- Sunday
- December 21st, 2025
இந்த நாட்டில் இரண்டாம் தர பிரஜைகளாக வாழ்வதற்கு நாம் தயாரில்லை, பொருளாதார கலாசார ரீதியாக நாம் தனித்துவமானவர்கள். எங்களை நாங்களே ஆளுகின்ற அதிகாரத்தை கேட்பதில் எந்த தவறும் இல்லை. எங்களுடைய நியாயமான கோரிக்கையை இனியும் நிராகரிக்க முடியாது அத்துடன் ஆயுதப் போராட்டத்தை நாங்கள் விரும்பவில்லை என்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்களின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். திருகோணமலை...
இடம்பெயர்ந்த சம்பூர் மக்களை மீளக்குடியமர்த்த கோரியும் மக்களின் காணிகளை கையளிக்குமாறு வலியுறுத்தியும் கிளிவெட்டி, சம்பூர் இடைத்தங்கல் முகாமில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுகொண்டிருக்கின்றது. இந்த போராட்டத்தில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத்தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களும் பங்கேற்றுள்ளனர். இவ்விடத்தில் இன்று சனிக்கிழமைக்;காலை ஒன்றுகூடியவர்கள் அரசாங்கத்திற்கு எதிரான சுலோகங்கள் தாங்கிய...
கைதிகள் கல்வி கற்பதற்காக சிறைச்சாலை பள்ளிக்கூடம் வடரேகா சிறையில் தை மாதத்திலிருந்து இயங்க இருப்பதாக புனர்வாழ்வு சிறைச்சாலை சீர்திருத்த அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்தார். கல்விப்பொதுத் தராதர சாதாரண மற்றும் உயர்தர வகுப்புக்கள் வரையிலும் கல்வி கற்று பல்வேறு குறிறச்சாட்டுகளின் அடிப்படையில் சிறையிலிருக்கின்ற கைதிகளில் 280 கைதிகள் தெரிவு செய்யப்பட்டு கல்வியை மேற்கொள்வதற்கு வசதிகள் செய்து...
ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் உதயன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது மக்களின் துன்பதுயரங்கள்,வாழ்க்கையிலுள்ள இடர்பாடுகள் மற்றும் பிரதேசங்களிலுள்ள வளங்களின் தன்மை போன்றவற்றை அறியாது அரசியலில் நுழைந்தவர்கள் உண்மைக்குப் புறம்பாக பொறுப்பற்றவிதமாக அறிக்கைகளை வெளியிட்டு வருவது கவலை தருகின்றது. நெடுந்தீவு மக்களின் வாழ்வியலையும், வளங்கள் சார்ந்த சவால்களையும் வாழ்ந்து அனுபவித்த அந்த மண்ணின்...
புங்குடுதீவு புனித சவேரியார் ஆலயம் இன்று 17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு யாழ் ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகையால் அபிஷேகம் செய்யப்பட்டு திறந்து வைக்கப்படவுள்ளது நீண்ட காலத்தின் பின்னர் புனரமைப்புச் செய்யப்பட்ட சுமார் 150 வருட பழைமை வாய்ந்த இவ் ஆலயம் சுண்ணாம்புக் கற்களால் உருவாக்கப்பட்டுள்ளது.தற்போதைய பங்குத் தந்தையான அருட் தந்தை...
யாழ் பொதுசன நூலகத்தில் கூடியிருந்த பொதுமக்கள் பெண்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளதாக மக்கள் தெரிவித்திருக்கிறார்கள்.பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனைச் சந்திக்க முனைந்த மக்கள் மீது குறிப்பாக பெண்கள் மீது கடுமையான தாக்குதல்களை இலக்கத் தகடுகள் அற்ற பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். காணாமல்போன உறவொன்றின் சகோதரியான 13 வயது சிறுமியின் கன்னத்தில் காவல்துறை அறைந்ததாக அச்சிறுமி சர்வதேச...
யாழ். பல்கலைக்கழகம் மூடப்பட்டிருக்கின்றமை ஜனநாயகத்தின் குரலை அடக்கி ஒடுக்கும் செயல். தமிழர்களின் குரலை அடக்கும் செயல் என்று தெரிவித்துள்ள யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், மாணவர் ஒன்றியத்தின் கோரிக்கையை வரவேற்பதாகவும் பல்கலைக்கழக கல்வி செயற்பாடுகளை நிறுத்தி வைப்பதற்கு தாம் ஆதரவு தெரிவிக்கவில்லை எனவும் கூறியுள்ளது. இது தொடர்பில் சங்கம் மேலும் தெரிவித்துள்ளதாவது: பொதுநலவாய மாநாட்டு காலப்பகுதியில்...
கிளிநொச்சி சென்று கொண்டிருந்த சனல் 4 ஊடகவியலாளர்கள் கொழும்பு திரும்பியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார். அவர்கள் வாகனம் ஒன்றின் ஊடாக கொழும்பு வந்துக் கொண்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். ஊடகவியலாளர் மக்ரே தனது ருவிட்டரில் தாம் விருப்பமின்றியே கொழும்புக்கு செல்வதாக தெரிவித்திருக்கின்றார் கிளிநொச்சி சென்று கொண்டிருந்த சனல் 4 ஊடகவியலாளர்களுக்கு...
வடமாகாண ஆளுநரை மாற்றுவதற்கான பிரேரணை வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டது. வடமாகாண சபையின் இரண்டாவது அமர்வு இன்று திங்கட்கிழமை (11) நடைபெற்றது. இதன்போது, வடமாகாண சபை ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியை மாற்ற வேண்டும் என்ற பிரேரணையினை வட மாகாணசபை உறுப்பினர் கேசவன் சயந்தன் சபையில் முன்வைக்க வடமாகாண சபை உறுப்பினர் ஆறுமுகம் ரவிகரன் அந்தப் பிரேரணையினை வழிமொழிய...
விடுதலைப் புலிகள் அமைப்பில் ஊடகவியலாளராக அறியப்பட்ட இசைப்பிரியா விவகாரத்தில் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்த தலைமையிலான ஈ.பி.டி.பியினால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்;ஷவிடம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கை தொடர்பில் தமிழ் மக்கள் சார்பாக ஈ.பி.டி.பி ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளதாக அக்கட்சி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது....
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் படையினரால் பொதுமக்களின் வீடுகள் இடித்தழிக்கப்படுவதை நிறுத்துமாறு ஜனாதிபதி யாழ்ப்பாண கட்டளை தளபதிக்கு உத்தரவிட்டுள்ளார்.இந்த தகவலை ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தனிடம் தொலைபேசி மூலம் அறிவித்துள்ளார். நேற்று காலை சம்பந்தன் இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு முறையிட்டார்.வலிகாமம்...
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரன் (கமல்) அவர்கள் இன்றைய தினம் (25) வடக்கு மாகாண சபையின் முதலாவது அமர்வில் ஆற்றிய கன்னிஉரை. எண்ணி முடிதல் வேண்டும் நல்லதே எண்ணவேண்டும் திண்ணிய நெஞ்சம் வேண்டும் தெளிந்த நல்லறிவு வேண்டும் என்றுரைத்தான் பாரதி! கௌரவ அவைத்தலைவர் அவர்களே! உருண்டு...
வடமாகாண சபையின் அடுத்த அமர்வு எதிர்வரும் நவம்பர் மாதம் 11ம் திகதி நடைபெறுமென தவிசாளர் கந்தையா சிவஞானம் அறிவித்துள்ளார். வடமாகாண சபையின் கன்னி அமர்வு இன்று வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகியது. இந்த நிலையில் முதலாவது அமர்வின் முதல் நிகழ்வாக தவிசாளர், உபதவிசாளர் தெரிவுகள் மேற்கொள்ளப்பட்டன. தவிசாளாராக கந்தையா சிவஞானமும் உபதவிசாளராக அன்ரனி ஜெகநாதனும்...
போர் முடிவடைந்துவிட்டது. சமாதானம் வந்துவிட்டதாக இலங்கை அரசு கூறியுள்ளது. ஆனால் அங்கே உண்மையாக நடப்பது என்ன ? இலங்கையின் இறுதிப் போரில் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்து ஒரு சர்வதேச விசாரணையை நடத்துவதற்கு ஒத்துழைப்பதற்கு முதற்தடவையாக இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளது. உலகில் நீண்ட காலம் நடந்த உள்நாட்டுப் போர் ஒன்று முடிந்து 4 வருடங்கள் ஆகிவிட்டபோதிலும்,...
முதலமைச்சருக்கோ, எனக்கோ கூடிய அளவில் விருப்பு வாக்குகள் அளிக்கப்பட்டமை தனிப்பட்ட நட்பு பாராட்டவல்ல இவர்கள் அனைவரையும் அரவணைத்து, ஏதோ முடிந்ததை செய்வார்கள் என்ற நம்பிக்கையில் அளிக்கப்பட்டவையே. இவ்வாறு வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணசபையினது முதலாவது அமர்வில் தனது கன்னி உரையில் அனைவரையும் மக்களிற்காக ஒன்றிணைய அழைப்பு விடுத்து அவர் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு...
வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தமது கட்டுப்பாட்டில் உள்ள மாகாணத்தில் சட்டத்தையும் ஒழுங்கையும் சமாதானத்தையும் ஏற்படுத்தி தமது பணிகளை சிறப்பாக செய்ய வேண்டியது அவசியமென்று பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தமிழ் தேசியப் பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்களை நேற்று சந்தித்த போது தெரிவித்தார். வடமாகாணசபை குறித்து இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்த கருத்துகள் வருமாறு...
கிளிநொச்சி- கனகபுரம் மாவீரர் துயிலுமில்ல வளாகத்தை துப்புரவு செய்வதற்கு கரைச்சி பிரதேச சபையில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் தமிழ்தேசிய கூட்டமைப்பின் உயர்மட்டத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானம் அல்ல என கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து பிரதேச சபையிடம் கூட்டமைப்பின் உயர்மட்டம் விளக்கம்கோரும் எனவும் தெரிவித்திருக்கின்றன. மேற்படி பிரதேச சபையில் 17உறுப்பினர்களினால் இந்த தீர்மானம் ஏகமனதாக எடுக்கப்பட்டிருந்த நிலையில்,...
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட மாகாணசபை உறுப்பினரும் சுரேஸ் பிரேமச்சந்திரனின் தம்பியுமான க.சர்வேஸ்வரன், முல்லைத்தீவு மாவட்ட மாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி சிவமோகன், வவுனியா மாவட்ட மாகாண சபை உறுப்பினர் எம்.தியாகராஜா ஆகிய மூவரும் இன்று புதன்கிழமை (16.10.13) வவுனியாவில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர். வவுனியா சட்டத்தரணி க.தயாபரன் இவர்களுக்கு சத்தியப்பிரமாணம்...
விவசாயிகள் பயிர்களில் ஏற்படும் நோய்களை அடையாளம் காணவும், அவற்றைக் குணப்படுத்துவதற்கான பரிந்துரைகளைப் பெறவுமென வடமாகாணத்தில் முதற் தடவையாகப் பயிர் மருத்துவமுகாம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் முதலாவது முகாம் கடந்த செவ்வாய்க்கிழமை (15.10.2013) புத்தூர் நிலாவரையில் இடம்பெற்றது. இந்நிகழ்ச்சியில் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மாகாண விவசாயப் பணிப்பாளர் சி.சிவகுமார், யாழ் மாவட்ட விவசாயப் பணிப்பாளர் கி.ஸ்ரீபாலசுந்தரம் ஆகியோரும்,...
Loading posts...
All posts loaded
No more posts
