடைய இன அடையாளங்களை அடுத்த சந்ததியினருக்கும் காண்­பிக்க வேண்டும் -பேராசிரியர் வி.பி.சிவநாதன்

விரை­வான உலக செயற்­பாட்­டினால் தமிழ் மக்­களின் இனத்­துவ அடை­யா­ளங்கள் அழி­வ­டைந்து வரு­கின்­றன. அதி­லி­ருந்து மீண்டு எங்­க­ளு­டைய அடுத்த சந்­த­தி­யி­ன­ருக்கு எமது அடை­யா­ளங்­களை காண்­பிக்­க வேண்­டி­யது எமது கட­மை­யாகும் என யாழ்.பல்­க­லைக்­க­ழக கலைப்­பீ­டா­தி­பதி பேரா­சி­ரியர் வி.பி.சிவ­நாதன் தெரி­வித்தார்

சைவ­நெறிக் கூடமும் சைவ மகா சபை தெய்வத் தமிழ் அறக்­கட்­டளை நிதி­யமும் இணைந்து நடத்­திய தமிழ் அருட்­சு­னைஞர் பயிற்சி நிறைவும் சான்­றிதழ் வழங்கும் நிகழ்வும் சைவ மகா சபையின் தலைவர் கலி­யு­க­வ­ரதன் தலை­மையில் கொக்­குவில் இந்துக் கல்­லூ­ரியின் பஞ்­ச­லிங்கம் மண்­ட­பத்தில் அண்­மையில் நடை­பெற்­றது. இதன்­போது அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,

நாங்கள் உறங்­கி­விட்டால் எல்­லா­வற்­றையும் இழந்து விடுவோம். எங்­களைப் பாது­காக்க சாத்­தி­யப்­பா­டான வழி­களைச் சிந்­திக்க வேண்டும். தமிழ் மொழியில் மந்­தி­ரங்கள் கூறி இறை­வ­னுக்கு வணக்கம் செலுத்­து­வது என்­பது காலத்தின் தேவை­யாகும். ஆரம்­பத்தில் நாம் எமது மொழி­யி­லேயே பூஜை ஆரா­த­னை­களை மேற்­கொண்டோம். சமூகப் புரட்சி, கல்விப் புரட்சி, சமயப் புரட்சி என எது­வா­னாலும் அவற்­றுக்கு எதி­ராக சீர்­தி­ருத்தம் அவ­சியம். அவ்­வா­றான ஒரு தன்மை தான் தமிழ் மொழியில் மந்­திர உச்­சா­டனம் செய்து இறை­வனை ஆதா­ரிக்கும் முறை­யாகும்.

வருங்­கால சந்­த­தியின­ரை ­பாதுகாக்­க­ வேண்­டிய ஒரு கட்­டாய தேவை இன்று எமக்கு ஏற்­பட்­டுள்­ளது. எமது கலை, கலா­சாரம் இன்று நேற்று உரு­வாக்­கப்­பட்­ட­தல்ல. எமது மூதா­தை­யர்கள் பல ஆண்­டு­க­ளுக்கு முன்னர் அவற்றை வகுத்­துள்­ளனர். விரை­வான உலக செயற்­பாட்டில் எமது அந்த அடை­யா­ளங்கள் அழி­வ­டைந்து வரு­கின்­றன. அதி­லி­ருந்து மீண்டு எமது அடுத்த சந்­த­தி­யி­ன­ருக்கு எமது அடை­யா­ளங்­களை காண்­பிக்க வேண்டும். எனவே நாம் உறங்­கி­விட்டால் எல்­லா­வற்­றையும் இழந்து விடுவோம். ஆகவே எம்மைப் பாது­காக்க வேண்டும். அவற்­றிற்கு இவ்­வா­றான தமிழ் அருட்­சு­னைஞர் பயிற்­சிகள் மிகவும் அவ­சி­ய­மானவை. விளிம்பில் இருக்கும் நாம் விழுந்­தி­டாமல் இருப்போம் என்றார்.

இந்தப் பயிற்சி நெறியில் வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களைச் சேர்ந்த 36 பேர் பங்­கு­பற்­றி­யி­ருந்­தனர். இந்­தி­யாவின் தமிழ்­நாட்­டி­லி­ருந்து வருகை தந்த செந்­தமிழ் வேள்விச் சதுரர் சக்­திவேல் முரு­கனார் தலை­மை­யி­லான விரி­வு­ரை­யா­ளர்­களால் இந்தப் பயிற்சி நெறி நடத்­தப்­பட்­டது.வடக்கு, கிழக்­கி­லுள்ள ஏரா­ள­மான கிரா­மிய ஆல­யங்கள் பூசை வழி­பா­டுகள் இன்றி இருக்­கின்ற நிலை­யிலும் ஆல­யங்­களில் தமிழில் பூசை­களை மேற்­கொள்­ள­வேண்டும் என்ற கோரிக்கை மேற்­கி­ளம்­பி­யுள்­ளது. இந்­நி­லை­யிலும் மேற்­படி தமிழ் அருட்­சு­னை­ஞர்கள் பயிற்­று­விக்­கப்­பட்டு முத­லா­வது அணிக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கலந்துகொண்ட சக்திவேல் முருகனாரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டவர்களும் மேற்படி அருட்சுனைஞர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி வைத்தனர்.

Related Posts